அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid & Blitz) சாம்பியன் பட்டம் வென்ற திரு.பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், திரு.பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
#CMJosephVijay
தமிழ்த் தேசிய மாநாட்டுக்கென நிதி வழங்கிட விரும்பும் தோழர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கீழ்க் காணும் 'க்யூ ஆர் கோட்' குறியீட்டினைப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@தொல்.திருமாவளவன்.
இலக்கு: தர்மேந்திர பிரதான் மட்டுமல்ல; நீட் ஒழிப்பு தான்!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளை எதிர்த்து தொடங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம், நாடெங்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிரான ஒரு பேரலையாக எழுச்சி பெற்றது.
கரப்பான் பூச்சிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கிண்டலடிக்கப்பட்ட இளைஞர் படை,
CJP அமைப்பாக மாறி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இளைஞர்களின் சமரசமற்ற போராட்டத்தால் ஒன்றிய பாஜக அரசு பணிந்தது. நீக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுபோல தான் முன்னர் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளியை கூட மாற்ற முடியாது என்றார்கள். ஆனால் நடந்தது என்னவென்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மக்களுக்கு பதிலளிக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, இரவெல்லாம் தூக்கம் இழந்து இளைஞர்களுக்கு வீடியோ வெளியிட்டுக் கொண்டுள்ளார்.
நீட் தேர்வு சீரமைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் திரண்டிருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் நமது தங்கை அனிதா பற்ற வைத்திருந்த நீட் ஒழிப்பு எனும் முழக்கம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசும்போது,
தமிழ்நாட்டில் மட்டுல்ல; இந்தியா முழுமைக்கும் நீட் கூடாது”என வலியுறுத்தினார். மாணவர்கள் - இளைஞர்கள் இப்போது உண்மையை உணர தொடங்கியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழிப்பே நிரந்தர தீர்வாக அமையும். அதன் முதல்படியாக கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
வடஇந்திய மாணவர்கள் சொல்வது போல, அமைச்சர் பிரதானுடன் தொடங்கிய இந்த போராட்டம்,
பிரதான் மந்திரி மோடியை நீக்குவதில் தான் முடியும்!
இப்போதாவது, மோடி அரசு நீட்டை
ரத்து செய்து மாணவர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்வது நல்லது.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
25.7.2026
தமிழ்நாடு முழுவதும் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைந்து, விரைந்து சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல்படி, நமது சமூகநீதித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் கோட்டாட்சியராலும் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்
- தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரருக்கு விவரத்தினை தெரிவிக்க வேண்டும்
- சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலிருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நமது துறை சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு
24.07.26
@CMOTamilnadu@ADWDtamilnadu@TN_Tribal_WD@TNDIPRNEWS
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலைப்பாட்டை, நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) முழு மனதுடன் வரவேற்கிறது.
அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதியில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், விசாரணையின் மீது பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணை நோக்கிய @TVKVijayHQ@CMOTamilnadu அரசின் இந்த முடிவு முக்கியமானது.
அதேவேளையில், இந்த விசாரணை எந்தவித அரசியல் அல்லது பிற தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் நடைபெற்று, அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திய அனைத்து ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வழக்கில் நீதி தாமதமின்றி நிலைநாட்டப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகவும், ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும்.
ஜெய் பீம்!
#JusticeForArmstrong #CBI #JaiBhim
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வரிசையில் இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர் அவர்களும் அய்யன் திருவள்ளுவருக்கு 'காவி' பூசி, அவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடும், தமிழர்களும் என்றும் காவிகளையும், அதனை திணிக்க முயலும் சனாதனிகளையும்
துளியும் ஏற்காது புறந்தள்ளுவார்கள் என்பதற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகளே சாட்சியாக உள்ளன.
நமது பொறுப்பு ஆளுநர் அர்லேகர், இங்கு திருவள்ளுவருக்கு காவி பூசுவதற்கு முன்னரே, அவர் ஆளுநராக இருக்கும் கேரள மாநிலத்தில் அரசு விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் 'பாரத மாதா' படத்தை தொடர்ந்து திணித்து வருகிறார். இதனாலேயே முந்தைய இடதுசாரி அரசின் அமைச்சர்கள், ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளுவது, திருவள்ளுவருக்கு காவி பூசுவது போன்ற ஆளுநரின் தமிழர் விரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது. தமிழர் விரோத செயல் மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானதாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியபடி, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் (ஆளுநர் அலுவலகம் உள்பட) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை இடத்தை உறுதி செய்ய வேண்டும். ஆளுநர் அர்லேகர் தமது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு அரசு
31.05.26
@lokbhavan_tn@CMOTamilnadu
இலங்கை மேனாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் இன்று அம்பேத்கர் திடலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ்நாடு நடப்பு அரசியல் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். அவரது வருகைக்கு நன்றி!
உதகமண்டலம் மாவட்டம் வெல்லிங்டன்னில் நடைபெற்ற
இந்திய பாதுகாப்புத் துறையின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்கிற முறையில் பங்கேற்றேன்!
இந்திய பாதுகாப்புத் துறையின் நாடாளுமன்ற குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர், பெங்களூர், நீலகிரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்கிற முறையில் பெங்களூர், நீலகிரி, சென்னை, திருப்பதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றேன்.
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
“ஆணாதிக்க மனநிலையுடனும்
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் விசிகவையும்
இந்திய யூனியன் முஸ்லீக்கையும்
ஆபாச மொழியில் விமர்சித்து இருப்பதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்”
#திமுக துணைப்பொதுச்செயலாளர்
திரு.@dmk_raja
அவர்களுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கண்டனம்.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது.
வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை!
அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் திரு. வன்னி அரசு அவர்கள், சமூக நீதித்துறை அமைச்சராக இன்று தலைமைச் செயலகத்தில் அலுவல் பணியைத் தொடங்கினார்.
எனது அரசியல் ஆசான் - அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் முப்பதாண்டுக்கால அரசியல் போராட்டம் இன்று வெற்றியடைந்திருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் கண்ட சமூகநீதிக் கனவு இன்று சாத்தியமாகியிருக்கிறது.