இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்��்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
நமது 'We The Leaders’ சார்பாக, தூத்துக்குடியில் பொட்டுக்களைப் பயன்படுத்தி, போதைக்கு எதிரான விழிப்புணர்வை முன்னிறுத்தி, உலகிலேயே மிகப்பெரிய மொசைக் எனும் விழிப்புணர்வு படைப்பை உருவாக்கி உள்ளோம்.
இந்த விழிப்புணர்வு படைப்பை World Records Union உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இ��ு மக்களுக்கான இயக்கம்!
என் குருவின் இறுதி யாத்திரையின் போது….
என்னிடம் மைக் நீட்டியவர்களிடம் “இங்கு வேண்டாம் ,அமைதியாக ஒத்துழையுங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கிறேன்” என்று கூறியதால் ஒரே நேரத்தில் பல பதிவானது. நான் பேட்டி கொடுக்காததில் பலருக்கு வருத்தம��.
நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள்.
என்ன செய்வது?
பகிராவிட்டாலும் ….
“நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்”
நிற்காதே மனம். சற்று அழுது ஓயட்டும்.
கடந்த 20 வருடங்களாக என் குருவின் புகைப்படத்திற்கு பதில் ஒரு இயக்குனர் நாற்காலியை தொட்டு வணங்கி வேலையைத் தொடங்குவேன்.
அதாவது உருவம் தவிர்த்தே அவரை தொழுதேன்
இ��்போது அதுவே விதியாய் ….
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேர��்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்ட��க் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்க���றது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரை���ும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் எ��்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்து��், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகள��� நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குற��த்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார் ? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களைப் பாதுகாக்கப் போகிறார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் பொ��ுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விழிப்புணர்வு எனும் பெயரில் ரீல்ஸ் போட முடியுமே தவிர, குழந்தைகள் ��ற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கிறது.
எனவே, ஆலந்தூர் பகுதியில் பெண்ணின் வீடு புகுந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அத்துமீறல்களில் ஈடுபடும் தவெகவினர் மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்க��றுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி.
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அண்ணாமலையாரின்
#WTL இயக்கத்தில் இணைந்த 17,21,236 பேர்களில்
வயது வாரியாக வெளியிட்ட WTL
Gen Z 37.7% இளைஞர்கள்
🔥🔥🔥
இதுவரை
தமிழகத்தில் எந்த கட்சியும் வெளியிடாத புள்ளி விவரம்
வயது வாரியாக வெளியிட்டது இதுதான் முதல் தடவை👍🏻
@WTLFoundation@annamalai_k