சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 5-ல் நம் பானை சின்னம்! வாக்களிப்பீர் பானை! நமது வெற்றிச் சின்னம் பானை!
#Vote4INDIA
#நாடாளுமன்றத்தில்_திருமா
குடியுரிமை மசோதா திருத்த சட்ட மசோதா
"சிறுபான்மையினருக்கு இடமில்லை என்பது வெளிப்படையான பாசிசத்தின் உச்சம்"
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
அன்பின் பெருக்கம் அருள்.
அன்பின் பேராழம் காதல்.
காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை.
#HappyValentinesDay
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே @kharge அவர்களை இன்று புதுதில்லியில் சந்தித்து சனவரி 26 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினேன்.
#வெல்லும்_சனநாயகம்_மாநாடு#DemocracyWins
தோழர்களே, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்.
புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் நேர்ந்த பாதிப்புகளையொட்டி, வெல்லும் சனநாயகம் மாநாட்டினை சனவரி 26 அன்று நடத்துவதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் இன்னும் 24 நாட்களே உள்ளன. ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஓரிரு நாட்கள் கழிந்திருக்கும். அடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிக்கிறது. அதனையொட்டி சில நாட்களைச் செலவிட நேரும். எனவே, நமக்கு மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க இரு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
எனவே,
* மாநாட்டுப் பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு செயலாற்றிட வேண்டும்.
* விளம்பரப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்திட வேண்டும்.
* வண்டிகளை முன்பதிவு செய்திட வேண்டும்.
* சமூக ஊடகங்களில் பரப்புரைகளைத் தீவிரப்படுத்திட வேண்டும்.
* மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் க்யூ.ஆர். கோட் மூலம் நிதியைச் செலுத்துவதற்கான பணிகளையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளவேண்டும். தாங்களும் செலுத்த வேண்டும் பிற பொறுப்பாளர்களையும் செலுத்திட ஊக்கப்படுத்த வேண்டும். கட்சி சார்பற்ற ஆதரவாளர்களை அணுகி இந்த க்யூ. ஆர். கோட் மூலமாக கொடையளிக்க செய்தல் வேண்டும்.
* துணை நிலை அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு நாளைத் தேர்வு செய்து அந்த ஒரே நாளில் தமிழ்நாடு தழுவிய அளவில் நிதியைச் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, சனவரி 05 அன்று இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் நிதி செலுத்தலாம். அப்படி ஒவ்வொரு அமைப்பும் ஒரு நாளை அறிவித்து அன்றைக்கு நிதியளிக்கலாம். கட்சி சார்பற்றவர்களையும் கொடையளிக்கச் செய்யலாம். கீழே உள்ள குறியீட்டினைப் பயன்படுத்திட வேண்டும்.
வெகுண்டெழும் சிறுத்தைகள்!
வெல்லும் சனநாயகம்!
- தொல். திருமாவளவன்.
திசம்பர் 29 அன்று நடைபெறவுள்ள #வெல்லும்_சனநாயகம் மாநாட்டுக்கான மேடை அமைக்கும் திடலை
இரவு 7.30 மணியளவில் பார்வையிட்டோம். மிக சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன.
தோழர்கள் மக்களைத் திரட்டும் பணிகள், விளம்பரப் பணிகள் ஆகியவற்றை மேலும் தீவிரப்படுத்திட வேண்டுகிறேன்.
#VCKConference. #December_29
'தேசத்தின் குரல்' என
மேதகு பிரபாகரன் அவர்களால் சிறப்பிக்கப்பட்ட ஈழவிடுதலை அரசியல் களத்தின் மூத்த தலைவர் திரு. ஆன்டன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
#AntonBalasingam#MemorialDay