நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்��ாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்கள��த்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்க���ுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின�� அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தம���ழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
https://t.co/2ghv9IhVXX
திருவாரூர் மாவட்ட காவல்துறை
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் விசாரணை செய்ததில் முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வ��க்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரில் அப்துல் பாஷித் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு எதிரிகளான சபிக் அகமது மற்றும் அப்பாஸ் (எ) முகமது யூனிஸ் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேல் சொல்லப்பட்ட நிகழ்வு தனிப்பட்ட விரோதத்தினால் நடந்ததே தவிர மேற்கூறியவாறு கஞ்சா போதையினாலோ கஞ்சா தொடர்பான விரோதத்தினாலோ நடந்தது அல்ல. மேலும் செய்தி ஊடகங்களும், மற்றவர்களும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
@tnpoliceoffl @CMOTamilnadu
தமிழ்நாட்டில் சம���க- சமய சீர்திருத்தத்தின் மூத்த முன்னோடியான பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181வது பிறந்த நாள் இன்று...
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்திலும் கருத்திலும் போராடிய மாபெரும் மெய்யியலாளர்.
தமிழர்களுடைய ஞான மரபின் பெருவெளிச்சமாய் திகழ்கின்ற பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்த நாளில் புகழ் வணக்கங்களையும் போற்றுதல்களையும் உரித்தாக்குகிறோம்.
@tvkvijayhq |
@tvkhqitwingoffl | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
இன்று காலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்த்துகளையும் ஆசியையும் பணிவுடன் பெற்றுக் கொண்டேன்.
தொழில் வளர்ச்சி, முதலீட்டு முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களின் வழிகாட்டுதல் பெரும் ஊக்கமாக அமைந்தது.
#CMJosephVijay #TamilNadu
இன்றைய தினம் “மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு” துறை எமக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சால்வையைத் தவிர்த்து புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியதில் அகமகிழ்கிறேன்.
இதன் வழியில், என்னை சந்திக்க வரும் அன்புள்ளம் கொண்ட கழகத் தோழர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் மட்டுமே எடுத்து ��ரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதையும் தாண்டி உங்கள் அன்பை செலுத்த விரும்பினால் புத்தகங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
தங்கள் அன்புக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்!
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk