நீதிக்கட்சியின் பெருமைக்குரிய தலைவர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இன்று!
#Dravidian_Model அரசின் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
நீண்டகாலம் மாமன்ற உறுப்பினராகவும், பின்னர் மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றி இன்றைய சென்னையின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
ஏழை - எளிய மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றிய பிட்டி தியாகராயர் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்து இருக்கும்.
அவர் புகழ் ஓங்கட்டும்!
#பிட்டி_தியாகராயர்
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Saddened by the demise of Thiru. Prateek Yadav, brother of Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
At this painful moment of immense sorrow, my heartfelt condolences are with beloved brother Thiru. Akhilesh Yadav and the grieving family.
May they find courage and strength to endure this painful loss.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
பொம்மலாட்டக் கலை மூலம் இளையத் தலைமுறையினரிடையே முற்போக்கு கருத்துக்களைப் பரப்பிய பொம்மலாட்டக் கலைஞர் திரு.மு.கலைவாணன் அவர்களுடைய மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
திரு.கலைவாணன் அவர்களது கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு அவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.
அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பெரியாரிய இயக்கத்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கழகம் சார்பில் போட்டியிடும் அன்புச் சகோதரர் @PmRamajeyam அவர்களுக்கு இன்று காலை உதயசூரியன் சின்னத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
இளைஞர் அணியின் நிர்வாகியாக இருக்கும்போதே ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிகாக அவர் செலுத்தி வந்த ஆர்வத்தை வாக்காளர்களிடம் சொல்லி , 5 ஆண்டு கால கழக அரசின் சாதனைகளையும்- கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்ட #SuperStar தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்து உரையாற்றினோம்.
மதநல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டில் #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @cvganesan1 அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க, நமக்கான நிதியைத் தர மறுக்கும் பாசிச பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தையும் அவர்கள் சொல்படி கேட்கும் அடிமைக் கூட்டத்தின் துரோகத்தையும் எடுத்துக்கூறினோம்.
தடைகளையெல்லாம் தகர்த்து, மகத்தான திட்டங்களை நிறைவேற்றி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சி தொடர்ந்திட, கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு திட்டக்குடி மக்களிடம் கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
மயிலம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், போட்டியிடும் சகோதரர் L.வெங்கடேசன் அவர்களுக்கு Captain விஜயகாந்த் அவர்களின் ஆதரவு பெற்ற சின்னமாம் கொட்டும் முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
அடிமைத்தனத்திற்கு பெயர்பெற்ற அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால படு பாததாள ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை மீட்ட #திராவிடமாடல் ஆட்சியின் நல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி உரையாற்றினோம்.
டெல்லியின் பாதம் தாங்கும் Carpet-களை வீழ்த்தி, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியைத் தேடி தர அயராது உழைப்போம்!
#VoteForDMK #DMK4TN
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நம்மை தேர்ந்தெடுத்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கு இன்று கழக நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்தோம்.
நம் மீது தொகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நமது மக்கள்நலப் பணிகள் தொடரும்!
#ChepaukTriplicane
தமிழர்களின் சுயமரியாதை உணர்வை தமது தீப்பொறி வரிகளால் தட்டி எழுப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
இனப்பகைவர்களின் சூழ்ச்சிகளை கூரிய வரிகளால் தோலுரித்து, தமிழினத்தை எழுச்சிக் கொள்ள செய்த பாவேந்தரின் பாடல்கள் - ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சகோதரர் வி. பி.துரை அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
மாநிலங்களை, மாநகராட்சிகள் போல் மாற்றத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க.வை ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பரப்புரை செய்தோம்.
மக்களையும் மாநிலங்களையும் காக்கும், ஜனநாயகப் போரில் #வெல்வோம்_ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் சமத்துவநாள் என்று அறிவிக்கப்பட்ட நன்னாள்.
'என்னைவிட உயந்தவரும் கிடையாது; என்னைவிட தாழ்ந்தவரும் கிடையாது" என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை நனவாக்க உழைத்துவரும் இயக்கம் நம் திராவிட முன்னேற்றக்கழகம்.
மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை சீரழிக்கத்துடிக்கும் பா.ஜ.க - அதன் அடிமையான அ.தி.மு.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி அம்பேத்கரின் சமத்துவத்தை உறுதிசெய்யும் #திராவிடமாடல் அரசு தொடர உறுதியேற்போம்.
#Ambedkar #EqualityDay #சமத்துவ_நாள்
தொகுதி மறுசீரமைப்பு எனும் பேராபத்தை, தமிழ்நாட்டுக்குள் திணிக்கும் பா.ஜ.க. எனும் அழிவுசக்தியை, தமிழ்நாட்டுக்குள் சுமந்துவரும் அடிமை அதிமுக-வை நம் வாக்குகள் மூலம் விரட்டியடிப்போம். கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மாநில உரிமைகளைப் பாதுகாப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
திண்டிவனம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வி.சி.க. சார்பில், போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு ஆதரவாக, பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் செயல்படுத்திய திட்டங்களால், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெல்லச் செய்து #NDA எனும் பேராபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்போம்.
வெல்வோம் 200, படைப்போம் வரலாறு!
#DMK4TN #VoteForDMK
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88