மக்கள் நீதி மய்யம் நிறுவனர் தலைவர்
#கமல்ஹாசன் MP
அவர்கள்
டில்லியில்,இன்று
இந்திய சர்வதேச மையத்தில்
'இந்தியாவின் எதிர்காலம், பற்றிய
பேனல் குழு விவாதத்தை தலைமை
தாங்குகிறார்.
#MNMinDelhi#KamalHaasan_MP@maiamofficial
என் அன்புத் தம்பி @Siva_Kartikeyan அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.
“எங்கெல்லாம் அராஜகம் நடந்து அதற்கு நீதி கிடைத்திருக்கிறதோ அங்கெல்லாம் நினைவுச் சின்னத்தை எழுப்ப வேண்டும். தலைவர்களைவிட மக்கள் கேட்டு வாங்கும் நீதி முக்கியமானது”- ‘வாச்சாத்தி’ ஆவணப் படத்தை பார்த்தப்பின் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
#Vachathi | #Kamalhaasan
ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன்.
Deeply saddened by the tragic air crash in Baramati that claimed the life of Shri Ajit Pawar Ji, Hon’ble Deputy Chief Minister of Maharashtra, and others. My condolences to my colleague Smt. @SunetraA_Pawar and to the families of all those who lost their lives. The nation mourns.
பெயர் சொன்னாலே நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அவர் மடியில் நானமர்ந்த நினைவுகள் பூ மலர்த்தும். கலையில், அரசியலில், நிர்வாகத்தில் அவர் ஈட்டிய அபிமான உள்ளங்கள் இன்றைக்கும் தொடர்ந்திருக்கும். பொன்மனச் செம்மல் எனக் கொண்டாடும் குரலிருக்கும். எம்ஜிஆர். இன்று பிறந்த நாள். அவர் நாமம் வாழ்க.
‘ஏர்பரந்த வயல்; நீர்பரந்த செறு; நெல்மலிந்த மனை; பொன்மலிந்த மறுகு ’ என நாட்டை தானியப்பொன்னால் தயை செய்து காக்கும் உழவர் நாளில் அவர்தமை வாழ்த்தி மரியாதை செய்வோம்.
On her birthday, I wish Mamata Banerjee Ji, good health and strength. Forged by decades of public service and fourteen years at the helm of West Bengal, she has stood as a steadfast defender of the Constitution and the plural idea of India.
Another year ahead . Another chance to become better kinder and wiser than the year before . Excellence is a work in progress. Have an excellent new year . Every tomorrow is a day to be seized . Let all your pursuits make you happy .
“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்” - என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.
டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்.
பாவேந்தரின் பரம்பரையாய் மரபுக்கவிதை செய்வதில் தொடங்கி, வானம்பாடி இயக்கத்தோடு நவகவிதையில் இயங்கி, அதன் பிறகும் தன் ஓயாத் தேடலால் ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக்கூ என விதவிதமான கவிதை வடிவங்களில் தொடர்ந்து படைப்புகளை எழுதிவந்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நிறைவாழ்வு வாழ்ந்து அவ்வாழ்வு முழுதும் நிறைவான ஏராளம் தமிழ் நூல்கள் தந்து மொழிக்குப் பெரும் பங்காற்றிய பெருமகனார் இன்று நிறைவெய்தியிருக்கிறார்.
என் இதயமார்ந்த இரங்கல்கள்.
Deeply saddened by the tragic loss of Wing Commander Namansh Syal, who gave his life while showcasing the pride of our Indian Air Force, the Tejas. A brave son of India taken far too soon. My heartfelt condolences to his family and loved ones. India stands with you in this moment of immeasurable grief.