கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த, கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாளான இன்று பதிவிட்ட சமூக வலைதள பதிவு.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.
பிரான்ஸ் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில், தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் அசத்தலாக விளையாடி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு, மக்கள் நீதி மய்யம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. C.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்.
@CMOTamilnadu#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
தொழிற்சாலைகளின் அலட்சியப் போக்கிற்கு அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பலியாவதை இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது !
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்துக்கு காரணமான தொழிற்சாலை மீது அரசு உடனடியாக கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை (Health and Safety Department) அறிவுறுத்தியுள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் இந்த நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இதுபோன்ற அபாயகரமான தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்பு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அமைச்சர் @Farvace_offl நேரில் சென்று ஆய்வு செய்வது மிக முக்கியமானது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு/தொழிற்சாலை முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவும் மாண்புமிகு @Cmotamilnadu அவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்
என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிக்கிறது.
#Makkalneedhimaiam
#kamalhaasan_MP
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைவதுடன்,
உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி. @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.
அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை.
இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர்.
வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @MouryaMNM
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக,
தமிழ்நாடு சட்டமன்றத்தில், தனித்தீர்மானத்தை கொண்டு வந்த, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும்,
ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் பாராட்டுக்கள்.
@CMOTamilnadu
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu