பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
பாஜக என்ன மொழியில் பேசுமோ அதே மொழியில் தமிழக வெற்றி கழகம் பேசுகிறது என்பதற்கு இதைவிட தக்கச் சான்று இருக்க முடியாது
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வ���்த மாணவர்கள் மீது பாஜக அரசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளது
என் கண் முன்னாடியே நடந்த அத்தனையையும் மறக்க முடியாமல் நேற்று இரவெல்லாம் தூக்கம் வரவில்லை
ஆனால் அதை அப்படியே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்று மடைமாற்றி விடக் கூடிய வேலையை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கணக்கச்சிதமாக செய்திருக்கிறது!
அத�� மோதல் இல்லை சார் தாக்குதல் அரசு நடத்திய தாக்குதல் பெண்கள் வயதானவர்கள் என எதையும் பார்க்காமல் நடத்தப்பட்ட தாக்குதல் அதை எப்படி மோதல் என்று சொல்ல மனம் வருகிறது!
யார் மனதை குளிர் வைக்க இந்த யுக்தி என தெரியவில்லை!
எனது வெற்றிக்கு காரணமே பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் என வரிக்கு வரி பேசும் முதல்வர் விஜய் டெல்லியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஒரு சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை!