செருப்பை கவ்வக் கொடுத்து அடித்து விட்டது சத்தியம் தொலைக்காட்சி ......திரை மோகத்தால் சீரழியும் தமிழ்ச் சமூகம் ......பொறுப்பை உணருங்கள் ....வெறுப்பைக் கக்க வேண்டாம் ......
சென்னை மாநகரத்துல குடிக்குறதுக்கே தண்ணி இல்ல நாங்க வேலூர்ல இருந்து ரயில் மூலமா தண்ணி கொண்டு வந்தோம்.....
டெல்டால கஜா புயல்....
அப்பறம் கொரோனா.....
இந்த மூணு விஷயத்தையும் சமாளிச்சோம்...
அது எங்களுக்கு ஒரு பயிற்சி மாதிரி நாங்க எடுத்துக்கிட்டோம்....
தமிழ்நாடு மக்கள் பண்ணிய புண்ணியம் அதிமுக ஆட்சியில இருந்தது நெருக்கடியான காலகட்டத்துல....
இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
இந்த இறப்பிற்கு யார் காரணம்? ஒழுங்கீனம் இல்லாமல் எவன் செத்தாலும் பரவாயில்லை நான் விஜயை பார்க்கணும்னு வீட்டுல இருந்த குழந்தையையும் விடாமல் காட்டுமிராண்டி கூட்டம் போல கூட்டத்திற்கு கூட்டி சென்ற ரசிகனா? இத்தனை இறப்பு நிகழ்ந்த பின்னரும் கண்டு கொள்ளாமல் பிளைட் பிடிச்சி பத்திரமாக ஊர் சென்ற நடிகனா? இவ்வளவு கூட்டம் வரும் என கணிக்க தெரியாமல் இருந்த உளவுத்துறையா? ஏர்ஷோ நடத்தும் போது அப்பாவி உயிர்கள் பலியான பின்பும் மௌனம் காத்த கேடு கெட்ட இந்த அரசாங்கமா?
பாவம் பிஞ்சு உயிர் போனது... 😡
எல்லோரும் கரூரை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்க, இத்தனைக்கும் காரணமான ஒருத்தன் மட்டும் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம வீட்டைப் பார்த்து ஓடிட்டு இருக்கான்.. 💔
கொடுமை என்னன்னா 35 பேரு செத்து போன அந்த பகுதியிலதான் கடந்த 3 மணிநேரமா விஜய் இருந்துருக்கான்..
மொத்த கட்சிகளும், அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்றதுக்கு கரூர்க்கு போறாங்க, ஆனா இவன் ஆள விட்டா போதும்ன்னு அங்க இருந்து சென்னைக்கு ஓடுறான். த்தூ நீ லாம் மனுஷனா?!
TVK கட்சி தலைவர், பொறுப்பாளர்கள் யாரும் வாய் தொறக்காம இருக்கீங்க. Field ல ஒருத்தன் தலய காணோம்.
ஒரு வருத்தம் கூட தெரிவிக்கல.
நல்லா வருவீங்கடா நீங்கல்லா
🤦🏽♀️🤦🏽♀️.
உங்கள நம்பி இவ்ளோ பேர் வந்தாங்க பாரு.
எங்க பிரச்சனை நடந்து இருந்தாலும் பெரும் பொறுப்பு உங்களுக்கும் இருக்குல்ல.
மொத்த அரசு இயந்திரமும் வேகமா சூழலுது பொதுமக்கள் உயிரை காக்க, இவனுங்க கட்சி காரணுங்க ஒருத்தன் கூட காணோம் அங்க, அட்லீஸ்ட் புஷ்சி, ஆதவ், ராஜ் மோகன் எல்லாம் எங்கடா இருக்கீங்க
நியாயமா இந்நேரம் விஜய் மருத்துவமனைல இருக்கனும்.தன்னை பாக்க வந்த மக்கள் தன்னோட ரசிகர்கள்தான் இறந்து போயிருக்காங்க. அட்லீஸ்ட் புஸ்ஸி, ஆதவ்வாவது உள்ள இருக்கனும்
#karur
தன்னோட சர்விஸ் முழுக்க லஞ்சத்துல திளைச்சு அரசாங்கத்தோட எல்லா மானியத்தையும் அனுபவிச்சு தன் பிள்ளைகளை வெளிநாட்டுல செட்டில் பண்ணி ரிட்டயர்ட் ஆனா ஒரு ஏ கிரேட் ஆபிசர்ட உங்க பென்சன் எவ்வளவுனு கேட்டா 82000னு சொல்லுவாங்க. எந்த பொருளாதார தேவையும் இல்லாம சும்மா பங்களா வீட்ல ஏசிய போட்டு மல்லாக்க படுத்துருக்க ஒருத்தருக்கு டெய்லி அரசாங்கம் 2500ருபா தூக்கி குடுக்குது.ஆனா இந்த துப்புறவு பணியாளர்கள் சம்பளத்தை ஏற்கனவே குடுத்துட்டு இருந்ததுல இருந்து 5000ருபா குறைச்சு குடுத்துட்டு அதையும் பேச்சுவார்த்தைனு இழுத்தடிச்சுட்டு இருக்காங்க.
தான் பெறாத பிள்ளைக்கு யாராவது தாய்பால் குடுத்தா இது தான் தாய்மையின் மேண்மைனு பயர் விடுவாங்க.தான் பெறாத பிள்ளையோட சீய் அள்ளி போட யாருமே தயாரா இருக்க மாட்டாங்க,ஒருசிலர் தவிர்க்கமுடியாத சூழல்ல செய்வாங்க.ஆனா ஒரு தெருவுல 50 டஸ்பின் வெளிய வைச்சா அதுல 30ல டைபர் இருக்கும்.அதுவும் முறையா பேக் பண்ணி வைச்சிருக்க மாட்டாங்க.பேஸ்கட் பால் மேட்ச்ல கோல் போடுற மாதிரி வீட்ல எதாவது ஒரு மூலைல இருந்து டஸ்பின்ன நோக்கி எறிஞ்சுருப்பாங்க.இவங்க ஆதையும் வெரும் கையால எடுத்து பிரிச்சு போட்டு எடுத்துட்டு போகனும் .இந்த வேலைக்கு நடுல டீ வடை சாப்பிட்டு லஞ்ச் சாப்ட்டு இதே வேலைய கண்டிநியூ வேற பண்ணணும்.
25000பேசிக் பே இருக்க குருப்4க்கு பலவருசம் மாங்கு மாங்குனு படிப்பாங்க,ஆனா யாரும் 50000குடுத்தாலும் இந்த வேலைய செய்ய முன்வரமாட்டாங்க. இவங்க இந்த வேலைய தேர்ந்தெடுக்கலை,இந்த வேலை தான் இவங்களை தேர்ந்தெடுத்துருக்கு.
அங்காடிதெரு படத்துல வேலைக்கு ஆள் எடுக்குறப்ப அப்பன் இல்லாத நிறைய அக்கா தங்கச்சி இருக்கவங்களா பாத்து எடுக்க சொல்லுவான் ஜவுளிகடை மேனேஜர்.அப்ப தான் உழைப்பு சுரண்டலுக்கு எதிரா குரல் குடுக்கமாட்டான்.எவ்வளவு வேனும்னாலும் கசக்கி பிழிஞ்சுக்கலாம்னு நினைப்பாங்க.துப்புறவு வேலைக்கு வர்ற பெண்களோட பயோடேட்டாலாம் ஒரே மாதிரி தான் இருக்கும் ,ஒன்னு டாஸ்மார்க்ல புருசனை தொலைச்சுருப்பாங்க இல்லனா தொலைச்சுட்டு இருப்பாங்க.வேற எந்த பொருளாதார சப்போர்ட்டும் இல்லாது மாசம் பிறந்தா அக்கவுண்ட்ல ஏறுற நிலையான சம்பளத்தை மனசுல வைச்சுட்டு தான் இந்த வேலைய ஏத்துக்குறாங்க.காண்டிராக்ட் ஒரு லேபருக்கு இவ்வளவுனு முன்னமே அரசாங்கத்துட்ட வாங்கி அதுல இருந்து தலைக்கு 5000பிடிச்சுட்டு சம்பளமா தருவாங்க. அரசு அந்தவேலைக்காக செலவிட நினைக்குற தொகையை விட குறைவா தான் வேலை பாக்குறவங்களுக்கு போய் சேறும்.இதுவே அபத்தம் தான். பெண் உரிமை,விடுதலை,முன்னேற்றம் இது எல்லாத்துக்கும் இந்த வேலைய அரசே ஏற்று நடத்துனாலே போதும்.மோனோபோலியா வேற எந்த துறைல இருந்தாலும் பணம் கோடில கொட்டும்,நல்ல மரியாதை கிடைக்கும்,பலநூற்றாண்டா துப்புறவு பணியாளர்களா குறிப்பிட்ட ஆட்கள் மட்டும் தான் மோனோபோலியா இருக்காங்க,ஆனா அவங்களுக்கு அதுக்கான ஊதியமோ,மரியாதையோ என்னைக்குமே கிடைச்சது இல்ல.
அவங்களோட நியாயமான கோரிக்கைய ஏற்று தினமும் சந்தோசமா மனநிறைவோட வேலைக்கு கிளம்பி வர்ற மாதிரியான ஊதியத்தை கொடுக்க வேண்டியது அரசோட கடமை...