மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, இசுலாமிய ஆயுள் சிறைவாசிகள் 22 பேரின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன்.
தமிழ்நாடு அரசின் விடுப்பு விதிகள் [G.O. Ms. No.82 - Home (Prison-V) - Framing of Tamil Nadu Prisons - Release on Furlough Rules, 2026] மற்றும் தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 1982, விதி எண். 40-ன்படியும், 'சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் முன்விடுதலை விவகாரத்தில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் அவர்கள் கட்டுப்பட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் 02.04.2026 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், இசுலாமிய சிறைவாசிகளின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை கனிவுடன் ��ரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் துறைசார்ந்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
இவ்வாய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. செஹனாஸ் இலியாஸ், கள்ளக்குறிச்சி பாராளுமன்��� உறுப்பினர் திரு. மலையரசன், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ��விக்குமார், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
மகப்பேறு இறப்பு விகிதம் மாநில சராசரியைவிட அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி இளவயது திருமணங்கள், மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை தடுத்து, பரவலான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். மாவட்டத்தில் அமைந்துள்ள சமூக ந��தித்துறை கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளை மேம்படுத்தவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 10 & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
சிங்கப் பெண்களாக ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் மாவட்டத்தில் மக்கள் நல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதிலும், பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலு���் வெற்றி பெறுவார்கள் என்று வாழ்த்தினேன்.
போர் வெறிப் பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈரான் மீதான போரை உடனே நிறுத்து. பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை கொல்லாதே! ஒன்றிய பாஜக அரசே, ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தும் அநியாயமான போரை கண்டித்திடு இடதுசாரிகள் - விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்!
'ஆயிரம் பிறைகண்ட ஆளுமை'
அய்யா ஆர்என்கே அவர்கள் தமிழினத்தின் பெருமைக்கான அடையாளம். அவர் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பது நமக்கு மேலும் பெருமை கூட்டுவதாகும். எளியோரின் மீட்சிக்கென தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். உழைக்கும்மக்களின் விடுதலைக்கான தத்துவம் இந்திய மண்ணில் கம்யூனிச இயக்கமாக வேர்கொண்ட நாளும் இவர் பிறந்த நாளும் ஒன்றே என்னும் பெருமையுட���த்து இவரது வாழ்வு.
நூற்றியோராவது பிறந்த நாளைக்காணும் அய்யாவுக்கு நன்றிபெருக்குடன் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
#நல்லக்கண்ணு #RNK
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் அத்திட்டம் காந்தியின் பெயரில் இருப்பதால் அதனை ஏற்கவியலாத நிலையில் அத்திட்டத்தின் பெயரை மாற்றவேண்டும் என்கிற உள்நோக்கத்துடனும் இன���று VB-G RAM G என்னும் புதிய மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினர். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அத்துடன், இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்��ில் வெளிநடப்பு செய்யப்பட்டது. பின்னர், காந்திசிலை வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாகச் சென்று காந்தி சிலை முன்பாக சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
பாஜக அரசின் அற்ப அரசியலைக் கண்டித்துக் குரலெழுப்பினோம்.
அய்யா,
உன் பிரிவால் கலங்கினாலும்
எங்களின் கலங்கரை விளக்காய்
நீங்கள் காட்டிய பாதையில்
புரட்சியாளர் அம்பேத்கரின் தொடர்ச்சி மேன்மைமிகு தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் களமாடி நீங்கள் காணவிழைந்த சமத்துவ உலகை உருவாக்கிடுவ���ம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் மறைந்த தோழர் உஞ்சைஅரசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள உஞ்சை விடுதியில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
கரூர் கொடுந்துயரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கரூரில் தலா ரூ.50,000 ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினோம்.
மாண்புமிகு மேனாள் அமைச்சர் திமுக மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி அவர்கள் உடனிருந்தார்.
கரூர் கொடுந்துயரம்:
---------------------
கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!
உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
-------------------------------------------
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
விஜய் அவர்���ளின் பரப்புரை பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பா���்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
��த்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் .காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்.
@CMOTamilnadu @mkstalin @actorvijay
தலைநகரில் தொடரும் துப்புரவு பணியாளர்களின் உரிமைப் போராட்டம்.
தமிழக அரசே தாயுள்ளத்துடன் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்று.
வீதியை பெருக்கிய எம��� உறவுகளை குப்பையென கருதும் மாநகராட்சி ஆணையரை வெளியேற்று.
பார்வையாளராய் கடந்து போக
இது காலில் தைத்த முள் அல்ல. !
சிறுத்தைகளுக்கு இது கண்ணில் தைத்த முள்!
மாநகராட்சி நிர்வாகமே…
அர்ச்சகர்கள் அரசு ஊழியர்களாக இருக்கும் போது ….
தூய்மைப்பணியாளர்கள்
அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா?
@CMOTamilnadu
@mkstalin
@Udhaystalin
@thirumaofficial
என் தலைவர்
நாளை வெளிவரும் ஜூனியர் விகடனில்
‘என் தலைவர் திருமாவளவன்’
என்னும் தலைப்பில் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் குறித்து நான் எழுதியிருக்கும் கட்டுரை வெளியாகிறது.
என் தலைவர் என்ற தலைப்பில் தொடர்ந்து பலர் எழுத உள்ளனர். அந்தத் தொடரின் ம���தல் கட்டுரை இது.
தவறவிடாதீர்கள்