@CMOTamilnadu@Chief_Secy_TN@AadhavArjuna பழைய டாஸ்மாக் காலி பாட்டில் பிரச்சனை சம்பந்தமாக முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
மக்கள் முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இதை நீங்களும் பின்பற்றினால் இளைஞர்கள் மது
பழக்கத்தில் இருந்து விடுவிக்க ஏதுவாக அமையும் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகளை நேரில் அனுப்பி ஆய்வு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@CMOTamilnadu மாற்றங்களைக் கொண்டு வரும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடு முழுவதும் Tasmac காலிபாட்டில்தொழில்ஐந்து லட்சம்மக்கள்வேலை வாய்ப்புபெற்று வருகிறார்கள்500சிறு முதலீட்டாளர்கள்தொழில் செய்கிறார்கள்இரண்டு ஆண்டுகளாக பல பிரச்சினைகள் எங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்
பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் செய்தி அறிக்கை!
எனக்கு சற்று உடல்நலகுக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு முழு இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்யப்பட்டிருந்ததால் சிறப்பு மருத்துவர்கள் இதய பரிசோதனை ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமென தெரிவித்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தார்கள். ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலமாக உள்ளேன். சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்கள். மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு வீடு திரும்பியுள்ளேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னோடிகள், பல்வேறு அமைப்புகளை சார்ந்த கீழ் குறிப்பிட்டுள்ளவர்கள் நேரில் வருகை தந்தும், கைபேசியிலும் உடல் நலம் விசாரித்து முழு நலம்பெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார்கள்.
என்மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டுள்ள எனது உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள் குடும்பத்தோடு பூரண குணமடைய வேண்டுமென ஆவலோடு துடித்துக் கொண்டிருந்தார்கள். நேரிலும், கைபேசியிலும் நலம் விசாரித்து வாழ்த்து கூறியவர்கள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு.
முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள், அமைச்சர்கள் திரு. ஏ. வ. வேலு அவர்கள், திரு. கே. என். நேரு அவர்கள், மத்திய அமைச்சர்கள் திரு.எல்.முருகன் அவர்கள், திரு. முரளிதர் மோகல்ஜிஅவர்கள், பாரதிய ஜனதா மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே.வாசன் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. வீரபாண்டியன் அவர்கள், முன்னாள் செயலாளர் திரு. முத்தரசன் அவர்கள், பெருந்துறை பெரியசாமி – மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு. சண்முகம் அவர்கள்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான திரு. சீமான் அவர்கள், திரைப்பட இயக்குனர் திரு. சேரன் அவர்கள், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் திரு. கமல்ஹாசன் எம்.பி., அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. திருநாவுக்கரசர் எம்.பி., அவர்கள், திருமதி. சசிகலா நடராஜன் அவர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் அவர்கள் ,தேமுதிக தலைவர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், பொருளாளர் திரு. எல்.கே.சுதீஷ் அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., அவர்கள், மதிமுக துணை பொதுச் செயலாளர் திரு. துரை வைகோ எம்.பி., அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள், முன்னாள் சென்னை மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள், பொது செயலாளர் திரு. ரவிக்குமார் எம்.பி., அவர்கள், திரு. சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., அவர்கள், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி திருமதி. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அவர்கள், பாரதிய ஜனதா தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர்கள், திருமதி.வைஜெயந்தி பாண்டாஜி அவர்கள், திரு. அரவிந்த் மேனன் அவர்கள், திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், கன்னட தொலைக்காட்சி - உதயா உரிமையாளர் திருமதி. மு.க. செல்வி செல்வம் அவர்கள், திருமதி. விஜயதாரணி மு.எம்.எல்.ஏ., அவர்கள், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. சுதா எம்.பி., அவர்கள், புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. பூவை ஜெகன் மூர்த்தி அவர்கள், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு. தனியரசு மு.எம்.எல்.ஏ., அவர்கள், ஜனநாயக மக்கள் கட்சி திரு. தமிமுன் அன்சாரி மு.எம்.எல்.ஏ., அவர்கள், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள், தமிழ்நாடு சிவசேனா கட்சி தலைவர் திரு. சிவசக்தி அவர்கள், SDP கட்சி மாநில செயலாளர் திரு. A.K.கரீம் அவர்கள்,
நான் முழு நலம் பெற வேண்டி நேரில் வருகை தந்தும், கைபேசியில் பேசி நலம் விசாரித்தும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது உயிரையே வைத்து குடும்பங்களோடு பூரண குணமடைய வேண்டிக்கொண்டிருக்கும் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@mkstalin@drramadoss ஊமை ஜனங்களின் பாதுகாவலர் மருத்துவர் ஐயாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழகத்தின் முதலமைச்சர் அண்ணன் m.k.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
@CMOTamilnadu ஐயா காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் அய்யம்பேட்டை மின் பகிர்மான கிராமங்களில் 15 நாட்களாக சீரான மின்சாரம் வழங்காமல் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை பொதுமக்கள் நான்கு நாட்களுக்கு முன்பு சாலை மறியல் உட்பட போராட்டங்களை செய்து விட்டார்கள் நிலைமை சீராகவில்லை
@sivasankar1ss காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரம் அய்யம்பேட்டை மின் பகிர்மான பகுதிகளில் கடந்த 15 நாட்களாக இரவில் தூங்கவே முடியவில்லை மின்தடை அல்லது குறைந்த அழுத்த விநியோகம் நான்கு நாட்களுக்கு முன் சாலை மறியல் உட்பட செய்து விட்டார்கள் மக்கள் தீர்வு இல்லை
@sivasankar1ss காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரம் அய்யம்பேட்டை மின் பகிர்மான பகுதிகளில் கடந்த 15 நாட்களாக இரவில் தூங்கவே முடியவில்லை மின்தடை அல்லது குறைந்த அழுத்த விநியோகம் நான்கு நாட்களுக்கு முன் சாலை மறியல் உட்பட செய்து விட்டார்கள் மக்கள் தீர்வு இல்லை
@CMOTamilnadu காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வள்ளுவ பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளம் மற்றும் தான்தோன்றீஸ்வரர் கோவில் நிலங்கள் UDRல் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றுள்ளார்கள் பலமுறை புகார் அளிக்கும் நடவடிக்கை இல்லை தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்