விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை.
ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும்.
ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
நேத்து சென்னையில அவ்வளவு பெரிய கூட்டம் நடந்திருக்கு! ஆனா ஒரு டிவி சேனல்ல கூட செய்தி காட்டல... ஏன் இப்படி பண்றாங்க? 🤔
இங்க என்ன பேசுறாங்கன்றதை விட, யாரு பேசுறாங்கன்றதுதான் முக்கியம்! இதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு! 🤫🔥
அண்ணன் மேல பரப்பப்படுற நெகட்டிவ் கதைகளுக்கு பின்னாடி இருக்குற அரசியல் பின்னணி என்ன?
முழு வீடியோ லிங்க்!👇
https://t.co/m4I1QJoAnI
#தமிழகம்2030 #சீமான் #SeemanSpeech #NTK #VaathiWebSeries #TamilPolitics #MediaSathi
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
மாமனிதர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவேந்தல் நிகழ்வு.
வைகாசி 23 | 06-06-2026
இடம்: தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் - சென்னை.
புகழ்வணக்க உரை: https://t.co/pchqBTIbtS
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act!
The arrest of our beloved brother, Hip Hop Sangeethsan, by the Sri Lankan racist state under the Prevention of Terrorism Act — for expressing through his songs the Tamil Eelam homeland, the glorious history of its liberation struggle, the martyrs who sacrificed their lives for the homeland’s freedom, and the cultural greatness of the Tamil people — is strongly condemnable.
The Sri Lankan government, which arrogantly boasted that it had completely eradicated terrorism, is now terrified of a single individual’s song even years after the armed struggle has fallen silent. If singing a song in a temple is considered deadly terrorism, how can Tamils live in peace under the Sri Lankan state?
Is honouring the valour of our departed ancestors and remembering their sacrifices considered terrorism? Is this what Marx and Engels taught the Janatha Vimukthi Peramuna (JVP) government, which calls itself a communist government under Anura Kumara’s leadership? Is this the path shown to them by Che Guevara, Fidel Castro, Lenin, and Ho Chi Minh?If Tamils remembering their liberation struggle ancestors is terrorism, then is the JVP remembering its own leaders who were hunted down and massacred by previous Sri Lankan governments also terrorism? Or not?Is this the ethnic harmony and national unity practised by the JVP government, which claims to follow leftist ideology? The arrest of Thambi Sangeethsan has torn off the mask of the JVP party, which has been practising racism for decades under a leftist guise. This arrest once again reveals to the world that the events conducted by the JVP government — such as permitting remembrance on Maaveerar Naal (Martyrs’ Day) — were all mere dramas, and that no matter which government comes to power in Sri Lanka, it will not deviate even an atom from Sinhalese racist policy.
What answer will the international countries, which once destroyed the armed Tamil liberation struggle claiming it was an obstacle to peace, give now? Is this degraded condition of the Tamil people the “peace” that the world countries desired? If even singing a song is treated as an act of terrorism under the Prevention of Terrorism Act, how can Tamils ever live together with Sinhalese? The United Nations and the international community must now recognise the racist, monstrous face of Sri Lanka and stand in support of the Tamil people’s liberation.
Tamil Members of Parliament in the Sri Lankan Parliament must raise their voices demanding the release of Thambi Sangeethsan.There is no greater racist atrocity than preventing people from honouring their own ancestors. There is no worse form of slavery than denying permission for arts, including songs, by labelling them as terrorism.Therefore, I strongly demand that the Sri Lankan racist state immediately release Thambi Sangeethsan, who has been arrested under the Prevention of Terrorism Act.
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப்பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, இந்திய ஒன்றிய அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNMOA) மாநிலம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பதில் அன்றைய அதிமுக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, அரசு மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் (Incentive Marks) முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், அது அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.
அதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு (MCI) எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மருத்துவர் பெருமக்கள் இழந்த தங்கள் உரிமையை மீண்டும் பெற்று வந்தனர்.
ஆனால் 2025 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் 151 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் கடந்த 29.5.26 அன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின் ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவ கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் தற்போது சாதித்துள்ளது. ‘நீட்’ மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிப்பதென்பது மாநில உரிமையை பறிக்கும் அப்பட்டமான சூழ்ச்சியாகும்.
தமிழ்நாடு அரசு தன் வசம் உள்ள அரசு மருத்துவர்களுக்கான உயர் மருத்துவ இடங்களை தானே நிரப்பலாம் என்று உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், ஒன்றிய அரசு இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் மாநில இடங்களை கைப்பற்ற முயல்வது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கொடுஞ்செயலாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டின் பொதுசுகாதார கட்டமைப்பையும், ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவம் பெறும் உரிமையையும் நேரடியாக பாதிக்கும். மேகதாது அணைபோல, அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் தவெக அரசு மெத்தனமாக இருப்பது தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் சிறிதும் பொறுப்பற்றச் செயலாகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியது முதலாக அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் நீட் தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. எனவே நீட் தேர்வு மதிபெண்ணை அடிப்படையாக கொண்டு உயர் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பறிப்பது அரசு மருத்துவப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
ஆகவே, நம்முடைய அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Arappor காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது. கடந்த முறை போலி பேராசிரியர்கள் பிடிபட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறப்போர் அவர்களை கடைசி வர பெயர் சொல்லாமல் காத்தது ஏன்?
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி