அரசு தரும் இலவச சான்றிதழ்.. வீட்டில் இருந்தே மாதம் ரூ.20,000 சம்பாதிக்க 5 வழிகள் இதோ!
இன்றைய டிஜிட்டல் உலகில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் நிறைய பேரிடம் டேலண்ட் இருந்தாலும், அந்த திறமையை அங்கீகரிக்கும் சரியான சான்றிதழ்கள் இல்லாததே வேலை கிடைப்பதில் பெரிய தடையாக இருக்கிறது.
அதனால்தான் நம்முடைய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் இலவச ஆன்லைன் பயிற்சிகளையும், அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றன. இந்தச் சான்றிதழ்களை வைத்து வீட்டில் இருந்தபடியே மாதம் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது.. இந்த சூப்பர் சான்ஸ் பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
அரசு வழங்கும் இதுபோன்ற இலவச சான்றிதழ்களை பெறுவதற்கு நீங்கள் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை. "ஸ்வயம்" (SWAYAM) மற்றும் "ஸ்கில் இந்தியா" (Skill India) போன்ற அரசு வெப்சைட்களில் கணினி இயக்க முறைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு உள்ளீடு (Data Entry) போன்ற பல பயிற்சிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
பயிற்சிகள் - அரசின் சான்றிதழ்கள்
இந்தப் பயிற்சிகளை முடித்துவிட்டு அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழைப் பெறும்போது, அது உங்கள் சுயவிவரக் குறிப்பிற்கு கூடுதல் பலத்தை தருகிறது. அதிலும் சிறு நகரங்களில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி சம்பாதிக்க முதல் வழி 'ஃப்ரீலான்சிங்' (Freelancing). அரசு அங்கீகாரம் பெற்ற டேட்டா என்ட்ரி அல்லது எம்.எஸ். ஆபிஸ் சான்றிதழ் உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலமாகப் பல நிறுவனங்களின் வேலைகளை எடுத்து செய்து கொடுக்கலாம்.
அடுத்த ஆப்ஷன், சிறு தொழில் தொடங்குவது.. அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் இருந்தால், சுயதொழில் தொடங்க வங்கிகளில் எளிதாகக் கடன் பெற முடியும்... இதன் மூலம் தையல் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றைத் தொழில்முறை ரீதியாக முன்னெடுத்துச் செல்லலாம்.
நல்ல வருமானம் - கார்ப்பரேட் நிறுவனங்கள்
மூன்றாவதாக, டிஜிட்டல் சேவை மையங்கள் கை கொடுக்கின்றன.. அரசின் சான்றிதழ் பெற்றவர்கள் தங்களின் வீட்டிலேயே ஒரு சிறிய கணினியை வைத்துக்கொண்டு, மக்களுக்குத் தேவையான ஆன்லைன் விண்ணப்பங்களைச் செய்து கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். இதற்கு அரசின் அனுமதி அல்லது பதிவு அவசியம் தேவை.
4வதாக கல்வி கற்பித்தல். அதாவது அரசின் சான்றிதழ் பெற்ற பாடங்களில் நீங்கள் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற முடியும். 5வதாக , கார்ப்பரேட் நிறுவனங்களில் கான்ட்ராக்ட் பணிகள் உதவுகின்றன.. பல பெரிய நிறுவனங்கள் அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்களைத் தற்காலிகப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தேர்வு செய்கின்றன.
சூப்பர் சான்ஸ் - கையில் ஒரு அரசு சான்றிதழ்
எனவே தேவைப்படுவோர் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். "படித்தால் மட்டும் போதாது, கையில் ஒரு திறமைக்கான சான்றிதழும் இருக்க வேண்டும்" என்ற அரசின் நோக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.
இந்த சான்றிதழ்கள் உங்கள் மீதான நம்பிக்கையை நிறுவனங்களிடம் அதிகரிக்கும். மே மாதம் விடுமுறை காலம் என்பதால், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி இந்த இலவசப் பயிற்சிகளில் சேர்ந்து சான்றிதழ் பெறலாம். கையில் ஒரு அரசு சான்றிதழ் இருந்தால், வருமானம் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை....!!!
🧵 தங்கத்தை சும்மா வெச்சிருக்காமல் அதை வேலை செய்ய வைப்பது எப்படி? 🤔
இந்திய வீடுகளில் இருக்கும் தங்கம் முதலீட்டுக் கருவியாக எப்படிப் பயன்படுகிறது, அதை பணமாக்குவதற்கான முக்கிய வழிகள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. இதோ சில முக்கிய தகவல்கள் 👇
ITR தாமாக file செய்வோர் கவனத்திற்கு:
உங்களது Gross Income, கீழ்க்கண்ட நான்கு இடங்களில் ஒரே தொகையாக இருத்தல் வேண்டும்.
1. 26AS
2. AIS
3. TDS Section in the filing screen
4. The Income Section in the filing screen
அப்படி இல்லையன்றால், உங்களது ITR தானாகவே நிராகரிக்கப்பட்டு, உங்களை மீண்டுமொருமுறை சரியாக file செய்யச்சொல்லி ஈமெயில் வரும்.
இந்த நான்கில் ஏதேனும் வித்தியாசங்கள் இருந்தால், 26AS ல் இருக்கும் தொகையினை மற்ற மூன்று இடங்களிலும் நிரப்புக.
வித்தியாசம், பெரும்பாலும் ரூ 10 க்குள் தான் இருக்கும். கவலை வேண்டாம்.
எங்கள் மூலம் file செய்ய விரும்பினால், 9629596296 என்கிற வாட்சப் எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.
PF கணக்கு வைத்துள்ளீர்களா..! EPFO புதிய விதிகள் பற்றி தெரியுமா..!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2025 ஆம் ஆண்டில் பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது PF உறுப்பினர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
முக்கிய மாற்றங்கள்:
தனிப்பட்ட விவரங்களை சுயமாகப் புதுப்பித்தல்:
உறுப்பினர்கள் இனி தங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், குடியுரிமை, தந்தை/தாயின் பெயர், திருமண நிலை, வாழ்க்கைத் துணை போன்ற விவரங்களில் உள்ள தவறுகளை, நிறுவன சரிபார்ப்பு அல்லது EPFO ஒப்புதல் தேவையின்றி, சுயமாக ஆன்லைனில் திருத்தலாம்.
ஏடிஎம் கார்டு வழங்கல்:
EPFO, PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 24 மணி நேரமும் பணம் எடுக்க உதவும் ஏடிஎம் கார்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த வசதி 2025-26 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களிப்பு வரம்பு அதிகரிப்பு:
தற்போது ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தின் 12% வரை PF கணக்கில் செலுத்துகின்றனர். இந்த வரம்பை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது, இது ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அதிக நிதி சேமிக்க உதவும்.
ஐடி அமைப்பு மேம்படுத்தல்:
EPFO தனது தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்பை மேம்படுத்தி, PF தொகையை கோரும் செயல்முறையை மனித தலையீடின்றி விரைவாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல் 2025 ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈக்விட்டி முதலீடுகள்:
EPFO, உறுப்பினர்களுக்கு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது உறுப்பினர்களுக்கு அதிக வருமானம் பெற உதவும்.
ஓய்வூதியத் தொகை பெறுதல் எளிதாக்கம்:
புதிய விதிகளின் படி, ஓய்வூதியதாரர்கள் எந்தவித கூடுதல் சரிபார்ப்பும் இல்லாமல், நாட்டின் எந்தவொரு வங்கியிலிருந்தும் தங்களின் ஓய்வூதியத் தொகையை பெற முடியும்.
இந்த மாற்றங்கள் EPFO உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
#KHByte #EPFO #India
Want to stay strong, flexible, and youthful—even at 80? Try these 3 simple morning exercises! They keep your legs, arms, neck, and shoulders in top shape. Give them a go and tell us how you feel in the comments!
ஒவ்வொரு உறுப்பும் சேதத்திற்கு முன் எச்சரிக்கை அறிகுறிகளை நமக்கு வழங்குகிறது...!
எந்த உறுப்பு என்ன மாதிரியான ஆரம்ப சமிக்ஞைகளை நமக்கு தருகிறது என்பதை கூறும் பயனுள்ள காணொளி...!
நம் கைப்பேசியில் SIM அட்டையை சொருகி ‘on’ செய்தவுடன் எப்படி குறிப்பிட்ட சேவை வழங்கும் தொலைதொடர்பு வலைக்குள் நுழைந்து தகவல்/பேச்சு தொடர்பாடலுக்கு தயாராகிறது என்பதை எளிதாக புரியும்படி விளக்குவது அருமை💐👍