என்னை பொருத்தவரை மருத்துவர் அய்யாவும் மருத்துவர் சின்னய்யாவும் ஒன்று தான் ...
உங்கள் சுய லாபத்திற்காக இருவரையும் பிரிக்காதீர் ...
கண்ணீருடன் ,
அருள் இராமதாஸ் MLA ,
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ,
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி.
@drramadoss@draramadoss
சிம்பொனி இசை படைத்த இளையராஜாவுக்கு வாழ்த்து!
இசையுலக சாதனைகளின் உச்சமாக லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில் சிம்பொனி இசையை இசைக்கடவுள் இளையராஜா அரங்கேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை உச்சத்தை அடையும் போது அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேற்றுவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள்.!
@ilaiyaraaja
பாட்டாளி மக்கள் கட்சி கிடைக்கும் வாய்ப்பை அழகாக பயன்படுத்கொள்ளும் என்பதுதான் வரலாறு!!!
மாநிலங்களுக்கு The Collection of Statistics Act, 2008 கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் நியாப்பட்டுத்தவும், தமிழகத்தில் உள்ளிட ஒதுக்கீடு கொடுக்கவும், 69% இட ஒதுக்கீடை அதிகரிக்கவும் முடியும்.
இதற்கு நீதிமன்ற தடையேதும் இல்லை, மாறாக உச்ச நீதிமன்றம் மாநிலங்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இட ஒதுக்கீடை நியாப்படுத்தலாம், உள்ளிட ஒதுக்கீடு வழங்கலாம், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாம் என தீர்புகள் வழங்கியுள்ளது.
இப்படி எளிமையாக தெளிவாக உள்ள ஒரு விடையத்தை திமுக அரசும், மு.க. ஸ்டாலினும் வேண்டும் என்றே பொய் சொல்லி தமிழக மக்களை குழப்புவதோடு வஞ்சிக்கின்றனர். இதற்காக ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட தமிழக அரசுக்கு தைரியயோ? திராணியோ? இருக்கின்றதா?
நேற்று நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாமக தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கையையும் சேர்த்து வைத்துள்ளார். இதனை தமிழக ஊடகங்களில் @NewsTamilTV24x7
தவிற வேறு யாரும் செய்தியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி NewsTamilTV24x7.
“….சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்!
இருமொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா? என்பது குறித்து விவாதிப்பதற்கும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிக்கலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்றும் பாமக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”
மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
தலைவர், பாமக.
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு
ரூ.3151 போதாது: டன்னுக்கு குறைந்தது
ரூ.1000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கரும்பு அரவைப் பருவம் இப்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. 9.5விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாக சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,151 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விலை தான். இந்த விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் போதாது.
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,200 வரை செலவாகிறது. அதனுடன் 50% லாபம் மற்றும் போக்குவரத்துச் செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை. ஆனால், உற்பத்தி செலவை விட குறைவாக தொகையை கொள்முதல் விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அறிவிக்கிறது. இது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. 2021&ஆம் ஆண்டில் ரூ.4000 கொள்முதல் விலை வழங்கப்பட்டிருந்தால் இப்போது ரூ.5000 ஆக உயர்ந்திருக்கும். ஆனால், அதை திமுக செயல்படுத்தவில்லை. 2016&ஆம் ஆண்டு வரை ஒரு டன் கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2017&ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குவோம் என்று அறிவித்தது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது இப்போது டன்னுக்கு ரூ.1000 ஆக அதிகரித்திருக்கும். ஆனால், அதையும் செயல்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போல டன்னுக்கு ரூ.215 வீதம் ஊக்கத்தொகை வழங்கி வந்தது. நடப்புப் பருவத்துக்கு அதுவும் வழங்கப்படவில்லை. இதனால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உழவர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் தமிழ்நாட்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், ஊக்கத்தொகையை டன்னுக்கு ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.@CMOTamilnadu
மாவீரன் ஜெ.குரு அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி 1 இன்று - ஜி.கே.மணி
மாவீரன் ஜெ.குரு அவர்களின் பிறந்த நாள் 1.2.2025 இன்று.
நம்முடன் மிக நெருக்கமாக இருந்தவர். அன்பாக நெருங்கி பழகி, எல்லா வேலைத்திட்டங்களையும் கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்துகொண்டு , கலந்துரையாடி வாழ்ந்து வந்தவர். என்றும் மறக்க முடியாத நினைவுகள் ஏராளம். மறைந்த அவரது நினைவைப் போற்றுவோம்.
அவர் சொன்ன வார்த்தைகளை முன்னெடுத்து மக்கள்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் கரத்தை பலப்படுத்துவோம். கனவை நனவாக்க உறுதியேற்போம்.
இன்றைய அரசியல் சூழலில் இந்த மனிதர் எங்களுடன் இருந்து இருத்தல் இப்போது இருப்பதை விட 100 மடங்கு பலமும், தைரியமும் இருந்து இருக்கும்.. தளபதி இல்லாத படை எப்படி இருக்கும் என புரிய வைத்த மாவீரா.. உன் புகழ் வாழ்க.. உன் வீரம் வாழ்க.. 🙏🙏🙏
#AdaniStalinSecretMeet
The question is very simple!!
1. எதற்காக அதானியை உங்கள் வீட்டில் வைத்து பார்த்தீர்கள்?
2. என்ன பேசினீர்கள்?
பதில் அளிக்க ஏன் இவ்வளவு பதட்டம்?
“முரசொலியில் தினம்தோறும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?” - பாமக மாநில பொருளாளர் கேள்வி
#PMK | #Ramadoss | #CMStalin | #Thilagabama
https://t.co/P2I8FFd5a3