ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️
எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம்.
Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு.
தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨
பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
இது வெறும் registration அறிவிப்பு அல்ல… நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.
எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏
HST Wealth Management and Research Advisors Pvt Ltd SEBI Registered Research Analyst Reg No: INH000028255
from Salem to 🇮🇳🌎
எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம்.
மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம்.
“பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.”
#HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
As promsied:
ரிலையன்ஸ், டாடா மாதிரி பெரிய பங்குகளை எல்லாரும் பேசுறாங்க.
ஆனா இந்தியாவில் பல மடங்கு வளர்ந்த பல பங்குகள் ஆரம்பத்தில் யாரும் கவனிக்காத small caps தான்.
நான் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்த
அடுத்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி தரக்கூடிய 12 பங்குகள் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளேன்.
முழு analysis இங்கே 👇
RT for reach friends Its my multiple days effort and study
https://t.co/wIgMbbqYVG
படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
இந்த post உங்களுக்கு useful என்று தோன்றினால் RT செய்து மற்றவர்களுக்கும் share செய்யுங்கள் 🙏
#StockMarketIndia #SmallCaps #Investing
SEBI புதிய விதி உங்கள் Mutual Fund இனி முன்பு போல் இருக்காது! ஏன் ? இந்த ரூல் முன்னாடி நீங்க எல்லார் கிட்டயும் எந்த Mutual Fund எந்த ஸ்கீம் னு கேட்டுதே இருந்திங்களா? அப்ப இது உங்களுக்கு ஒரு பெஸ்ட் நியூஸ் 😁
என்ன நடந்துச்சு இதுவரை?
நம்ம ஊர்ல ஒரு பழக்கம் இருக்கு
கடையில போய் “என்னன்னா விக்கிறீங்க?” கேட்டா… அவங்க விரும்பினதை சொல்வாங்க.
Mutual Fund-லயும் இதே நடந்துச்சு.
AMC-கள் தங்களுக்கு சாதகமா பெயர் வச்சு, போர்ட்ஃபோலியோ போட்டு, Investor-கிட்ட விற்பனை பண்ணுச்சு.
SEBI இப்ப “இனி அப்படி இல்ல. Rules follow பண்ணு.” சொல்றாங்க
புதிய விதி என்னன்னா Super Simple-ஆ சொல்றேன்
Equity Funds பங்கு சந்தை திட்டங்கள்
இதுல 13 வகை. முக்கியமானது
Large Cap Fund
→ பெரிய நிறுவனங்கள் மட்டுமே
குறைஞ்சது 80% போகணும்
→ TCS, Infosys, Reliance மாதிரி நிறுவனங்கள்
→ Safe but slow growth
Mid Cap Fund
→ வளரும் நிறுவனங்கள்
→ குறைஞ்சது 65%
→ Medium risk, medium reward
Small Cap Fund
→ சின்ன நிறுவனங்கள்
→ குறைஞ்சது 65%
→ High risk, high reward 😅
Flexi Cap Fund
→ Fund Manager விரும்பினபடி எங்கும் போடலாம்
→ குறைஞ்சது 65% Equity
→ Manager திறமையே இங்க முக்கியம்
Sectoral / Thematic Fund
→ ஒரே ஒரு sector மட்டுமே IT, Pharma, Banking
→ 80% அந்த sector-ல போகணும்
→ ஒரே basket-ல முட்டை வேண்டாம்னு சொல்வாங்க
Debt Funds
பாதுகாப்பான திட்டங்கள்
பங்கு சந்தை வேண்டாம்னு சொல்றவங்களுக்கு இது.
Overnight Fund
→ ஒரே ஒரு நாள் மட்டுமே கடன் கொடுக்கும்
→ உங்க பணம் நாளைக்கே திரும்பும்
→ Bank FD-விட கொஞ்சம் better
Liquid Fund
→ 91 நாட்கள் வரை
→ Emergency fund வச்சிருக்கவங்களுக்கு perfect
→ ATM மாதிரி எப்பவும் எடுக்கலாம்
Gilt Fund
→ நேரடியா Government-கிட்ட கடன் கொடுக்கும்
→ அரசாங்கம் தோத்தா மட்டுமே நஷ்டம் 😄
→ மிகவும் பாதுகாப்பானது
Credit Risk Fund
→ AA மற்றும் கீழே உள்ள நிறுவன பத்திரங்கள்
→ கொஞ்சம் ஆபத்து, கொஞ்சம் அதிக returns
→ இதுல கவனமா இருங்க
Hybrid Funds
Equity-யும் வேணும், safety-யும் வேணும்னு சொல்றவங்களுக்கு
Conservative Hybrid
→ 75–90% Debt + 10–25% Equity
→ அம்மா மாதிரி safe-ஆ வச்சிருப்பாங்க 😄
Aggressive Hybrid
→ 65–80% Equity + 20–35% Debt
→ கொஞ்சம் துணிச்சல், கொஞ்சம் பாதுகாப்பு
Dynamic Asset Allocation
→ சந்தை நல்லா இருந்தா Equity அதிகம்
→ சந்தை கஷ்டமா இருந்தா Debt அதிகம்
→ Fund Manager-ஓட Decision
Life Cycle Fund
இதுதான் Game Changer!
இது புதுசா வந்திருக்கு. இதை புரிஞ்சுக்கோங்க.
உங்களுக்கு வயசு 25. Retirement 2055-ல.
Life Cycle Fund 2055 வாங்குங்க அவ்ளோதான்.
இப்போ (30 வருஷம் இருக்கு):
Equity 65–95% → Maximum growth
2045-ல (10 வருஷம் இருக்கு):
Equity 50–65% → Balance ஆகும்
2054-ல (1 வருஷம் இருக்கு):
Equity 5–20% → பணம் பாதுகாப்பா இருக்கும்
நீங்க எதுவும் செய்யவேண்டாம் Fund தானா மாறும்!
இது SIP போட்டு மறந்துடுங்க type முதலீடு 🙌
இந்த விதியோட 3 Super Important Points
Point 1 Portfolio Overlap Rule:
ஒரே AMC-ல இரண்டு funds இருந்தா…
இரண்டிலயும் 50%-க்கு மேல் ஒரே பங்குகள் இருந்தா…
SEBI சொல்லுவது “ஒண்ணை மாத்து!”
ஏன்னா நீங்க இரண்டு fund வாங்கினாலும் ஒண்ணே வாங்கின மாதிரிதான் ஆகும். அது Investor-க்கு நஷ்டம்.
Point 2 True-to-Label Rule:
“Super Alpha Growth Opportunity Fund” இப்படிப்பட்ட பேர்கள் இனி வராது.
பேரே சொல்லணும் என்ன செய்றோம்னு.
Large Cap Fund → Large Cap Fund
அவ்ளோதான். Extra drama வேண்டாம். 😂
Point 3 Solution-Oriented Schemes நிறுத்தம்
“Children’s Fund”, “Retirement Fund” இந்த category நிறுத்தம்.
ஏன்னா இதே வேலையை Life Cycle Fund இப்போ பண்ணும். Better structure-ல.
இதனால உங்களுக்கு என்ன லாபம்?
முன்பு:
∙5 AMC-ல Large Cap Fund இருக்கும்
∙ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்
∙எது better-ன்னே தெரியாது
இப்போ:
∙எல்லா Large Cap Fund-உம் same rules follow பண்ணும்
∙Easy-ஆ compare பண்ணலாம்
∙Returns மட்டுமே பாருங்க — structure same-தான்
Final-ஆ ஒரு வார்த்தை
SEBI இந்த விதி கொண்டு வந்தது Mutual Fund நிறுவனங்களுக்காக இல்ல.
உங்களுக்காக ❤️
உண்மை உலகிலே மிகவும் கடினமா கை கால் இல்லாம இருப்பது கூட இல்லை, கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் ❤️🙏🏼
உதவி ஏதாவது எப்பவாவது பண்ண வேண்டும் என்று நெனைத்தால் அவர்களுக்கு பண்ணுங்க கண்டிப்பா உங்கள் மனம் நிச்சயம் சந்தோஷபடும்.
மாவட்ட மாற்று திறனாளிகள் உதவி மையம் லா கேட்டீர்கள் என்றால் லிஸ்ட் குடுப்பங்க தமிழ் நாட்ல 14 லட்சம் மாற்று திறனாளிகள் ல 1L மேற்பட்ட மாற்று திறனாளிகள் கண் பார்வை இழந்து இருப்பவர்கள். அடுத்த முறை உதவ நினைக்கும் பொழுது இவர்களை மனதில் வைத்து கொள்ளுங்கள் உங்கள் உதவி நிச்சயம் வீண் ஆகாது
RECAP #2025
இந்த 2025 இல் எனக்கு பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளது, பல நல்ல விஷயம் செய்து உள்ளேன்😊, அதேபோல சில தவறுகளும் செய்துள்ளேன்🙃
நான் செய்த மிக நல்ல விஷயம் அப்படின்னு நினைக்கிறது ஸ்டார்ட் பண்ணுது கட்டணமில்லா இன்வெஸ்ட்மெண்ட் வகுப்புகள் எடுத்தோம் யார்கிட்டயும் ஒரு ரூபா வாங்கல அஞ்சு வாரம் 10 லிருந்து 12 கிளாஸ் எடுத்தோம் கூட இன்சூரன்ஸ் பற்றி நடத்தினோம், Twitter SPACES இன்சூரன்ஸ் பற்றி நடத்தினோம் இது எல்லாமே எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு இதெல்லாம் உதவியா இருந்திருக்கும் இருக்கும் அஞ்சு வருஷம் கழிச்சு அவங்க நிச்சயமா என்கிட்ட திரும்ப இத பத்தி ஒரு நாள் பேசுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு இது எல்லாமே நான் மற்றும் என் டீம் சேர்ந்து செய்த விஷயங்கள் அவங்க எல்லாரும் இல்லனா இத பண்ணி இருக்கவே முடியாது.
இதுவரை 1200 ல இருந்து 1300 பேர் முழுவதுமாக முடித்துள்ளார்கள் 🫡 அதுல எனக்கு தெரிஞ்சு 90% பேர் சிறப்பான முறையில் டெக்னிகல்ஸ் பற்றியும், ஃபண்டமெண்டல்ஸ் பற்றியும், மேக்ரோ எகனாமிக்ஸ் பத்தி, Investment சைக்காலஜி பற்றியும் கண்டிப்பா நல்ல விதமா தெரிந்து இருப்பாங்க இதுவரை நான்கு பேட்ச் காண்டாக்ட் பண்ணினோம் என் மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது இதை இனி எல்லா மாதமும் செய்யறது அப்படின்னு முடிவு பண்ணியாச்சு அது என்னைக்கு ஸ்டாப் பண்ணுவான் என்று எனக்கு தெரியல
அடுத்து நான் பண்ணது என் சொந்த ஊருல எனக்கான ஒரு நல்ல ஆபிசா ஏற்படுத்திகிட்டது
அடுத்து பல புதிய நட்புகள் உருவானது அவர்கள் எல்லாருமே எனக்கு காலம் முழுவதும் வரக்கூடிய அளவுக்கு நல்ல நண்பர்கள் இருக்காங்க
அதே போல June மாதத்துக்கு அப்புறம் நிறைய பேர் கூட என்னால முழுவதுமா இன்ட்ரக்ஷன் பண்ண முடியல அதுக்கு காரணம் உங்களுக்கே தெரியும் என்னுடைய வேலைப்பளு எந்த அளவுக்கு இருந்தது என்று யாருக்காவது கால் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாம இருந்தா மன்னிச்சிருங்க, நீங்க கேட்ட கொஸ்டின் ஆன்சர் பண்ணாம இருந்தா மன்னிச்சிடுங்க, தெரியாம ஏதாவது தப்பு பண்ணி இருக்கலாம் மன்னிச்சிடுங்க 🙏🫂
இன்னைக்கு ஒரு சம்பவம் நடந்தது இன்னைக்கு காலைல நடந்த ஒரு விஷயத்தை Tweet ah போட்டேன் ஆட்டோவில் ஏத்துறேன்னு சொல்லிட்டு ஒரு கும்பல் அவங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்காங்க நம்ப தேவையில்லாதவங்களுக்கு ரெஸ்பான்ஸ் பண்ண கூடாது என்பதற்காக கற்றுக் கொண்ட வருடம் அல்லவா கண்டுக்கவே இல்ல கத்திகிட்டே இருக்காங்க அடுத்தவனுக்காக மாறக்கூடிய இடத்துல நம்ம கிடையாது 😊😇
மீண்டும் சொல்றேன் மூன்று விஷயத்தை மட்டும் எப்பவும் பண்ணிடுங்க
1. ஒரு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்துக் கொள்ளுங்கள்,
2. ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் வைத்துக் கொள்ளுங்கள்,
3. கூட ஒரு மூணு டூ நாலு மாசத்துக்கான பணத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள்!!
உங்க டொமைன்ல இருக்கேன் ஏதாவது ஒரு ஏஐ கோஷே பண்ணி வச்சிருங்க
இந்த 2026ல பிளான்கள் இருக்கு எல்லாமே சந்தோஷமா சிறப்பான நடக்கும் என்று நினைக்கிறேன் அப்படி நடந்தா கண்டிப்பா ஷேர் பண்றேன்.
இந்த வருஷம் நிச்சயமா தமிழ்ல ஒரு PODCAST இருக்கு, சிறப்பான Investment வெப்சைட்டும் வரப்போகுது பார்ப்போம். #HST will Growwww Bigger 🚀🚀
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #2026
- with❤️
HARI
இன்று HS Trade School-ன் 7ஆம் ஆண்டின் தொடக்கம் ❤️✨
2019 நவம்பர் 9 — ஒரு laptop… ஒரு Skype call…
3 நண்பர்கள் “எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க ஹரி!”ன்னு கேட்ட அந்த ஒரு நிமிடம் தான்,
இன்று ஆயிரக்கணக்கான கனவுகளுக்கு வேராக மாறி இருக்கிறது 💻🌱
அந்த நாளில் யாரும் எதிர்பார்க்கல, நானும் எதிர்பார்க்கல 😌—
ஒரு சிறிய online session தான்,
ஒருநாள் 400+ Systematic Traders-ஐவும், 1500+ சிறந்த Investors-ஐயும் உருவாக்கும் ஒரு இயக்கமா மாறும் என்று.
இன்று வரை 6 ஆண்டுகள் முடிந்து,
HS Trade School -
ஒரு உணர்ச்சி,
ஒரு குடும்பம்,
ஒரு பயணம்,
ஒரு மாற்றம் 🫶🏻🫶🏻🫶🏻
இந்த 6 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து நடந்த ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றி 🙏
@Skype ரொம்ப மிஸ் பண்றேன்
அதில்தான் இந்த குடும்பத்தின் heartbeat உருவானது 💓
இன்று #HSTFamily — IAS முதல் VAO வரை,
MCh Doctor முதல் 8ஆம் வகுப்பு வரை,
18 வயது குட்டி பையன் முதல் 58 வயது வரை —
எல்லாரும் ஒரே மரத்தின் கிளைகளா, ஒரே நம்பிக்கையோடு வளர்ந்து இருக்கிறோம் 🌳
இன்று வரை ட்ரேடிங் வகுப்புகள் நான் மட்டுமே எடுக்கிறேன், பார்த்து கொள்கிறேன் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் வகுப்புகள் நண்பர்கள் உடன்😇)
60 பேட்ச் (அணிக்கு 5-8 பேர்) கடந்து இன்று வரை — அதே உற்சாகம், அதே உண்மையோடு இயங்கி வருகிறது.
இதில் சுமார் 80% பேர் சிறப்பான நிலையிலும்,
அதில் குறிப்பாக பெண்கள் மிகப் பெருமையாக முன்னேறுகிறார்கள் 👏
10% பேர் நல்ல நிலைமையிலும்,
மீதமுள்ள 10% நண்பர்கள் தனிப்பட்ட பளுவால் தொடர்பு குறைந்திருந்தாலும் —
அவர்களும் என் மனதில் நிற்கிறார்கள் 💭
இந்த 6 வருடங்களில் — 2000+ (2 மணி நேரம்) நாட்கள் வகுப்புகள் நடந்தது.
ஒவ்வொரு class-ம் என் வாழ்க்கையின் ஒரு பக்கம்தான் நீங்க எல்லாரும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம்
வகுப்பு எடுப்பதன் மூலமா அந்த நாள் கற்றது அடுத்த நாள் எனக்கு ட்ரேடிங் தொழிலுக்கு முழுவதும் உதவியாக இருந்தது
சில நாட்கள் அதிக வேலை இருந்தாலும்,
“இன்று class இருக்கே… அவர்கள் காத்திருக்காங்க…”ன்னு தோணும் என்னைக்காது காக்க வெச்சிருந்தா சாரி 🙏🏻
முக்கியமா — ஒரு நாள் நானாக fees அனுப்பிட்டிங்கள கேட்டதேயில்லை… ஆனா அது தானாக வந்து சேர்ந்தது
யாரிடமும் நினைவூட்டல, அழுத்தமிடல.
ஏனென்றால் இது business இல்ல — இது நம்பிக்கை அஹ் மாறியது 🙏🏻
இன்னும் எனக்கு 35-45 வருட வாழ்க்கை இருக்குது —
அதுவரை இந்த ஹரி
HS Trade School வழியாக, உங்கள் உடன் பயணிப்பேன்
நான் வேறு வேலையில பிஸியா இருந்தாலும்,
அல்லது வாழ்க்கை வேறொரு திசை எடுத்தாலும் —
இது தான் என் முதல் உலகம். 🌍
இன்று 7ஆம் ஆண்டின் தொடக்கம்.
இந்த மரம் இன்னும் பெரிதாக, இன்னும் பல கனவுகளை தாங்கி வளரட்டும் 🌳❤️
ஹரி & HS Trade School Family
#7YearsOfHST #HSTradeSchool #HSTFamily #FinancialEducation
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
சமீபத்தில் என் பெயரிலும், என் நண்பர்களின் பெயரிலும் பல ஃபேக் ஐடிகள் உருவாக்கப்படுகின்றன.
என்றும் நினைவில் கொள்ளுங்கள் — நான் உங்கள் டிஎம்📩-இல் நேரடியாக வர மாட்டேன்.
இது யார் எந்த நோக்கத்தில் செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
என்றும் நான், அல்லது என் பெயரைச் சொல்லி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால்,
அது நான் அல்ல, அல்லது என் நிறுவனம் அல்ல.
எங்கள் பக்கத்திலிருந்து ஒருபோதும் முதலில் மெசேஜ் அனுப்ப மாட்டோம்.
@hstradeschool என்ற பெயரே நம்முடைய ஒரே அதிகாரப்பூர்வ ID
வேறு பெயரில் வரும் எந்த ஐடியையும் நம்ப வேண்டாம் —
அப்படி நம்பி ஏதாவது நடந்தால் அதற்குப் பொறுப்பு எங்களிடம் இல்லை.
மேலும், நான் அல்லது எங்கள் குழு யாரிடமிருந்தும் பணம் கேட்பது இல்லை;
அதற்கான எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.
— Hari & @hstradeschool Team
FYI: இந்த impersonation சம்பந்தமாக ஒரு பாதுகாப்பு நோக்கத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளோம்.
இதனால் பெரிய தாக்கம் ஏற்படாது என்றாலும், எங்களது நலனுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
Financial Statement Analysis 🧵 (நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு) பயன்படுத்தப்படும் முக்கியமான விகிதங்கள் (ratios) இங்கு ஒரு கடையை வைத்து ஸ்டோரி புக் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!🙂
The HST Story book 🔖