மாறுவேடத்தில் வந்து
தாயத்து விற்பார்
மகாதேவியில் எம்.ஜி.ஆர்
ஒரு குடிமகன் கேட்பான்:
“ஏப்பா! பணவருமானத்துக்கு
ஏதாவது இருக்கா இதுல?”
பட்டுக்கோட்டை வரிகளை
வாங்கிப் பாடுவார் எம்.ஜி.ஆர்
“உடம்ப வளச்சு நல்லா
உழச்சுப் பாரப்பா அதில்
ஒனக்கும் ஒலகத்துக்கும்
நன்மை இருக்கு
சும்மா உக்காந்திருந்துக்கிட்டுச்
சேக்குற பணத்துக்கு
ஆபத்திருக்கு
அது ஒனக்கெதுக்கு?”
மனிதர்கள்
நெற்றிப்பொட்டில்
ஒட்டிக்கொள்ள வேண்டும்
பட்டுக்கோட்டையின் இந்தப்
பாட்டு வரிகளை
1957இல் எழுதப்பட்டது
2157-க்கும் பொருந்தும்
செங்கப்படுத்தான் காட்டுச்
செங்குயிலே!
சினிமாவில் அடித்த
பொன்வெயிலே!
உன்
நினைவுநாள் இன்று
நினைக்காத நாள் என்று?
உன் நூற்றாண்டை
நானெடுப்பேன்
வா வந்து பார் அன்று
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
உத்தமர்
காந்தியடிகளை நோக்கி
முக்கியமான கேள்வியொன்று
முன்வைக்கப்பட்டது
"சமூகத்திற்கு உங்களின்
சேதி என்பது யாது?"
'அகிம்சை'
என்று சொல்லவில்லை
'சுதந்திரம்'
என்று சொல்லவில்லை
'மத நல்லிணக்கம்'
என்று சொல்லவில்லை
'அறம்'
என்றும் சொல்லவில்லை
"என் வாழ்க்கைதான்
சமூகத்துக்கு நான் வழங்கும்
சேதி” என்றார்
இப்படிச் சொல்ல
வாழும் மனிதர் யார்க்கும்
துணிச்சல் வருமா?
சொன்னால்
அதில் மெய்யிருக்குமா?
இந்த மெய்ம்மை நேர்மை
இரண்டினால் மட்டும்தான்
போராடி இறந்தபின்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அந்தப்
போர்பந்தர் புத்தர்
வாழ்க நீ எம்மான்!
திருச்சி
மெஜஸ்டிக் மஹாராஜா
ஆடை மாளிகைத்
திறப்பு விழாவில்
கலந்துகொண்டேன்
கடல்போல் அகன்றும்
மலைபோல் உயர்ந்தும்
நிமிர்ந்து நிற்கும்
நெடுமாளிகை அது
வாழ்த்திப் பேசினேன்:
"கவிப்பேரரசை இந்த விழாவுக்கு
ஏன் அழைத்தேன் என்று
மஹாராஜா உரிமையாளர்
ஆசிப் அலி
ஒரு நீண்ட பட்டியல் வாசித்தார்
என் வருகைக்கு
அந்தக் காரணங்கள்
எதுவும் தேவையில்லை
நானும் ஆடை உடுத்துகிறவன்
என்ற ஒரே காரணம் போதும்
90 ஆண்டுகளாய்ப்
படிப்படியாய் வளர்ந்துவரும்
மஹாராஜாவைப் பாராட்டுகிறேன்
ஒரு மனிதனுக்கு
இரண்டே இரண்டுதான்
மிக முக்கியம்.
ஒன்று உயிர்;
இன்னொன்று மானம்
உண்டி கொடுக்கிறவன்
உயிரைக் காப்பாற்றுகிறான்;
ஆடை கொடுக்கிறவன்
மானத்தைக் காப்பாற்றுகிறான்
அதனால் உங்கள் தொழில்
உயர்ந்த தொழில்
இந்தியாவில் 63 விழுக்காடு
ஆடை உற்பத்திதான்;
இந்தியாவின் 13 விழுக்காடு
ஏற்றுமதியும் அதுவேதான்
இந்தத் தொழிலுக்கு
வளர்ச்சி உண்டே தவிர
வீழ்ச்சி இல்லை
தஞ்சைக்கும் திருச்சிக்கும்
உள்ள தூரத்தைகக் கடக்க
உங்களுக்கு 90 ஆண்டுகள்
தேவைப்பட்டிருக்கிறது
நிதானமாக வளர்கிறீர்கள்;
நிரந்தரமாக நிலைபெறுவீர்கள்
வாழ்த்துகிறேன்"
ஆசிப் அலியும்
சகோதரர்களும்
மலர் மாலை என்ற பெயரில்
மலர் மலை ஒன்றை அணிவித்தார்கள்
சென்னைக்கு வரும்வரைக்கும்
அந்த வாசம்
என் உள்ளங்கையில் ஒட்டியிருந்தது
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
Attended the Home Affairs Committee meeting in Delhi today to hear the views of the Ministry of Law and Justice on “Crimes against Children” and the views of the Ministry of Development of North Eastern Region on the implementation of Centrally Sponsored Schemes (CSS) in North-Eastern States.
நீலாங்கரை
நிதி மேலாண்மையாளர்
கார்த்திகேயன் - வளர்மதி
இணையரின்
புதுமனை புகுவிழா
மலேசியாவிலிருந்து
வாழ்த்த வந்திருந்த
டத்தோஶ்ரீ எம்.சரவணன் -
டத்தின்ஶ்ரீ கவிதா
இணையரின்
திருமண நாளும் அதுதான்
மனை புகுவிழா
மணம் புகுவிழா இரண்டையும்
நிறைவோடு நிகழ்த்திவைத்தேன்
நண்பர்களின் வளர்ச்சி
எப்போதும் எனக்குப்
பெருமகிழ்ச்சி
"விட்டு விடுதலை ஆகும்
இடமே வீடு
அதில் ஆரோக்கியம்தான்
முதற்பேறு" என்று குறிப்பிட்டேன்
புதுமனை புகுவிழாப் பாட்டு:
"ஜன்னல் வழியே காற்றே வருக
கதவு வழியே செல்வம் வருக
வடக்குப் பார்த்தே வாசல் வைத்தோம்
வாழ்க்கை செழிக்க
முன்னே காணும் புல்வெளி வாழ்க
மொட்டை மாடி ரோஜா வாழ்க
ஊமைத் தென்றல் ஓடிவரட்டும்
ஊஞ்சல் அசைக்க
எங்கள் இதயம் அடுக்கிவைத்து
இந்த இல்லம் எழுந்ததம்மா
நீ சுவரில் காது வைத்தால்
மனத் துடிப்பு கேட்குமம்மா
நம் சொந்தம் வளர்ந்திருக்க
பந்தம் தொடர்ந்திருக்க
தலைமுறை இருபது
வாழும் நம் வீடு"
சென்னை வடகிழக்கு மாவட்டக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.சன் முனியாண்டி அவர்களின் இல்லத் திருமண விழாவில், கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவருமான திரு@Udhaystalin மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு@SUDHARSANAM_S அவர்களுடன் பங்கேற்று மணமக்கள் M.சந்தோஷ்பாண்டியன் - S.அரசி (எ) தர்ஷினி ஆகியோரை வாழ்த்தியபோது...
உடன் கழக அயலக அணித் தலைவரும் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான @DrKalanidhiV, கழக ஆதி திராவிடர் நலக்குழுச் செயலாளர் திரு.ஆ.கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜோசப் சாமுவேல், திரு.கே.பி.பி.சங்கர், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் திரு@Sureshjmanoharn , செல்வி@nive_jessie , திரு@Gowthaman2016, திரு@babu2577 , திரு@israthdmk மற்றும் கழக முன்னணியினர்…