பழனி மடம் நிலப் பதிவு விவகாரம்: நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட துணைப் பதிவாளர் எங்களிடம் தெரிவித்துள்ளார் என தமிழக அமைச்சர் கூறினார் | சென்னை செய்திகள் - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
https://t.co/D9XM7rd8cW
கல்விக்கூடங்கள் இன்று தவெக-வின் அரசியல் விளையாட்டு மைதானங்களாக மாறியதன் விளைவுதான், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியிருக்கும் இந்த அவலம்!
பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர் மனதை நஞ்சாக்கும் உங்கள் அரசியல் அராஜகத்தால் இன்று ஒரு தலித் மாற்றுத்திறனாளி மாணவனின் உயிர் பலிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கல்வி கற்க வேண்டிய இடத்தில் கத்தி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், 'தூய சக்தி' என்று மேடை போட்டுப் பேசும் முதலமைச்சர் விஜய், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையேனும் பேசியதுண்டா?
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பள்ளி வளாகத்திற்குள்ளேயே தாக்குதல் நடக்கும் அளவிற்கு உங்கள் நிர்வாகம் சீரழிந்து கிடப்பது, உங்கள் அரசின் கையாலாகாத்தனத்தின் அப்பட்டமான சாட்சி
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும்.
பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் . Uncle!
வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
அடக்குமுறைக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள்!
பொய்ச்செய்திகள், போலிச்செய்திகள், அவதூறுகள், கட்டுக்கதைகள், வன்மங்கள், வசைகள் என தமிழ்நாட்டு அரசியலில் இதற்கு முன் யாரும் செய்திராத அருவருப்புப் பிரச்சாரத்தை செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள், நாற்பதே நாட்களில் தங்கள் நாடகம் அம்பலமாகி, இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக GEN Z தலைமுறை மத்தியில் குட்டு உடைந்து தாங்கள் அம்பலமாகிறோம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் பதற்றத்தில் தடுமாறுகின்றனர்.
அந்த தடுமாற்றங்களுக்கு காரணம் GEN Z DMK. சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, நெல்லை, நாமக்கல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சேலம், பெரம்பலூர் என தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு GEN Z DMK கூட்டங்களை நடத்தி, தங்களின் அரசியல் புரிதலை, கொள்கைத்தெளிவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாற்பது நாள் ஆட்சியின் அவலங்களைத் தோலுரித்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மீது இன்றைய ஆட்சியாளர்கள் ஒட்டிய ஸ்டிக்கர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலை- கொள்ளைகள் என தறிகெட்டுத் தவிக்கும் சட்டம் - ஒழுங்கு நிலைமையும், விவசாயிகள் போராட்டம், மின்வெட்டுப் பிரச்சனை என நிர்வாகத் திறனில்லாமல் விழி பிதுங்கி நிற்கும் அரசு நிர்வாகத்தின் அவலங்களையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
‘விசிலடிக்கத் தெரிந்தால் போதும், பேனருக்கு பால் அபிஷேகம் செய்யத் தெரிந்தால் போதும் என்று பழக்கப்படுத்தி வைத்திருந்தோமே, அந்த GEN Z தலைமுறையில் இருந்தே அறிவார்ந்த இளைஞர்கள் வெளி வந்துவிட்டார்களே? நமக்கு எதிராகத் திரும்பிவிட்டார்களே’ என்று பதறிப்போய் இருக்கிறது தவெக ஆட்சி. அதன்காரணமாகத்தான் GEN Z DMK கூட்டங்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பானந்தம் என்னும் கழக இளைஞரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கிறது ஆளுங்கட்சியின் காவல்துறை. ஏற்கெனவே GEN Z DMK கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கனிஷ்கர் என்ற இளைஞரை, த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் வைத்து கடுமையாகத் தாக்கினர். அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கூட தரப்படவில்லை, தாக்கிய ரவுடிகளும் இந்த நொடி வரை கைது செய்யப்படவில்லை.
கொளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த GEN Z DMK முதல் கூட்டத்தையும் நடத்த விடாமல், காவல்துறையை ஏவி முடக்க முயன்று, கடைசியில் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் எழுச்சியோடு நடைபெற்றது அக்கூட்டம். அந்த எழுச்சியின் உந்துதல்தான் தமிழ்நாடு முழுவதும் GEN Z DMK கூட்டங்கள் காட்டுத்தீ போல பரவக் காரணமாக இருந்தது.
அவதூறுகளால் ஆட்சியமைத்தவர்களுக்கு அவர்களின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது என்கிற பதற்றம்தான் இத்தகைய கைது முயற்சிகளும், காட்டுமிராண்டித் தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் என்பது தெள்ளத்தெளிவாகக் காட்டிக்கொடுக்கிறது. ரீல்ஸ் முதலமைச்சரே இந்த அராஜக நடவடிக்கைகளை விட்டு விடுங்கள். இந்த அடக்குமுறைகளுக்கு அவர்கள் அஞ்சி விட மாட்டார்கள். இதற்கெல்லாம் அஞ்சி ஒளிந்துவிட மாட்டார்கள், கரூரில் காணாமல் போன உங்களைப் போல...
#GenZ_DMK #FreeSpeech #DMK
முதலமைச்சர் விஜய் அவர்களே, உங்களை கேள்வி கேட்கும் ஒரு இளைஞரை தடுத்தால் ஒரு லட்சம் இளைஞர்கள் கேள்வி கேட்க வருவார்கள். உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள்.
- கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள்
#TVKFails