இன்று
பத்மஶ்ரீ கமல்ஹாசன் எம் பி
அவர்களைச் சந்தித்து எனது நான்கு நூல்களை அளித்த தருணம்.
1. சொல்லேர் உழவு
2. பெண்ணே நீயே வெற்றிக்கு வழி
3. மகிழ்ச்சியாக வாழ எளிய வழிகள்
4. ராசி அழகப்பன் கவிதைகள்- சமூகப்பார்வை
#மய்யம்#கமல்ஹாசன்#ராசிஅழகப்பன்#கட்டுரைகள்
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
Mr. @ikamalhaasan choosing to let go of private charters and luxury travel to take an economy flight and head straight to the shoot sets, at a time when the industry is navigating tough realities, this says everything about the legend he is.
A first step towards greater things to happen in cinema.
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்."
இது தான் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள்.
A voice from Centrist...
#கமல்ஹாசன்_MP#KamalHaasan_MP#TVKVijay