ஒரு மழை முடிந்து
மறுமழை
தொடங்கியிருக்கிறது;
ஒன்று இயற்றுவித்த வெறுமையை
மற்றொன்று
நிரப்பிக்கொண்டிருக்கிறது;
நீ இயற்றுவித்த வெறுமைமட்டும்
எதனாலும்
நிரம்புவதில்லை
#மழை
மதுக்கோப்பைக்கும்
உதடுகளுக்கும்
இடையே விழுந்த
கண்ணீர்த்துளியில்
அன்பை யாசித்து நிற்கும்
என் பி்ரதிமையைக்
கண்டதாக
அவன் சத்தியம் செய்தான் .
அது என்
கண்ணீரை
மேலும் பெருக்கியது ..💔
#பபி
இன்னமும் என் முன்னே நின்று என்னைப் பார்த்தவாறே இருக்கிறது சூரியன்.நடுவுல ரெண்டு காகம் பறக்கிறதை சூரியன் பார்த்ததா என்று தெரியவில்லை. பார்த்திருக்காது என்றே நினைக்கிறேன்.அதுதான் என்னைப் பார்த்திட்டிருக்கே..!
பட் நான் பார்த்தேன்..!
கூவிக் கூவியழைத்தும்
வாராத வருகைக்காக
சிறகுகளை உதிர்த்தபடி
விலகியது பறவை
மரத்திலிருந்து எழும்பிய
பறவையால்
வீழும் இலைகளில்
சிந்தியிருந்தன சில ராகங்கள்
ஒரே நாளின்
வேறு வேறு இசையில்
நகர்ந்துகொண்டிருந்தன
சிறகுகளும், இலைகளும்
பாறைகளை முட்டும் மழை
இரு கரைகளை நெருக்குகிறது
என்றோ வந்து விழுந்த கூழாங்கல்
சிறுகப் புரளும் ஓசைக்கு
செவிமடுத்தபடி
விழி பிதுங்கும் நேரத்திலும்
வெள்ளத்தைக் கடத்துகிறது நதி