2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் நிகழ்த்தும் சுற்றுப்பயணத்தின்
மாநில மற்றும் தொகுதி பிரச்சார பொறுப்பாளர்கள் விபரம்.
@arivalayam@DMKITwing
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் நிகழ்த்தும் சுற்றுப்பயணத்தின்
மாநில மற்றும் தொகுதி பிரச்சார பொறுப்பாளர்கள் விபரம்.
@arivalayam@DMKITwing
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
செம்மஞ்சள் பிழம்பு
எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார்.
இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார்.
முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது.
நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள்.
நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள்.
பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது.
ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு.
அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது.
கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும்.
அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது.
அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான்.
ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது.
'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்.
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.'
(விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்)
அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது..
நான் ஆசியாவின் பக்கம்.
வாழ்க இந்தியா.
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு அவசரக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் தலைமையில்,
நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு அவசரக் கூட்டம் கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள், திரு. R.தங்கவேலு @Thangavelukovai அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், கட்சியின் பொருளாளர் திரு. சந்திரசேகர் அவர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முதலானோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர்கள், எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
காந்தியடிகளை மறவோம்!
தமிழ்நாட்டுக்குள் மதவாத சக்திகளை அனுமதியோம்!
மேலாடை துறந்து, அரையாடைக்கு மாறும் காந்தியடிகளின் மனமாற்றத்திற்கு வித்திட்ட மதுரை மண்ணில் இருந்து 'காந்தியை மறவோம்' என மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டி முழங்கியுள்ள சகோதரர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் பாராட்டுகள்!
மகாத்மாவை மதவெறிக்கு இழந்துவிட்டோம். மறதி எனும் தேசிய வியாதியால் அவரது மதநல்லிணக்கக் கொள்கைகளையும் மக்கள் இழந்துவிடக் கூடாது என்ற அவரது உயர்ந்த நோக்கம் நிச்சயம் வெற்றி பெறும்.
பாசிசம் வீழும்; காந்தியப் பாதைக்கு இந்தியா திரும்பும்!
@kamalpanpattu@maiamofficial #மறவோம்_காந்தி
ஓர் அரசியல்வாதியாக அல்ல, கலைஞனாகவும் அல்ல, இந்த நாட்டையும் இதன் முழு அர்த்தத்திலான ஜனநாயகத்தையும் நேசிக்கும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சும் சக இந்தியக் குடிமகனாக இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன் - @ikamalhaasan#KamalHaasan_MP#RiseUpIndia#VoteChori@maiamofficial
தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதை முன்னிட்டு Maiam IT Team சார்பாக மாலை மலர் சென்னை, திருவள்ளூர்,காஞ்சி மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பிரதிகளில் முழு பக்கம் விளம்பரம் செய்யப்பட்டது
#கமல்ஹாசன்_எனும்_நான்#KamalHaasan_MP@ikamalhaasan@maiamofficial
இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது…
@maiamofficial@ikamalhaasan
மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்ற திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். சமுதாயம் மற்றும் மக்களுக்கான அவர் குரல் இனி பாராளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள். @ikamalhaasan
‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
இந்தத் தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன்.
@maiamofficial