@itisprashanth Does you have reasoning capabilities? sattai reached million subscription before he taking about vijay. Man, how these guys think? have any brain?
@MagizhanKeetru well said. Pari does not like to unite tamil nationalist. He won’t show flexibility with NTK but shows to other party. He is a egomaniac.
பரி என்று நினைத்து நரியைக் கொஞ்ச முடியாது! - பாரிசாலனின் நச்சு அரசியலும், சமரச முகமூடியும்
அனைவருக்கும் வணக்கம்.
பாரிசாலன் என்ற நபர், நாம் தமிழர் கட்சியின் மீது எப்படித் திட்டமிட்டு வெறுப்பை அறுவடை செய்கிறார், தமிழ்த் தேசிய அரசியலை எப்படி நீர்த்துப்போகச் செய்கிறார் என்பதைச் சற்று ஆழமாகப் பார்ப்போம். முழுமையாகப் படித்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள்.
நடுநிலை என்ற பெயரில் நச்சு அரசியல் (False Equivalence):
ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளையே தானும் பேசுவது போல் பாசாங்கு செய்து, "நானும் உங்களில் ஒருவன்" என நம்பவைப்பது. பின்னர் தொடர்ந்து கட்சியின் மீது விமர்சனங்களை மட்டுமே வைத்து மக்களிடம் ஒரு அயர்ச்சியை உருவாக்குவது. நாம் தமிழர் கட்சியை, அதிமுக மற்றும் தவெக (TVK) போன்ற கட்சிகளோடு ஒப்பிடுவது; அவர்களின் பெருந்தவறுகளை மூடிமறைத்துவிட்டு, நாம் தமிழரின் உப்புச்சப்பற்ற சிறு நிகழ்வுகளைப் பூதக்கண்ணாடியில் காட்டி, "எல்லாரும் ஒண்ணுதான்" என்ற பிம்பத்தை உருவாக்கி நாம் தமிழரின் தனித்துவத்தை அழிப்பதே இவரது முதல் வேலை.
பிரித்தாளும் ஆரிய சூழ்ச்சி:
"ஆடு பகை, குட்டி உறவு" என்பது போல, நாம் தமிழர் கட்சியின் தலைமை சரியில்லை என்ற பிம்பத்தைக் கட்டமைப்பது. அதேநேரம், மற்ற கட்சிகளில் இருப்பவர்கள் சரியானவர்கள் என்று கூறி, இளைஞர்கள் மத்தியில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்துவது. இவர்களில் யார் வென்றாலும் தமிழ்த் தேசியத்திற்கு வெற்றிதான் என்று ஒரு போலி பிம்பத்தை உருவாக்குவது. ஆரியத்தின் அத்தனை பங்காளி வேலைகளையும் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் தமிழர் மீது முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்வது. திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் பார்வையில் இருக்கும் சில நூறு வாக்குகளை தவெக பக்கம் மடைமாற்றியதில் இவரது இந்த உள்ளடி வேலைகளுக்கும் பெரும் பங்குண்டு.
முரண்பாடுகளின் மொத்த உருவம் - பாரிசாலன்:
சசிகலா விவகாரம்: சசிகலா சிறையிலிருந்து வெளிவந்தபோது, ஈழப்பற்றாளர் நடராசனின் மனைவி என்ற அடிப்படையில் சீமான் அவரைச் சந்தித்ததைக் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவே தேவையில்லை என்றார். ஆனால், அதே நபர் இன்று 2024, 2026 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கூசாமல் பேசுகிறார்.