மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!
பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு நோக்கு! பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம்! முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் செயல்வேகம்!
மக்கள் நலனுக்குப் பல திட்டங்களை வகுத்து, செம்மையுடன் செயல்படுத்தி, நாடே வியக்க நல்லாட்சி புரியும் நாயகர்!
மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் காக்கும் ஜனநாயகப் போரில் வெற்றி பெற அயராமல் உழைத்துவரும் ஆற்றல்மிகு தலைவர்!
என்றும் எனது வழிகாட்டி, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
அறத்தான் வருவதே இன்பம்' என்கிற குறள்மொழிக்கேற்ப மக்களுக்கு தொண்டாற்றுவதில் இன்பம் கண்ட கண்ணியமான பொதுவாழ்க்கைக்கு உரியவரான எனது தந்தை பண்பாளர் திரு. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது தொண்டின் சாட்சியமாக பலதரப்பட்ட மக்கள் அவரைப்பற்றி நன்றியுணர்வுடன் கூறிய பாசமொழிகளும், மதுரைக்கு அவர் முயற்சியால் விளைந்த நலத்திட்டங்களும் என் நினைவுகளில் நிறைந்து நெகிழச்செய்கின்றன. @ptrmadurai
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் 'UmagineTN 2024' மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பித்தமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாவேன். தலைவர் அவர்களின் பாராட்டும், அவர் அளித்து வரும் அசைக்க முடியாத ஆதரவும் எனது பொது வாழ்வு முழுவதும் மிகுந்த உத்வேகத்தை அளித்து வருகிறது . உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் மனித வளத்திற்கான முன்னணி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவும் மாற்றங்களைச் செயல்படுத்த எங்களது தகவல் தொழில்நுட்பத் துறை அயராது பாடுபடும்.
மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தூத்துக்குடியில் இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை துவங்கியது. கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். @ptrmadurai அவர்கள், நேற்று (15/01/24) மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை குடும்பத்தினருடன் பார்வையிட்டு, மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்களுடன் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி.சங்கீதா, மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் திரு. மதுபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள், நேற்று(15/1/01/24) மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50 வது வார்டு பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், நாட்காட்டிகள் வழங்கினார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆஸ்திரேலியா தின விழா மற்றும் துணைத் தூதர் சாரா கிர்லேவ் @AusCGChennai அவர்களுக்கான பிரிவு உபச்சார விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களுடன் கலந்து கொண்டார்.
Delivered keynote address on "Gen AI and Deep Tech: The Game Changer" at the Global Investors Meet 2024 today and spoke on the Tamilnadu government's commitment —Using AI and Deep Tech— to foster inclusivity, cultivate an entrepreneurial ecosystem, nurture excellence in AI and DeepTech, and craft national policies collaboratively for responsible and ethical deployment of transformative technologies.
சென்னை தலைமைச் செயலகத்தில் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்களின் தலைமையில், Game Developer Association of India கூட்டமைப்பைச் சார்ந்த பல்வேறு ஆன்லைன் கேம் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு அனிமேஷன், விஸ்வல் எபெக்ட்ஸ், கேமிங் & காமிக் (AVGC) கொள்கை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு. தீரஜ் குமார் IAS, ELCOT மேலாண்மை இயக்குனர் திரு. அனீஸ் சேகர் IAS, செயல் இயக்குநர் திரு. அருண் ராஜ் IAS உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள் , சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (@iitmadras) வளாகத்தில் நடைபெற்ற 'Shaastra 2024' தொழில்நுட்பக் கருத்தரங்கத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
May this new year bring happiness to our hearts, prosperity to the lives of common people, foster peace and brotherhood in society and usher in a wave of technological marvels. Wishing you a Happy New Year!
பிறக்கும் புத்தாண்டு,
மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும் ஆண்டாக,
எளிய மக்கள் வாழ்வில் வளம் பொங்கும் ஆண்டாக,
சமூகத்தில் அமைதியும் சகோதரத்துவமும் நிலவும் ஆண்டாக,
தொழில்நுட்பத்தில் புதுமைகள் பல படைக்கும் ஆண்டாக அமையட்டும்!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் சிறப்பு முகாமில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள் மாற்றுதிறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா IAS , மதுரை மாநகராட்சி மேயர்.இந்திராணி பொன்வசந்த் கலந்து கொண்டனர்.