த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்டு இருக்கும் உண்மையான மாற்றம் !
ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் DTCP approval !
சிறு ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு இது வரப்பிரசாதம் !!
வாழ்க @CMOTamilnadu !
வைகாசி "விசாகம்" தமிழ்க்கடவுள் முருகன் பிறந்தநாள் என நம்பப்படுகிறது. இந்நாளில் எங்கள் வீட்டிற்கும் முருகன் வந்திருக்கிறான்.
ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் ❤️👶
One of the core ideology of #NTK is to preserve natural resources but did any of them open their mouth reg the quarries being closed from day1, instead they are worrying about parotta salna. Shameless creatures !!!
#TVK#TVKVijay
திராணி உள்ள அமைச்சர் @drtkprabhu_TVK - ரொம்ப எளிதா முதலாளிகள் கூட கைகோர்த்து இருக்கலாம் - ஆனா மக்கள் கூட நிக்குறார் !
ரீல்ஸ்ல இல்ல - ரியலா நடக்குது மாற்றம் !
மக்களுக்கு சாதகமா நெடுங்காலத்திற்கு பின் ஒரு அரசு !!
10 நிமிடம் தான் PM- CM சந்திப்புன்னு ஒரு கூட்டம் கதறிட்டு சுத்துறாங்க....
இதுக்கு முன்னாடி இருந்தவங்க என்ன பல மணிநேரம் பேசி நம்ம State ah Powerful ah மாத்திட்டாங்களோ?
மக்கள் சந்திப்பிலேயே 10 நிமிஷம் பேசி ஆட்சியை புடிச்சவருடா அவரு...போய் வேலைய பாருங்க அவருக்கு தெரியும் ✍️
முதல்வர் காலை 9.30 மணிக்கு தினமும் தலைமை செயலகம் வந்து விடுகிறார்...
சோழிங்கநல்லூர் MLA தினமும் காலை 8 மணிக்கே ஒவ்வொரு பகுதியாக சுற்றி சுற்றி வேலை செய்கிறாராம்...
நல்லதை வாழ்த்துவோம்👍👏மக்கள் பணி தொடரட்டும் ✍️ @CMOTamilnadu@EcrPSaravanann
தவெக வென்றது ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கொள்கை கூட்டணி ,முற்போக்கு முகம் ,பாசிச எதிர்ப்பு என எல்லா போலி முகமூடிகளும் கிழிந்து தொங்குகிறது.
இவ்ளோதான் இவங்க 👎
இட ஒதுக்கீட்டு பங்கீடு, சமூக நீதி என எந்த வகையிலும், பட்டியல் சமூகத்தவருக்கு சரியான, உரிய வகையிலான பங்கீட்டை அமைச்சரவையில் வழங்கியிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டுக்குரியவர்... முந்தைய முதல்வர்கள் செய்யத் தவறிய, தயங்கிய இடமது... ❤👏
@TVKVijayHQ யை ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல… பல முறை மோசமாக பேசியது.
வார்த்தைக்கு நூறு தடவை கூத்தாடி என்று இழிவு செய்தது .
விஜய் படங்கள் வெளியாகும் முன்பே பல முறை அவதூறு வழக்கு பதிவு செய்தது.
விஜய்யை " RSS பெற்ற கள்ள பிள்ளை “ என்று சொல்லியது.
இப்படி தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கும் விஜய்யை குறிவைத்து இழிவு செய்து நடந்த சதி வேலைகளில் பெரும்பாலும் விசிகவின் வன்னியரசு ஈடுபட்டிருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைக்காமல் அவரை அவதூறு பேசிய வன்னியரசு அவர்களுக்கு அமைச்சர் பதவியை விஜய் கொடுக்கிறார் என்பது விஜயின் மீது எனக்கு இருக்கும் மதிப்பை மிகவும் அதிகப்படுத்தி உள்ளது.
இது முதல்வர் விஜய்யின் பெருந்தன்மையை காட்டுகிறது.
அதே வேளையில் தங்களின் அரசியல் எதிர் தரப்பினர் மீது மோசமான அவதூறுகளையும் பொய்பலிகளையும் சுமத்தும் வேலையை இனிமேல் விசிக கை விடுமா?
அரசு அலுவலகங்களில் சுற்றி வந்த இடைத் தரகர்கள், நிலையாக இருந்த Consultants போன்றோர் இடத்தை காலி செய்து விட்டனர்.
தூய சக்தியின் அரசு ஒவ்வொரு இடத்திலும் தனது முத்திரையை பதிக்க தொடங்கியுள்ளது.
மேற்கண்ட தகவலை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு பிராமணருக்கு கொடுத்து விட்டார்களே என்று கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவருடைய செயல்பாடுகள், எண்ணங்கள் எதை சார்ந்து இருக்கிறது என்று பார்ப்பதே சாலச்சிறந்தது. அறிஞர் அண்ணா "ஒருவர் பிறப்பால் திராவிடராக இருந்தாலும், எண்ணத்தால் சமத்துவக் கோட்பாட்டை ஏற்காதவர், ஆரியராகவே கருதப்படுவார்; ஒருவர் பிறப்பால் ஆரியராக இருந்தாலும், எண்ணத்தால் சமத்துவக் கோட்பாடுகளை ஏற்பாரே ஆனால், அவரும் திராவிடரே " என்றார். எனில், அவருடைய கண்ணோட்டத்தில் பார்த்தால் இதில் என்ன தவறு என்றுதான் கேட்கத் தோன்றும்?
தமிழ்நாட்டின் முதல்வராகவே ஒரு பிராமணரை தமிழ்நாடு கண்டுவிட்டது. அதனால், இந்த நியமனத்தை வைத்து பாஜக - RSS என்று பேசுவது யதார்த்தமாக இருக்காது. ஆனால், இந்த நியமனத்தை அறிந்தவுடன் நமக்கெல்லாம் எழுந்த அச்சம் ஒரு சித்தாந்தத்தின் தொடர்ச்சி தான். அந்த அச்சம் தவறானது அல்ல. அது இயல்பான ஒன்று தான். காரணம், இதுவரை சந்திக்காத பல சூழல்களை நாம் சந்திக்க போகிறோம் ; சந்தித்து வருகிறோம். எனவே, அவருடைய செயல்பாடுகள் தமிழ் சார்ந்து, மொழிவளம் சார்ந்து, கருவறைக்குள் தமிழ் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இருக்கிறதா என்பதையே நாம் பார்க்க வேண்டும். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சேகர்பாபு இந்த துறைக்கு அமைச்சராக இருந்தார். அதனாலேயே அவர் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் பரவலாக இருந்தது. அப்போது இன்று எதிர்ப்பவர்கள் எங்கே போனார்கள்? மேலும், அவருடைய செயல்பாடுகளும் தமிழுக்கு எதிராகவே இருந்தது. எனவே, காத்திருந்து செயல்பாடுகளை வைத்து விமர்சிப்பதே சரி.
கமல் ஹாசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியபோது இந்த திராவிட இயக்க ஆதரவாளர்களின் கருத்தும் , பாஜக பின்னால் இருக்கிறது என்ற விமர்சனமும் இல்லையே? ஏன், கமல் திராவிடரா?
@CMOTamilnadu@RameshOffcl