#திராவிடமாடல் ஆட்சியில் 3.77% ஆக இருந்த விலைவாசியை, இந்த #CircusSarkar-இல் 5.45% ஆக உயர்த்தி, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது.
நிர்வாகம் தெரியாதவர்கள் ஆட்சி செய்தால், பொருளாதார வளர்ச்சி எல்லாம் வராது; விலைவாசி தான் உயரும்!
#PriceHike#Inflation#TVKVijayFails
என்ன மேட்ச், எந்த டீம் என்றே தெரியாமல் கண்டதை கதையடித்து விடக்கூடாது பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை யார் என்று கூகுள் செய்து பார்த்தாலே தெரியும். அமைச்சரே இதையெல்லாம் பார்த்து தெரிந்துகொண்டு பேசுங்கள், சட்டமன்றத்தில் போய் உளறிக்கொண்டிருக்காதீர்கள்!
இன்று (27.08.2026) சட்டப்பேரவையில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தையொட்டி ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேபாள நாட்டின் ராசூவா பகுதியில் நேற்றைய தினம் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கே 750 பேரைக் காணவில்லை என்று செய்திகள் வருகின்றன.
40-க்கும் மேற்பட்ட தமிழர்கள்
சுற்றுலா சென்ற கிட்டத்தட்ட 110 இந்தியர்கள் அந்தப் பேரிடரில் சிக்கியீருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிக்கி இருப்பதாக செய்திகள் தொடர்ந்த வண்ணம் வருகிறது. நேபாளம் சென்ற குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று, இங்கு இருக்கின்ற அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறாகள். இந்த சம்பவத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கி இருக்கிறார்கள்? அதில் எத்தனை பேரை நாம் மீட்டு எடுத்துள்ளோம்?
என்ன மேல் நடவடிக்கைகள்?
தமிழ்நாடு அரசு சார்பாக, நேற்று அவசர உதவி எண்ணையும் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அரசு அறிவித்த அந்த உதவி எண்களுக்கு, இதுவரை எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? அந்த அழைப்புகள் தொடர்பாக, என்ன மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?
இந்த நிலைமையில் தமிழர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கு, தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு சிறப்பு அதிகாரியை, இந்த அரசு நியமித்துள்ளதா? அவர்கள் நேபாளம் செல்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?
மேலும், இந்தப் பெருவெள்ளத்தில், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சிவஞானம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக இந்தத் தகவலை, விரிவான ஒரு கடிதம் மூலமாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களிடம் நேற்று மாலை நேரில் சென்று கொடுத்துள்ளார்.
குடும்பங்களுக்கு உறுதுணை
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருக்கவேண்டும், என்று கேட்டுக்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பாக, அரசு உரிய விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நீங்கள் கேள்வி நேரத்தை எடுத்துள்ளீர்கள். 5 கேள்விகளுக்கு அனுமதி அளித்துள்ளீர்கள். 5 கேள்விகளுக்கும் நம் அமைச்சர் அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள். துணை கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
என் வேண்டுகோள். இந்தக் கேள்வி நேரம் நடக்கும்போது, அந்தத் துறையின் செயலாளர்கள் இந்த அவைக்கு வரவேண்டும். அவர்கள் அதை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும். அதேபோல, கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்துள்ளோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொடுத்துள்ளார்கள். ஆனால், நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாகவே, ஒரு அமைச்சர் அவர்கள் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். அதையும் நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.
உடனே கரூர் சம்பவத்துடன் ஒப்பிடுகிறீர்கள். எனவே, அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், கரூர் சம்பவம் நடக்கும்போது, இங்கு அவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே இருந்து பதில் சொன்னார்கள். இப்போது முதலமைச்சர் அவர்களும் இல்லை, தலைமைச் செயலாளர் அவர்களும் இல்லை. எனவே, இதையெல்லாம் நீங்கள் கவனத்தில்கொண்டு துறை பிரச்சினை வரும்போது, அந்தந்தத் துறையின் அதிகாரிகள் இங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சட்டப்பேரவையில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை ஆற்றினார்.
#TNAssembly #UdhayanidhiStalin
The New Indian Express நாளிதழ் வெளியிட்ட தவறான செய்தியைக் சுட்டிக்காட்டி கழக சட்டத்துறை இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் திரு.இ.பரந்தாமன் அவர்களது அறிக்கை.
இன்று (27.08.2026) The New Indian Express நாளிதழில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம்-2026 தொடர்பாக, முதல்வர் விஜய் ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக கிடைத்த ‘தகவல்’ அடிப்படையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அரசின் அதிகாரப் பூர்வக் கடிதம் இதுவரை வெளியாகாத நிலையில் ‘Source’ கள் சொன்ன தகவலை வைத்து செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அதில் கூடுதலாக இந்த சட்ட திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை என்ற பொய்யான ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திமுக சார்பில் 12/08/2026 அன்று மேனாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒன்றிய பாஜக அரசின் இந்த சட்ட திருத்தம் 'நிதிக் கூட்டாச்சியின் மீதான நேரடி தாக்குதல்' இது என்று கண்டித்தார். 13/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 'இது மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் & மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் மசோதா' என்று வெளிப்படையாக கண்டித்தார் . மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திரு.திருச்சி சிவா அவர்களும் , மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம் அவர்களும் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர்.
14/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 'இந்த சட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஏன் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார்’ என்று கேள்வி எழுப்பிய பிறகு தான் தவெக சார்பில் முதல்வர் விஜய் ஒரு கடிதம் எழுதி உள்ளார் என தகவல் சொல்லபட்டது. அப்போதும் அதுபற்றிய அரசு கடிதத்தை வெளியிடவில்லை. திமுக கேள்வி எழுப்பும் வரை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 பற்றி வாய்திறக்க கூட திராணியற்று இருந்தது தவெக அரசு.
உண்மைகள் இவ்வாறாக இருக்க வெறும் தகவல் அடிப்படையில் முதல்வர் விஜய் எதிர்த்ததாக ஒரு செய்தியை வெளியிடுவதில் அக்கறை காட்டி இருக்கும் The New Indian Express பத்திரிகை, நாடாளுமன்றத்திலும் சரி , ஊடகம், பத்திரிகைகளின் வாயிலாகவும் சரி வெளிப்படையாக ஒன்றிய அரசின் இந்த சட்டத்தை திமுக எதிர்த்த போதும், எதிர்க்கவில்லை என்ற வகையில் தவறான செய்தி வெளிட வேண்டிய தேவை என்ன.? அழுத்தம் என்ன.?
இந்த செய்தியானது The New Indian Express நாளிதழ் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்குகிறது. ஆகவே சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 சார்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த தவறான செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, திமுக வின் உண்மையான நிலைப்பாட்டை பதிவு செய்வது தான் ஊடக அறமாக இருக்கும்.
#BREAKING | “துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்”
-சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தல்
#SunNews | #UdhayanidhiStalin | #TNAssembly
பாஜக பற்றி அமைச்சர் வன்னியரசு பேசியவுடன் , அத நம்ம விட்டுறலாம்னு அமைச்சர் ஆதவ் சொல்லி வாய் மூடி வாழத் தொடங்கிய தவெக மற்றும் கூட்டணியினர்
தமிழ்நாடு நலன் கருதி பேசுவது எப்போது? வடக்கு நண்பர்கள் ரீல்ஸ் மூலமாவது கேள்வி கேட்கப்படுமா? ரீல்ஸ் துதி பாட மட்டும் தானா?
OG திமுக 🔥🔥
அருமையான நேர்காணல்
அண்ணா, கலைஞர் மற்றும் தளபதி ஸ்டாலின் இவர்கள் தன் தொண்டர்களை எப்படி அரவணைத்து செல்வார்கள் என்று தன் அனுபவங்களை பகிர்ந்த OG திமுக♥️♥️ ஆமாம் திமுக குடும்பக்கட்சி தான்
Full video link 🔗
https://t.co/mcUyCs58vV
ஒருவர் தன் 80 வயதை கடந்தும் கூட தன்னை பற்றி தூற்றியவர்களை , வசைபாடியவர்களை பற்றி மீண்டும் பேசாமல்
மக்களின் நலன் பற்றி மற்றுமே யோசித்து வாழ்நாள் முழுவதும் உழைத்த தகத்தகாய சூரியன் 🖤❤
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
மேன் மக்கள் மேன் மக்களே