எந்தத் துறையுமே இன்று ஒரு கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்.
ஏனென்றால் ஆளத்தெரியாதவன் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும்? அதிகாரிகளை வேலை வாங்கவும் தெரியாது இவர்களுக்கும் வேலை என்னவென்றே தெரியாது.
இனி எந்தெந்த கொடுமை எல்லாம் அனுபவிக்க வேண்டுமோ?
#TVKFAILS
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனில் செய்வது எப்படி?
உங்க வீடு கணக்கெடுப்பு
பண்ணுங்க😍
HOW TO FILL ONLINE?
இந்த 33 கேள்வி மட்டும்
வீட்டில் இருந்தே நீங்களே பண்ணலாம்🔥
#Census#Census2026#TamilNadu#India
முழு வீடியோனு வெற்றி மீடியாவும் தற்குறிகளும் இதை பரப்பிட்டு இருக்காங்க ..
இந்த முழு வீடியோவுல அமைச்சரை மட்டும் பார்த்தாலே புரியும் அவங்க குழந்தைகள் ஊக்குவிக்கற மாதிரி அங்க எதுவும் பேசல .. தன்னோட அதிகாரத்தை காட்டனும்னு முயற்சி பண்ணுனாங்க .. ஆனா ���ந்த குழந்தைகள் உடனே எல்லாத்துக்கும் பதில் தந்தது தாங்க ��ுடியாம ..
"ஓ இங்க spoken English சொல்லி தராங்களா"னு கேட்டு உடனடி பதில் வந்ததுக்கு அதை மட்டுப்படுத்தற மாதிரி ஒரு பதில் .. அடுத்து ஒரு குழந்தை முழு வாக்கியத்துக்கும் விளக்கம் சொன்னதும் " இல்ல everlasting" மட்டும் அர்த்தம் என்னனு கேட்டதும் அதுக்கும் அந்த குழந்தை உடனடியாக தெளிவாக விளக்கம் சொல்லுது .. அதுக்கு ஒரு பாராட்டு கூட சொல்லாம உடனடியாக ஆசிரியர்களிடம் திரும்பி .. புத்தக்கத்துல இருக்கறது எல்லா���் ஈசியா மனப்பாடம் பண்ணிடுவாங்க நானும் அப்படி தான்னு சொல்லிட்டு ஒரு conversation build பண்ண முடியுமானு கேக்குறாங்க ..
அவங்க அரசுப்பள்ளி குழந்தைகள் ...அவங்க இந்தளவுக்கு ஒரு ஆங்கிலம் தெரிந்து வைத்திருப்பதே ரொம்ப பெரிசு .. அவங்களுக்கு எதுக்கு conversation intelligence வேணும்னு கார்னர் பண்றாங்க .. அந்த குழந்தைகள் சொன்னதுக்கு ஒரு புன்சிரிப்பு கூட இல்லாம முக்கியமா " மிஸ் நான் சொல்றேன்னு" சொல்லி ஒரு பின்னிடி பெ��்ச் பொண்ணு சொல்லி முடிக்குது .. அதை appreciate பண்ணனும்ங்கற அடிப்படை நாகரீகம் கூட இல்ல இந்த அமைச்சருக்கு ..
எல்லாத்துக்கும் மேல இவங்க மனப்பாடம் தான் பண்ணுனாங்கனா அது அவங்க படிச்ச பள்ளிக்கும் இவங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி தான் அர்த்தம் ..
அந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுட்டு அதுக்கும்ப்புறம் diversion politics பண்ணுங்க அமைச்சர் @Keerthana4VNR அவர்களே..
பிராடு பயலுங்க திறமையான மாணவர்களை இப்படி ஓரம் கட்டிவிட்டு பணம் படைத்தவர்களிடம் காசு வாங்கிட்டு இப்படி பன்றங்கள.
கல்வி என்னும் செல்வம் எல்லாரும் சமமாக கிடைப்பது இல்ல
பதிவு செய்யாத பாகப்பிரிவினை - பயம் வேண்டாம்!
சட்டப்படி 3 தீர்வுகள்:
நம்ம ஊர்ல 100-ல 90 குடும்பத்துல இதே பிரச்சனை தான்.
அப்பா உ���ிரோட இருக்கும்போது 3 பிள்ளைங்களுக்கும் சொத்த பிரிச்சு கொடுத்திருப்பார்.
"நீ வடக்க பார்த்த வீடு,
நீ தெற்கு பார்த்த நிலம்,
நீ தோட்டம் வச்சுக்கோ"னு வாய் வார்த்தையா சொல்லிட்டு போயிருப்பார்.
ஆனா பத்திரம் பதிய மாட்டார். "நமக்குள்ள என்னடா பத்திரம்"னு விட்டுடுவார்.
வருஷம் ஓடும். அப்பா-அம்மா இறந்துடுவாங்க. கூட பிறந்த 2 பேரும் இறந்துடுவாங்க.
இப்போ நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க. சொத்த விக்க போனா, லோன் வாங்க போனா, பட்டா மாத்த போனா ஆபீஸர் கேட்பார்:
"பாகப்பிரிவினை பத்திரம் எங்க?"
அப்போ தான் தலை சுத்தும். "அய்யய்யோ பத்திரமே இல்லையே, இனி சொத்து போச்சா?"னு பயம் வரும்.
பயப்படாதீங்க. சொத்து போகாது. இந்திய சட்டம் உங்க பக்கம் தான் இருக்கு.
முதல்ல ஒரு அடிப்படை உண்மை தெரிஞ்சுக்கோங்க:
பதிவு செய்யாத பாகப்பிரிவினை செல்லாது இது Registration Act Section 17 சொல்லுது. ₹100 மேல மதிப்பு இருக்கிற அசையா சொத்த பிரிச்சா கண்டிப்பா பதியணும். பதியலனா அந்த பத்திரத்துக்கு சட்டப்படி மதிப்பு கிடையாது.
ஆனா இங்க தான் ஒரு Twist இருக்கு.
Limitation Act, 1963 Section 27 சொல்லுது:
"ஒரு சொத்த ஒருத்தர் 12 வருஷத்துக்கு மேல தொடர்ந்து, தடையில்லாம, வெளிப்படையா அனுபவிச்சா, அந்த சொத்து அவருக்கே சொந்தமாயிடும்." இதுக்கு பேரு Adverse Possession.
அதாவது, பத்திரம் இல்லனாலும் 12 வருஷம் நீங்க மட்டும் தனியா அனுபவிச்சா, EB Bill உங்க பேர்ல கட்டுனா, வீட்டு வரி உங்க பேர்ல கட்டுனா, Voter ID, Ration Card-ல இந்த Address இருந்தா, அந்த சொத்து சட்டப்படி உங்களுக்கு சொந்தம்.
சரி, இப்போ தீர்வுக்கு வருவோம். உங்களுக்கு 3 வழி இருக்கு.
வழி 1: விடுதலை பத்திரம் - Release Deed - ரொம்ப ஈஸி
இது தான் 90% கேஸ்ல Work ஆகும் வழி. இறந்து போன உங்க கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க இருப்பாங்க இல்லையா?
அவங்க தான் இப்போ சட்டப்படி வாரிசு.
நீங்க அவங்க கிட்ட போய் பேசணும். "எங்க அப்பா அப்பவே பாகம் பிரிச்சு கொடுத்துட்டார். 20 வருஷமா நான் தான் அனுபவிக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, என் பேருக்கு ஒரு விடுதலை பத்திரம் எழுதி கொடுங்க"னு கேட்கணும்.
அவங்க சம்மதிச்சா, ஒரு Document Writer கிட்ட போய்
"விடுதலை பத்திரம்"
எழுதணும்.
வாசகம் இப்படி இருக்கும்:
"எங்கள் தகப்பனார் பெயரில் உள்ள சொத்தில் எங்களுக்கு சேர வேண்டிய பாகத்தை, [உங்க பெயர்] அவர்களுக்கு முழுமனதுடன் விட்டுக்கொடுக்கிறோம். இனி அந்த சொத்தில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை."
இத எல்லா வாரிசும் கையெழுத்து போட்டு சார் பதிவாளர் ஆபீஸ்ல பதி��்சா போதும். Stamp Duty சொத்து மதிப்புல 1% மட்டும் தான். Registration Fee ₹4,000. ஒரு வாரத்துல உங்க பேருக்கு பத்திரம் வந்துடும். பட்டா மாத்திடலாம்.
இதுக்கு தேவையான Document:
1. தாய் பத்திரம்
2. இறந்தவர்களின் Death Certificate
3. வாரிசு சான்று
4. EC
5. உங்க ஆதார், பான் கார்டு
வழி 2: குடும்ப ஏற்பாடு பத்திரம் - Family Arrangement
ஒருவேளை வாரிசுகள் "விடுதலை பத்திரம் வேண்டாம், ஆனா சொத்து உங்களுக்கே இருக்கட்டும்"னு சொன்னா, இந்த வழிக்கு போகலாம்.
எல்லா வாரிசும் ஒண்ணா உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும். அப்புறம் ₹100 Stamp Paper வாங்கி
"குடும்ப ஏற்பாடு பத்திரம்"
எழுதணும். "குடும்பத்துல சண்டை வரக்கூடாதுனு நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்திருக்கோம்.
[சொத்து விவரம்] இனி [உங்க பெயர்] அவர்களுக்கே முழு உரிமையானது"னு எழுதி எல்லாரும் கையெழுத்து போடணும்.
இந்த பத்திரத்த பதிய வேண்டிய அவசியம் இல்ல. ஆனா பதிஞ்சா சட்டப்படி ரொம்ப Strong. இத வச்சே தாசில்தார் ஆபீஸ்ல போய் பட்டா பெயர் மாத்த கேட்கலாம்.
செலவு வெறும் ₹500 தான் ஆகும்.
வழி 3: நீதிம���்ற வழக்கு - Declaration Suit - கடைசி ஆயுதம்
வாரிசுகள் ஒத்து வரல. "எங்களுக்கும் பங்கு வேணும்"னு சண்டைக்கு வந்தா, வேற வழி இல்ல. Court தான் போகணும்.
நீங்க Civil Court-ல "Declaration Suit" போடணும். வக்கீல் மூலமா "நான் இந்த சொத்த 12 வருஷத்துக்கு மேல தனியா அனுபவிக்கிறேன். EB Bill, வீட்டு வரி எல்லாம் என் பேர்ல தான் இருக்கு. அதனால Limitation Act படி சொத்து எனக்கே சொந்தம்னு தீர்ப்பு கொடுங்க"னு கேட்கணும்.
Court-ல நீங்க 12 வருஷ அனுபவத்தை நிரூபிக்கணும். பழைய EB Bill, வீட்டு வரி Receipt, Voter ID, பக்கத்து வீட்டுக்காரங்க சாட்சி எல்லாம் கொடுக்கணும். Judge திருப்தி ஆனா உங்களுக்கு சாதகமா Decree கொடுப்பார். அந்த Decree-அ வச்சு பத்திர ஆபீஸ்ல பதிஞ்சு பட்டா மாத்தலாம்.
இதுக்கு 2 முதல் 5 வருஷம் ஆகும். செலவு ₹50,000 மேல ஆகும்.
அதனால இது கடைசி வழி தான்.
-------------------------------------------------
இப்போ நீங்க உடனே செய்ய வேண்டிய 3 விஷயம்:
1. EC போடுங்க:
https://t.co/0wiZZA0A49 Website-ல போய் இப்போ சொத்து யார் பேர்ல இருக்குனு பாருங்க. அப்பா பேர்ல இருந்தா தான் மேல சொன்ன வழி எல்லாம் Work ஆகும்.
2. வாரிசு சான்று எடுங்க:
இறந்து போன கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க யாரு இருக்காங்கனு VAO ஆபீஸ்ல கேட்டு வாரிசு சான்று வாங்குங்க.
3. பேசி தீருங்க:
வாரிசுகள் ��ிட்ட நேர்ல போய் பேசுங்க. "சண்டை வேண்டாம், சுமூகமா முடிச்சுக்கலாம்"னு சொல்லுங்க. 90% பிரச்சனை பேச்சுவார்த்தையில முடிஞ்சிடும்.
கடைசியா ஒரு வார்த்தை:
சொத்து பிரச்சனை வந்தா உடனே Court-க்கு ஓடாதீங்க. முதல்ல குடும்பத்துக்குள்ள பேசி பாருங்க. விடுதலை பத்திரம் மூலமா சுமூகமா முடிக்க பாருங்க. நேரம், பணம், மனநிம்மதி மூணும் மிச்சமாகும்.
சட்டம் தெரிஞ்சா எல்லாமே ஈஸி தான். பயப்படாதீங்க.
#இன்றையதக���ல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #அறிவோம்சட்டம்
#LoadingDosage
Tab. Aspirin 300mg,
Tab. Clopidogrel 300mg,
Tab. Atrovastatin 80mg,
Tab. Sorbitrate 5mg
@CMOTamilnadu மருத்துவமனை போய் மருத்துவர்கள் சிகிச்சையை துவங்கும்வரை பிடித்து வைத்திருக்கும் உயிரை (30நிமிடங்கள் வரை)
இதை 60 வயது கடந்த அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று க��ண்டு வரலாமே
க்ரேசி மோகன் இறந்து போன அன்னிக்கு நடந்ததை மாது பேட்டி கொடுத்திருக்கார். அதிகாலையில கோயிலில் இருக்கும் போது க்ரேசி அவருக்கு கால் செய்திருக்கார். வயிறு வலிக்குதுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கார். இனிமே வெத்தலை போட மாட்டேன்னு சொல்லிருக்கார்... வலி தாங்கலைன்னு சொல்லிட்டு வீட்லையே எதையோ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு இவர் சொல்லிட்டு போயிருக்கார்....
மறுபடிய��ம் ஒன்னு இரண்டு மணி நேரத்துக்குள்ள கால் செய்து வலி அதிகமாகுது மூச்சு விட முடிலன்னு சொல்லிருக்கார். காரை எடுத்துட்டு ஹாஸ்பிடல் போய் அட்மிட் செய்த கொஞ்ச நேரத்தில உயிர் பிரிந்திருக்கு.
என்னுடைய கணிப்பு க்ரேசிக்கு வலி வந்து அவர் மாதுக்கு கால் செய்றதுக்கு முன்னாடியே 1 மணி நேரத்துக்கு அவரா சமாளிச்சு பார்த்திருப்பார். சமாளிக்க முடிலன்ன உடனே கால் செய்திருப்பார். அதில ஒரு மணி நேர��், மாது வந்து பார்த்தப்போ 1 மணி நேரம், அடுத்த போன் கால், ஹாஸ்பிடல் போனதுன்னு 2 மணி நேரம் போயிருக்கு. மாரடைப்புக்கு முதல் 3 மணி நேரம் கோல்டன் டைம். ஒரு வேளை காலையில முதல் முறை வயிறு வலின்னு ஆரம்பிச்ச உடனே ��ாஸ்பிடல் போயிருந்தா இன்னிக்கு க்ரேசி நம்ம கூட இருந்திருக்கலாம்...
முதல் விசயம் அதிகாலையில் வலி. பெரும்பாலான இதய பிரச்சனை & ஸ்ட்ரோக் அதிகாலையில தான் வருது. வயிற்று வலி, தாடை வலி, நெஞ்சு வலி, பிடறி வலி, கழுத்து வலி, நெஞ்சு கரிப்பு என எதுவா இருந்தாலும் அதிகாலையில வருவதற்கு கூடுதல் கவனம் கொடுக்கணும். உடனடியா இரத்தக் கொதிப்பை பார்க்கணும், 90க்கு கீழேயோ 170க்கு மேலேயோ இருந்தால் உடனடியாக ��ருத்துவமனை போகணும்.
இரண்டாவது புகையிலை பழக்கம். வெற்றிலை பாக்கு, சிகிரெட், பீடி, ஹான்ஸ், பாக்கு, மூக்குப்பொடி என எந்த விதமான புகையிலை பழக்கம் இருந்தாலும் உடம்பில எங்க வலி வந்தாலும் நேரா கிளம்பி ஹாஸ்பிடல் போய்டுங்க.. பிபி அங்க போய் பார்த்துக்கலாம்.
அடுத்தது உழைப்பில்லாத வாழ்க்கை முறை. நிச்சயமா பெரும்பாலோனோருக்கு இது பொருந்தும். அதிக உழைப்பில்லை, அதிகாலை வலி.. கிளம்பு ஹாஸ்பிடல���க்கு...
அடுத்து சர்க்கரை நோய்.. ஒழுங்கா மாத்திரை எடுக்கலியா?? அதிகாலை வலியா? ஹாஸ்பிடல் தான்...
மிக முக்கியமானது பிபி.. மாத்திரை போடல, உடனடியா கிளம்பனும். ��ாஸ்பிடலுக்கா பரந்தாமனை பார்க்கவா என்பது எவ்ளோ சீக்கிரமா கிளம்பறீங்க என்பதை பொறுத்தது.
கவனிக்க வேண்டிய இன்னொன்னு... வயது. 40 வயசுக்கு மேல, அதிகாலை வலி... கிளம்புங்க ஹாஸ்பிடலுக்கு.
ஒரு வேளை மேலே சொன்ன காரணத்துல ஒன்றுக்கு மேல உங்களுக்கு இருந்தா அதிகாலை வலி வந்தாலே அது கண்டிப்பா ஹார்ட் அட்டாக் தான்.. உடனடியாக ஹாஸ்பிடல் போங்க.
முதல் 3 மணி நேரம் தான் முக்கியம். வலிக்குது ஒரு சோடா குடிப்போம்ன்னா சோடா முடியறதுக்கு முன்னாடி சோலி முடிஞ்சுரும். கார்டியாக் அரெஸ்ட் வேற வகை. அது யாருக்கும் எப்பவும் வரலாம்... காப்பாற்றுவது கடினம் ஆனால் ஹார்ட் அட்டாக் 99% பெரும்பாலும் 3 மணி நேரம் டைம் கொடுக்கும்... சுதாரிச்சுக்கணும்.
அதுக்கு தேவை ஓரளவு விழிப்புணர்வு தான். அதுக்கு இந்த பதிவை படிச்சிருந்தாலே போதும்.
#Shared
🧠 Stroke வந்தால் காத்திருக்காதீர்கள்! FAST அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள். 🔹 F – முகம் ஒரு பக்கம் சாய்வது (Face drooping) 🔹 A – கை அல்லது கால் பலவீனம் (Arm weakness) 🔹 S – பேச்சு குழப்பம் (Speech difficulty) 🔹 T – உடனே அவசர சிகிச்சையை அழைக்க வேண்டிய நேரம் (Time to call emergency services) ⏰ “Time is Brain” – ஒவ்வொரு நிமிட தாமதமும் மூளை செல்களை இழக்கச் செய்யலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் காத்திருக்காதீர்கள். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
பரீட்சைக்காக பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய மாணவர்கள், விஜய் நடித்த படப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் நிலை வந்திருக்கிறது😭
அரசுப் பள்ளியா? இல்ல ரசிகர் மன்ற கிளையா? @imrajmohan 😡
U r not worth for Education Minister 🤡
*அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!*
*தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்*.
*இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.*
*இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்���து. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.*
*அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது*.
*அரசின் இந்த வெளிப்படையான நடவடி���்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.*
*Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in*
*செய்தி:- டைகர் மீடியா*
Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90039 33964
Thiru Aadhav Arjuna
Minister for Public Works and Sports Development
Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99624 99599
Dr. K.G. Arunraj
Minister for Health, Medical Education and Family Welfare
Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94459 53976
Thiru K A. Sengottaiyan
Minister for Revenue and Disaster Management
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 63852 49393
Thiru P. Venkataramanan
Minister for Food and Civil Supplies
Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98412 73454
Thiru R. Nirmalkumar
Minister for Energy Resources and Law
Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99625 66341
Thiru Rajmohan
Minister for School Education, Tamil Development, Information and Publicity
Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90030 83602
Dr. TK. Prabhu
Minister for Natural Resources
Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95853 65217
Selvi S. Keerthana
Minister for Industries
Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 97902 73544
Thiru P. Viswanathan
Minister for Higher Education
Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 96002 14442
Thiru S. Rajesh Kumar
Minister for Tourism
Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94431 03539
Thiru A.M. Shahjahan
Minister for Minorities Welfare
Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99659 04553
Thiru Vanni Arasu
Minister for Social Justice
Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95515 11006
Thiru A. Vijay Tamilan Parthiban
Minister for Transport
Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99421 98999
Thiru B. Rajkumar
Minister for Housing and Urban Development
Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99422 24532
Thiru V. Sampath Kumar
Minister for Backward Classes Welfare
Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98422 60733, 86681 81155
Thiru M. Vijay Balaji
Minister for Handlooms, Textiles and Khadi
Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98947 23460
Thiru K. Vignesh
Minister for Prohibition and Excise
Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99448 17417
Thiru K. Thennarasu
Minister for Non-Resident Tamils Welfare
Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99406 19268
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..!
அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..!
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கல���ஞர்.
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்.
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்.
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்.
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்.
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் த��ட்டம் வகுத்தது கலைஞர்.
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்.
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்.
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்.
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்.
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்ட���் தந்தது கலைஞர்.
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்க��ி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்.
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்.
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்.
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலை��ர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.
51. தமிழ்நாடு ந���கர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்.
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]