Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
ஒருமுறை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் என்னிடம் பேசும்போது சொ��்னார்:
"சீனு, நான் வசனங்களைத் தமிழில்தான் எழுதுகிறேன். ஆனால் என் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலம் கெடுத்துவிட்டது."
உங்களுக்குப் புரிகிற மாதிரிச் சொல்ல வேண்டுமென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வசனங்களைச் சற்று வேகமாகப் பேசுவதற்கும், கமல்ஹாசன் அவர்கள் வசனங்களைப் பேசுவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசம்,
நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கும் அண்ணன் சிவகுமாருக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போன்றது.
சில நேரங்களில், சிறப்பாக எழுதக்கூடியவர்களால் இயல்பாகப் பேச முடியாமல் போவதற்கும் இதுவே காரணமாகிறது. எழுதுவது வேறு, பேசுவது வேறு என்ற முரண் இங்குப் பெரிதாகிவிடுகிறது.
உதாரணத்திற்கு, விவிலியத்தைப் பாதிரியார் பீட்டர் பெர்சிவல் தமிழில் மொழிபெயர்த்தபோது, அவருக்கு உதவிய இலங்கையின் ஆறுமுக நாவலர் அதைச் செறிந்த இலக்கண நடையில் அமைத்தார். இதன் விளைவாக, எழுத்து மொழியும் வழிபாட்டு மொழியும் பேச்சு வழக்கிலிருந்து விலகி, வேறு ஒரு தளத்திற்குச் சென்றன.
இது, காஞ்சி மகா பெரியவர் அருளிய 'தெய்வத்தின் குர��்' நூலின் நடைக்கும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு நடைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது.
இலக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், லா. சா. ரா. அவர்களுக்கும்
கி. ராஜநாராயணன் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
நாம் எந்த மொழியில் சிந்தித்துக் கருத்தாக்கம் செய்கிறோமோ, அதுவே நம் மனத்திற்கு இயல்பான மொழி.
உதாரணமாக, அமெரிக்காவில் பிறந்து வளரும் ஒரு தமிழ்க் ���ுழந்தைக்குத் தமிழ் சிந்திக்கும் மொழியாக இருப்பதில்லை. அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் புரிந்தாலும், மனதிற்குள் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புரிந்துகொண்டு, பதிலையும் ஆங்கிலத்திலேயே கூறுகிறார்கள். இதன் விளைவாகவே, பேச்சுவழக்கில் தமிழும் ஆங்கிலமும் கலந்த 'மணிப்பிரவாள' நடையும், ஒருவித உச்சரிப்புத் தொனியும் பிறக்கின்றன.
ஆழமாக யோசித்துப் பார்க்கையில், ஒரு மனிதனின் உண்மையான தாய்மொழி என்பது அவனது சிந்தனைமொழிதான் என்ற உண்மை புலப்படுகிறது.
"செந்தமிழும் நாப்பழக்கம்" என்பார்கள் பெரியோர்கள்.
மொழி என்பது தகவல்தொடர்புச் சாதனம் என்றாலும், அது நம் சிந்தனையின் வடிவம். தொடர்ச்சியான உரையாடலும் தாய்மொழியிலேயே சிந்திக்கும் வழக்கமுமே ஒரு மொழியைத் தன் இயல்பான அழகோடு நாவில் நிலைநிறுத்தும்.
மேலும், "சொல்வதற்குச் சொற்கள் தேவையில்லை" என்று எழுதியவன் நான்.
தமிழ்நாடு சட்டமன்ற நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்) பற்றிப் பேசவேண்டிய நேரத்தில், அதை வாசித்தவரின் மொழிப் புலமையைப் பற்றிச் சிந்திக்கச் சொல்வது தற்போதைய சூழலுக்குக் கால விரயம்.
இவை என் அனுபவத்தால் நான் உணர்ந்தவை. தவறு இருந்தால் திருத்தவும்.
#தாய்மொழி #சிந்தனைமொழி
@DMKITwing
@TVKVijayHQ
@Vaikooffl
@onlynikil
#திமுக- வின் வார்த்தைகளுக்கும்,
#தவெக- வின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் 🤷♂️
திமுக சொன்னது: “கரும்பு டன்னுக்கு ₹4,000.”
சொ���்லி எத்தனை வருடம்⁉️
செய்தது என்ன?⁉️🤷♂️
கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு ஊக்கத்தொகை உயர்வு வெறும் ₹150‼️
இப்போது #தவெக அரசு ஒரே அறிவிப்பில் ₹709.50 ஊக்கத்தொகையை உயர்த்தி, ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்து தொகைகளையும் சேர்த்து கரும்புக்கு டன்னுக்கு ₹4,000 கிடைக்க வழிவகுத்திருக்கிறது. 🔥
இதனுடன்
🔸 சன்ன ரக நெல் – ₹2,750 / குவிண்டால்
🔸 பொது ரக நெல் – ₹2,600 / குவிண்டால்
விவசாயியின் வியர்வைக்கு பதில் அரசியல் வசனம் அல்ல நியாயமான விலை ‼️
அதை விவசாயியின் கையில் விலையாகக் கொண்டு சேர்ப்பது #தவெக ‼️
#விவசாயிகள் #விஜய் #TVK #Vijay
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வை வரவேற்று முதலமைச்சர் @CMOTamilnadu க்கு நன்றி கூறி பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய நாகை விவசாயிகள்..
1.சட்டமன்றத்தில் பட்ஜெட்.
2.மானிய கோரிக்கை.
3.கேள்வி பதில் நேரம்.
4.ஜீரோ நேரம்.
5.கவன ஈர்ப்பு தீர்மானம்.
6.தனிநபர் மசோதா.
இந்த மாதிரி வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இப்போதுதான் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதுதான் அரசியல் படுத்துதல்
@TVKVijayHQ 🔥.
இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்த மாண்புமிகு அமைச்சர் @VigneshTvkCbe அவர்கள், கோவை கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு’ பிரச்சாரத்தின் புகைப்படத்தை முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்தார்.
மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டிய முதலமைச்சர் அவர்கள், அம்மாணவர்களுக்கு தனது வ���ழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார். ❤️