நமது @WTLFoundation சார்பாக இன்று காலை அலகுமலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை போற்றும் விதமாக, நம் சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது. உடலினை உறுதி செய்வதன் மூலம் மனதினையும், சிந்தனையையும் பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழு ஊக்கத்துடன் மக்கள் கலந்து கொள்வது மனநிறைவாக உள்ளது.
On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by @WTLFoundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October.
More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy.
When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
Heartiest congratulations to Smt Navanethem “Navi” Pillay avl on being awarded the Nobel Peace Prize.
Rising from humble beginnings in Durban, South Africa, where her parents were of Tamil descent and her grandfather was brought from India to work on sugar plantations, she has pursued a lifelong crusade against apartheid, gender discrimination, and systemic injustice, standing as a towering beacon of resilience and courage.
Her close association with former South African President Nelson Mandela is a testament to her unyielding commitment to justice and her lifelong dedication to upholding human dignity.
From serving as a fearless human rights lawyer and the first non-white female judge in South Africa's High Court to her stellar leadership as the UN High Commissioner for Human Rights, she has shown unwavering dedication to the marginalised, making her a source of immense pride.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
Respectful salutes to our brave air warriors on Indian Air Force Day.
From defending our frontiers with absolute supremacy to leading humanitarian rescue missions across the globe, the IAF's commitment inspires all 1.4 billion Indians.
Jai Hind!
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது.
இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன்.
@JuniorVikatan
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
தமது வீரமிக்க பேச்சுகளாலும் எழுத்துகளாலும் மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பி, தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற இன்னல்களையும் தியாகங்களையும் எதிர்கொண்ட, அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தேசியக் கொடியைத் காக்க தன் இன்னுயிரையே தியாகம் செய்த மாவீரர், திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே துணிந்து போராடி, உயிர்த் தியாகம் செய்த அமரர் திருப்பூர் குமரன் அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
Heartiest congratulations to our Men’s Hockey Team on a sensational and dominant victory to clinch successive Gold Medals at the Asian Games.
This confirms our direct entry for the LA 2028 Olympics.
Wishing the team continued success as they bring more glory to the nation.
Heartiest congratulations to our Indian Men’s Team on winning the Gold Medal in T20 Cricket at the Asian Games.
Our men in blue have made India proud with their fantastic all-round performance and a wonderful victory in the final.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம்.
திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தற்போது நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். நாம் தேர்தலைச் சந்திக்கும்போது, பிரச்சாரத்துக்குச் செல்லாமலேயே நாம் வெற்றி பெறுவோம் என்ற அளவுக்கு, நமது பணிகள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மாற்றத்தைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வரும்போது மக்கள் விரும்பும் மாற்றத்தை செய்தும் காட்ட வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான போக்சோ வழக்குகள், பாலியல் தாக்குதல், பாலியல் சீண்டல், கடத்தல் வழக்குகள் என மொத்தம் 26,145 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. சராசரியாக, ஒரு நாளுக்கு 14 குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சமூகமாக நாம் தோற்றுப் போயிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
பெண்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான், அக்டோபர் மாதத்தை பெண்கள் பாதுகாப்பு மாதமாக அறிவித்து நமது @WTLFoundation தலைவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
Truly delighted to have attended We Can School for Autism's 25th anniversary in Chennai yesterday and to have spent time with Children with Special Needs.
Special commendation to the organisation's founder, Dr Gita Sankaran avl, who built this from the ground up; the teachers who've dedicated themselves to educating Children with special needs; and the parents who continue to go the extra mile to ensure their children receive the exposure, opportunities, and dignity they truly deserve.
தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்களின் நினைவு தினம் இன்று.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலகட்டத்தில், சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்துடன் இணைவதற்காக அவர் முன்னெடுத்த போராட்டங்கள் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கவை. தமிழ் வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்த புகழுக்குரியவர்.
தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கவை. தமிழ் உள்ளவரை, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் புகழ் நிலைத்திருக்கும்.
Heartiest congratulations to our Indian women’s hockey team for clinching the Asian Games Gold after 44 years.
This phenomenal triumph and direct qualification for the 2028 LA Olympics has made the entire nation immensely proud. We salute the team for their absolute grit, unmatched resilience, and historic glory.
கடந்த இரண்டு மாதங்களில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நமது @WTLFoundation தலைவர்கள் இணைந்து, தமிழகம் முழுவதும் பன்னிரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் மரங்களை நட்டிருக்கிறோம். சுமார் 600 டன் குப்பைகளை அகற்றியிருக்கிறோம். வைகை, காவிரி, சண்முகா நதி உள்ளிட்ட நதிகளைச் சுத்தம் செய்யும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையைச் சுத்தம் செய்து வருகிறோம்.
தமது ஆட்சிக்காலத்தில் பூட்டப்பட்ட 8,000 பள்ளிக்கூடங்கள், புதிதாக 16,000 பள்ளிக்கூடங்கள் என, கல்விச் செல்வத்தை ஏழை எளியவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களது நினைவு நாளான இன்று, சாதனைப் பெண்களுக்கு நமது @WTLFoundation சார்பாக, அவர் பெயரிலேயே விருது வழங்குவது பொருத்தமாக அமைந்திருக்கிறது.