கல்வி வளாகத்திற்குள் மத அடையாளங்களுக்கு இடமில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அப்படியானால் புர்காவிற்கு அனுமதி இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்து மத நம்பிக்கைகள் என்றால் மட்டும் உங்களுக்கு என்ன அவ்ளோ இளக்காரமாக போய்விட்டதா? தவெக அரசின் இந்து மத வெறுப்பு நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும் அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தவெக அரசு!
கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 25) ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் இத்தகைய அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது. ஆனால், தனது அதிகார மமதையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள தவெக அரசு, முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திகக் கொள்கைகளை இறக்குமதி செய்து, தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
எனவே, மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த அறிவிப்பைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் தங்களது கலாசாரத்தைக் காக்க ஜனநாயக ரீதியில் திரண்டெழுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவை ஆளும் நமது பாஜக மோடி அரசு கலால் வரியை (Excise Duty) ரத்து செய்துள்ளது "எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு"...
E30 என சொல்லப்படும் Ethanol கலந்த Petrol.
#BJP#Modi#பாஜக#மோடி
நமக்கான பாஜக, சிறப்பான பாஜக...🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👏👏👏
https://t.co/HAkVatlZjV
இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா அண்ணாமலை?: அமித் ஷா கிண்டல் I அவரைப் பற்றி என்ன பேச?: நிதின் நபின் I கோலாகல ஸ்ரீநிவாஸ் Kolahalas TV
Influencer என்ற பெயரில் ஒளிந்துகொண்டு, நாட்டிற்கு எதிரான விஷயங்களை செய்யும் பலரில் இவரும் ஒருவர்.,
பாரத பிரதமர் ஒரு விஷயத்தை முன்னெடுத்தால் நாட்டிற்கே பாதிப்பு என்பார், இவரது எஜமானர்கள் ஒரு அதே விஷயத்தை செய்தால் புரட்சி என்பார்..! காசுக்கு கூவும் மற்றொரு தற்குறி
Epstein Files வந்த பொழுது கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இந்தியாவில் இருந்து குழந்தைகளை supply செய்ததாக மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்த ஆபத்தான நபர்..!
#TVKFails
Zero tolerance-ஆ? இல்லை, Zero Control-ஆ முதல்வரே?
கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்பொழுதும் "zero tolerance"-ஐ உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய்கூசவில்லையா?
முதலில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் காமக்கொடூரர்களை கட்டுக்குள் கொண்டுவந்து மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! அதற்குப் பின்பு "தூய சக்தி" என்று மார் தட்டுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
1947:
இந்தியாவில் 10,000 மசூதிகள் இருந்தன. பாகிஸ்தானில் 32,288 கோயில்கள் இருந்தன.
இன்று:
பாகிஸ்தானில் 21–31 கோயில்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியாவில் 4,00,000+ மசூதிகள் உள்ளன.
Extreme Poverty in India 🇮🇳
2011-12 : 16.2%
2024-25 : 2.1%
18 crore Indians were taken out from extreme poverty in the last 10 years, says the World Bank.
India witnessed the Fastest poverty reduction in a decade
Congratulations to Prime Minister @narendramodi on becoming India’s longest-serving elected Prime Minister.
A remarkable milestone in the world’s largest democracy and good for the UK-India partnership which will continue to go from strength to strength.
Thank you, my friend, for your most gracious wishes.
I fully agree with you. India-Israel friendship will continue to grow from strength-to-strength in the years to come.
@IsraeliPM@netanyahu
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்திய சுதந்திரம் தூரத்தில் இல்லை என்பதை அனைவருமே உணர்ந்திருந்தனர்.1946 நடைபெற்ற காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் 15 மாகாண காங்கிரஸில் 12 மாகாண அமைப்பு சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரையே முன்மொழிந்தது..மீதமுள்ள 3 மாகாண அமைப்புகளும் விலகிக் கொண்டன அல்லது ஜவஹர்லால் நேருவின் பெயரை பரிந்துரைக்கவில்லை.ஆனால், காங்கிரஸ் செயற்குழு மட்டுமே நேருவின் பெயரை முன் மொழிந்தது.அதற்கு ஒரே காரணம் மகாத்மா காந்தி நேருவுக்கு அளித்த ஆதரவு மட்டுமே.ஒருவேளை பட்டேல் தேர்தலில் இருந்து விலகமாட்டேன் என்றிருந்தால் அவர் தலைவராகியிருப்பார் அல்லது காங்கிரஸ் ஒரு பிளவை சந்தித்திருக்கலாம்..
ஆனால், காங்கிரஸ் தலைவராக ஆனதாலேயே 1946 ல் சுதந்திரத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு அவர்கள் Vice President of the Executive Council என்கிற பதவியை அடைந்தார்.நடைமுறையில் அவர் அரசின் தலைவராகச் செயல்பட்டார். அதனாலேயே அவரை இடைக்கால அரசின் "பிரதமருக்கு ஒப்பான தலைவர்" என்று குறிப்பிடுகின்றோம்.2 செப்டம்பர் 1946 -ல் இடைக்கால அரசின் தலைவர்.15 ஆகஸ்ட் 1947 முதல் சுதந்திர இந்தியாவின் பிரதமரும் ஆனார்..
இடைக்கால பிரதமர் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்பதெல்லாமே கட்சியை விட பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற மகாத்மா காந்தியின் தனிப்பட்ட விருப்பத்தின் பயனால் விளைந்தது..இந்தியப் பிரிவினை, பாகிஸ்தான் உருவாக்கம், காந்தியின் மரணம் என்ற எல்லாம் நேரு போன்றதொரு தலைமைக்கு பதவியை தக்க வைக்க கேடயமாக இருந்தது.
நாங்கள் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தோம் என்ற பிம்பம், காந்தியின் அணுக்கம், காங்கிரஸின் வலுவான அமைப்பு பலம், அரசாங்கம் இத்தனையும் வைத்துக் கொண்டு முதல் இந்தியப் பொதுத் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் கட்சி என்பதை யாரும் மறுக்க கூடாது..
ஆக, 1946 - 1951/52 வரை நேரு பிரதமராக இருந்தது அவருடைய சாதனை என்பது போலவும் அவரை மக்கள் தேர்தெடுத்தது போலவும் பேசுவது நகைப்புக்குரியது..மக்களாட்சியில் நேருவை விட நீண்ட கால பிரதமர் என்ற வரலாற்றை நரேந்திர மோடி அடைந்தார் என்பது தெளிவானது.மற்றபடி ப.சியின் ஆசைப்படியே, ஜனநாயகத்தால் தேர்தெடுக்கப்படாத நேருவின் காலத்தையும் நரேந்திர மோடி அவர்கள் ஜனநாயகப்பூர்வமாக கடந்து பாரதப் பிரதமராக ஜொலிப்பார்..
திரு.நரேந்திர மோடி அவர்களின் எழுச்சி என்பது பாரதம் அடுத்த நூற்றாண்டுகளில் செல்லப் போகும் செறிவு மிக்க பாதையை காட்டும் கலங்கரை விளக்கம்..வெறும் ஆட்சி மாற்றத்தை அவர் வழங்கவில்லை.பண்பாட்டு ரீதியாக உறைந்து போய் கிடந்த இந்த தேசத்தை தட்டியெழுப்பி இதை கலாச்சார தேசிய அரசாக மீட்டெடுத்துள்ளார்.இதை வேறு யாராலும் இவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியுமா என்பது சந்தேகமே.இந்த நவீன யுகத்தில் அவர் மீது கொட்டப்பட்ட வன்மத்தையும், வெறுப்பையும் எதிர்கொண்டு அவர் மக்களின் துணையோடு இதை சாதித்திருப்பது, உண்மையிலேயே அவரை "நரேந்திரன்" என்று காட்டுகிறது..
"இந்து தேசியம்" என்பது பாரதத்தின் தொன்மையான கலாச்சார அடையாளம்.ஆனால் அது உலகம் முழுக்க அழித்தொழிக்கப்பட்ட, வீழ்த்தப்பட்ட, நினைவில் இருந்து மறக்கடிக்கப்பட்ட பண்பாட்டிற்கெல்லாம் அடைக்கலம் தருகிற தாய்வீடு என்பதை நிலை நிறுத்தியவர்.மக்களின் மீது கருணை கொண்ட ஒரு தலைவனின் அரவணைப்பில் இந்த தேசம் வீறு நடைபோடுகிறது..
நேருவின் சாதனை முறியடிக்கப்பட்டது வெறும் நாட்களின் எண்ணிக்கையில் என்பது ஒரு விஷயமாக எனக்கில்லை.ஒருவேளை அது பாஜகவிற்கு மிக முக்கியமான அடையாள அரசியல்.காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தவர்கள் எல்லோருக்கும் ஒரு உந்து விசை.ஆனால் என்னைப் பொறுத்தவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு இராஜேந்திர சோழனைப் போல, குமாரகம்பண்ணர், கிருஷ்ணதேவராயர், வீரசிவாஜியைப் போல மாபெரும் சாதனைகளை பண்பாட்டு அடையாளத்துடன் பெரிதென படைக்க வந்த மாவீரர்..நான் நரேந்திர மோடியின் ஆட்சியைத் தருவேன் என்றே தெற்காசியா முழுமைக்கும் ஒரு உதாரணமாக அவர் மாறுகிற நூற்றாண்டுகளையும் வரலாறு எதிர்காலத்தில் பதிவு செய்யும்..