அண்ணாமலை என்ற ஒற்றை மனிதனுக்காகவே தமிழ்நாட்டில் பா ஜ க தொண்டர்கள் அல்லாத ஓட்டு கிடைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. நான் என்றும் மோடியின் தொண்டன் ஆனால் தமிழ்நாடு என்று வரும்பொழுது இந்த தலைமை சரி இல்லை எனவே எனது ஆதரவு அண்ணாமலைக்கு மட்டுமே
"அண்ணாமலை IPS பணியிலிருந்து வெளியில் வந்தவர்.. தற்பொழுது வேலையில்லாமல் இருப்பதால், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை தொடங்குகிறார்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
ஜவாஹிருல்லா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான SIMI மற்றும் அல்-உம்மா இயக்கங்களை தோற்றுவித்தவர், பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளால், வேலையில்லாமல் எம்.எல்.ஏ ஆகி விட்டார்!
நாராயணன் திருப்பதி.
பாஜக இன்னும் 30 ஆண்டுகள் மேல் இந்த தேசத்தை வழி நடத்தும்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்பு இருந்த எந்த அரசும் ஏற்படுத்தாது பெரும் வளர்ச்சியை உருவாக்கி நகர்கிறது... அதை குறை சொல்பவர்கள் "மதம்" "மொழி" என்ற வார்த்தைகளில் முடித்து கொள்வர். ஆனால் ஆதாரத்தோடு கேளுங்கள் அவர் வருவதற்கு முன் இந்தியா வந்த பின் இந்தியா என வளர்ச்சி விகிதம் சொல்லும் உண்மையை...
ராணுவ தடவாள ஏற்றுமதி வெறும் 800 கோடி இல்லாத இந்தியாவை இன்று 24,000கோடிக்கு உயர்த்தியது.
உள் நாட்டு ராணுவ தேவைக்கான உற்பத்தியை 40,000 கோடி கிடையாது அவர் வரும் போது. இன்று 1,60,000 கோடி உள் நாட்டில் ராணுவ தேவைக்கான உற்பத்தி 224% வளர்ச்சி இதில் மட்டும்.
PSU 254 துறைகளின் வளர்ச்சியே கேள்விகுறியாக இருந்த நேரம் அவர் ஆட்சிக்கு வந்தார். பொது துறை வங்கிகள் வைத்திருந்த வாராக்கடன் மதிப்பு என்ன இன்று நிலை என்ன? மொத்த பொதுதுறை நிற்வனங்களையும் இணைத்தால் Net worth 9 லட்சம் கோடி அத்தோடு பெரும் கடன் நிர்வாகத் திறமை இல்லாமல் இருந்த இந்த மொத்த கட்டமைப்பையும் இன்று 18 லட்சம் கோடி மதிப்பிற்கு கொண்டு வந்து பல நிறுவனங்களை மேன்படுத்தி லாபமடைய செந்துள்ளது இந்த அரசு.
இந்த அரசுக்கு அல்ல எந்த அரசுக்கு மொழி எது தெரியுமா? வளர்ச்சி... நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களின் வளர்ச்சி. இந்த அரசு வடகிழக்கு மா நிலங்களில் மொழியை வைத்து வெற்றி பெறவில்லை. நக்சல் பாதித்தப் பகுதியில் வளர்ச்சியை முன்னிறுத்தி வளர்ச்சி பெற்றது... அசூர பலத்தோடு இருந்த இடதுசாரி சிந்தனையை மாற்றியது.
நாட்டில் கட்டமைப்பு? என்ன செய்யவில்லை இந்த அரசு - கொஞ்சம் ஒப்பிட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் .
National Highways 60% வளர்ச்சி இது நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது தெரியவில்லை?, Renewable energy துறையில் 76.38 GW இருந்த நாட்டை 275 GW உயர்த்தியவர். Airports கட்டமைப்பு 115% உயர்த்தினார். என்ன airport தேவையான என கேட்பவன் அங்கே போய் நின்று கொண்டு என்ன கூட்டாமா இருக்கு என்ன நிர்வாகம் செய்கிறார்கள் என அப்போதும் குறை சொல்வான். ரயில்வே துறைக்கு 50,000 கோடி அளவில் இருந்த பட்ஜெட் இன்று 3 லட்சம் கோடிக்கு நெருங்குகிறது.. என்ன சதவீதம் சொல்லுங்கள்?
Port capacity துரைமுகங்களின் சரக்கை கையாழும் திறன் மிக மிக குறைவாக இருந்த நாடு இந்தியா... சீனா அந்த ஒன்று தான் உலகம் முழுவதும் அவன் உற்பத்தி பொருட்கள் போய் சேர்வதற்கு காரணம்... இதை இன்று 800 MTPA இருந்து 2,600 MTPA உயர்த்தி நிறுத்தியது யார்? இன்னும் 5 ஆண்டு கழித்து இது இன்னும் 300% வளர்ச்சியில் இருக்கும்...
மொத்த உள் நாட்டின் கட்டமைப்பிற்கு இன்று 12 லட்சம் கோடி செலவிடும் இந்த மோடி அவர்களின் அரசு வரும் போது அது வெறும் 1.4லட்சம் கோடி கூட இல்லை..
இப்படி அரசு மொத்த நிர்வாகத்தில் வளர்ச்சியை எடுத்து ஒவ்வொரு துறையாக நான் பட்டியலிட தயார்...
ஏன் சொல்கிறேன் என்றால் - எது அரசின் மொழி? வளர்ச்சி தான் அரசின் மொழி... இதை இங்கே கொண்டு சேர்த்து நம்பிக்கையை பெருவதில் வேண்டும் என்றால் பின்னடைவு இருக்கலாம் ஒழிய - நரேந்த மோடி தலைமையிலான அரசு 100% நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் வேலை செய்துள்ளது. வேறு எந்த காலத்திலும் இவ்வளவு வேலைகள் நடந்த ஒரு அரசை பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை.
எனவே அடுத்த 30 ஆண்டுகளும் நாட்டை பாஜக வழி நடத்தும் - இது அரசியலை தாண்டி தேசம் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு தனி நபரின் மொழி...
(எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேக வேகமாக அடித்து அப்படியே வெளியிடுகிறேன்.)
-மாரிதாஸ்
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
கட்டிய மனைவி சலிப்படைந்து,
எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு,
சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
மூன்று வேளை உணவில், ஒருவேளை உணவை கொடுத்து,
தின்னு தொலை சனியனே என்று சொல்லும் நிலை வருவதற்க்கு முன் மரணம் வந்து விட வேண்டும்.
உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நீ எல்லாம் இருந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இதற்கு அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.
இந்து மக்கள் கட்சியின் கிரீடத்தில் பொருத்தப்பட்ட மற்றொரு ரத்தினம்....
திருப்பரங்குன்ற தீர்ப்பையடுத்து பெறப்பட்ட இன்னொரு மாபெரும் வெற்றி
இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் Surya Imk சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவின் தீர்ப்பு பின்வருமாறு...
Madras High Court, Bakrid பண்டிகையின் போது பொதுமக்கள் இடங்களில் அல்லது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படாத பகுதிகளில் மாடு அறுக்கப்படக்கூடாது என்று Government of Tamil Nadu அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் GR சுவாமிநாதன் மற்றும் V லக்ஷ்மிநாராயணன் அமர்வு, விலங்குகளை யார் வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அறுக்க முடியாது என்று கூறியது. அறுப்பு நடைபெற வேண்டுமெனில் அது அரசு அங்கீகரித்த slaughterhouse அல்லது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கின் போது நீதிமன்றம்:
> “எந்த இடத்திலும் விருப்பப்படி அறுப்பு செய்ய முடியாது” என்று கூறியது.
சட்டத்தை சரியாக அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர் தாக்கல் செய்தார். அவர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இடங்களில் மாடுகள் மற்றும் கன்றுகள் அறுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், கோயம்புத்தூர் D2 செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த பதிலில் “தற்காலிக இடங்கள்” அறுப்புக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. தற்காலிக கூடாரங்களை எப்படி சட்டபூர்வ slaughter area ஆக கருதலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல், எந்த இடம் அறுப்பிடமாக இருக்க வேண்டும் என்பதை காவல்துறை தீர்மானிக்க முடியாது என்றும், அதற்கு உரிய உள்ளூராட்சி அல்லது சட்டப்படி அதிகாரம் பெற்ற அமைப்புகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
முன்னதாக மனுதாரர், பக்ரீத் காலத்தில் சட்டவிரோத மாடு அறுப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தார். நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் உயர்நீதிமன்றத்தை அணைந்தார்.
நீதிமன்றம் 30 ஜூலை 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முந்தைய உயர்நீதிமன்ற உத்தரவு, 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசாணை மற்றும் Tamil Nadu Urban Local Bodies Rules, 2023 ஆகியவற்றையும் குறிப்பிட்டது.
தமிழ்நாட்டில் மாடு அறுப்புக்கு முழுமையான தடை இல்லை. ஆனால் சட்டத்தில் கூறப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாலே அது அனுமதிக்கப்படும் என்றும், அது குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இறுதியாக, இந்த வழக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த சட்ட விதிகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என கூறி, தலைமைச் செயலாளர் மற்றும் DGP ஆகியோருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது