திருப்பெரும்பூதூர் செல்லப்பெருமாள் நகரில் உள்ள இராமகிருஷ்ணா நகர் பூங்காவில் உள்ள மரக்கன்றுகளைப் பராமரித்து, அங்கு புதிதாக 5 மரக்கன்றுகளை நடவு செய்துள்ள மாணவத் தன்னார்வலர்கள் திவாகர், அரவிந்த் மற்றும் நாகராஜ் ஆகியோருக்குப் பாராட்டுகள் 👏🏾
இவர்களை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் பாலா அண்ணாவிற்குப் பாராட்டுகளும் நன்றியும்!
#அரண்
#தன்னார்வம்
#திருப்பெரும்பூதூர்
"இது ஏன் இப்படி இருக்கு?"
இந்த ஒரு கேள்வியில் தொடங்குகிறது மாற்றம்.
அப்படியான ஒரு கேள்வி சென்ற வாரம் ஒரு மிகப்பெரிய செயலை செய்துள்ளது.
பென்னலூர் கிராமத்தில் வசிக்கும் திரு. வாசு ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகைப்படத்தில் ஒரு மாடு உயிர் இழந்து குப்பைகளின் நடுவே இருந்தது.
அந்தக் குப்பை இருந்த இடம் : பென்னலூர் கிராமத்தில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம். அங்கு பெருமளவில் குப்பைகள் கொட்டிக் கிடந்தன. அவர் புகைப்படம் அனுப்பிய உடன் அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோம். சில உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினோம்.
அடுத்த நாளே ஊரக வளர்ச்சித் துறையினரும் வருவாய்த் துறையினரும் களமிறங்கினர். காலையில் வெயில், பகலில் மழை, இருப்பினும் பணி தொடர்ந்தது. குப்பைகள் அகற்றப்பட்டன.
100 சதவீதம் அகற்றப்படவில்லை என்றாலும் அரசின் முயற்சியை இங்கு நாம் பாராட்டியே ஆக வேண்டும் - பாராட்டுகிறோம். திடக்கழிவு மேலாண்மைக்கான கட்டமைப்பு மேலும் பலப்பட வேண்டும்.
இந்தப் பெரும் முயற்சியை முன்னெடுக்க வழிவகை செய்த திரு. வாசு அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
#அரண் #நெகிழி #திருப்பெரும்பூதூர் #Plastic #Sriperumbudur @KanchiCollector@ThooimaiMission@CMOTamilnadu@Chief_Secy_TN@Tnpcbofficial@CPCB_OFFICIAL
அரண் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு விழாவில் நம்முடைய தன்னார்வப் பயணத்தைப் பாராட்டும் விதமாக அழகிய பரிசு ஒன்றினை வழங்கியுள்ள SPR Kalaki Meme Instagram குழுவிற்கு அன்பும் நன்றியும்!
நம்முடைய சமூகத்தின் நலனுக்காகத் தொடர்ந்து பயணிப்போம்!
ஜெய் பீம் 💙
#அரண்#தன்னார்வம் #திருப்பெரும்பூதூர்
இருளர் பழங்குடியினப் பெண்மணி ஒருவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டார்.
55 வயது நிரம்பிய அவர் தற்போதுதான் தனது வாழ்நாளில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளார்.
அவருக்கோ ஒரு வேட்பாளர் கூடத் தெரியாது. இவருக்கு வாக்களியுங்கள் என்று நாம் சொன்னால் அவருக்கு நிச்சயம் வாக்களித்து விடுவார்.
ஆனால், அப்படி நாம் சொல்வது முறையல்ல. அது சரியானதும் அல்ல.
55 வயது நிரம்பிய அவர் முதல்முறை வாக்களிப்பதும்; வேட்பாளர்களில் ஒருவரைக் கூட அவர் அறியாததும் ஜனநாயகம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றின் தோல்வியாகக் கருதலாம். நிச்சயமாக வெற்றியாகக் கருத முடியாது.
மீண்டும், மீண்டும் நாம் நம்புவது ஒன்றுதான்.
ஜனநாயகம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. ஜனநாயகம் என்பது ஒரு தொடரோட்டம். வாக்களிப்பது அதில் ஒரு கடமை. வாக்களித்து விட்டு நாம் என்ன செய்கிறோம் என்பதிலும், நம் ஓட்டை வாங்கிவிட்டு அவர்கள் (வென்றவர்களும், தோற்றவர்களும்) என்ன செய்கிறார்கள் என்பதிலும்தான் அடங்கி இருக்கிறது ஜனநாயகம்.
ஒரு கூட்டத்தை இந்த சமூகம் தற்குறிகள் என்று அழைக்கிறதே, அந்தக் கூட்டத்தைத் தற்குறிகளாக வளர்த்தது யார் என்ற கேள்வியை இந்த சமூகம் தனக்குத்தானே எழுப்பி விடை தேடட்டும்!
(தற்குறிகள் என்று அவர்களை அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை)
இறுதியாக, வெல்வது மக்களாக இருப்பதே ஜனநாயகம்!
உரையாடல்கள் தொடங்கி, தொடரட்டும்!
#ஜனநாயகம் #மக்களாட்சி
மக்கள், மக்களுக்காக!
அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சிய நிலையில் மக்களாகிய நாமே களத்தில் இறங்கி வேகத்தடைக்கு வண்ணம் பூசியுள்ளோம்.
இந்த வண்ணத்தை வாங்க ரூ.1,600/- செலவானது. மக்களின் உயிர்களை விட இந்தத் தொகை ஒன்றும் பெரிதல்ல.
அரசு இயந்திரத்தின் வேகமும் அதன் அலட்சியமும் கவலையளிக்கிறது.
இதில் சாலைப் பாதுகாப்பு மாதக் கொண்டாட்டம் வேறு. சாலைப் பாதுகாப்பு என்பது அரசு மற்றும் மக்களின் ஒன்றிணைந்த பொறுப்பே. இந்நிலையில் அரசு தொடர்ந்து மக்களைக் குறை கூறிக் கொண்டிருப்பது நியாயமே அல்ல!
@KanchiCollector@kpmpolicefor@tnpoliceoffl@mkstalin@CMOTamilnadu@Office_of_Udhay@Udhaystalin@MORTHIndia@NHAI_Official@NHAI_Tamilnadu@nitin_gadkari@PMOIndia@rashtrapatibhvn@VPIndia #திருப்பெரும்பூதூர் #Sriperumbudur #சாலைப்பாதுகாப்பு #RoadSafety
The speed breaker below the arch at the Sriperumbudur East By-Pass Junction has been painted now.
Thanks to all those who shared.
Thanks to the concerned authorities.
Road Safety is not just a word!
It is a shared commitment.
It is a shared responsibility.
We shall continuously strive together for safe roads.
@CMOTamilnadu@mkstalin@Office_of_Udhay@Udhaystalin@KanchiCollector@kpmpolicefor@tnpoliceoffl #திருப்பெரும்பூதூர் #Sriperumbudur #சாலைப்பாதுகாப்பு #RoadSafety
Wow!
I really can't believe this is happening!
இந்த சமூகம் தான் செய்த பிழையை மூடி மறைக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.
இது எங்கோ தொடங்கி எங்கோ முடிகிறது. விளிம்புநிலையில் உள்ள வளரிளம்பருவக் குழந்தைகளுக்கு அந்தக் காலகட்டத்தில் அன்பும், அரவணைப்பும், வழிகாட்டுதலும் கிடைக்காமல் காட்டில் தனியாகத் தவிப்பது போன்ற ஓர் உணர்வு மேலோங்கி attention seekersஆக மாறுகின்றனர்.
அந்த attention seekingதான் அவர்களை Pullingo என்னும் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளுகிறது. Reels, Hairstyle, Dressing, Bikes etc., எனப் பல வழிகளைக் கையில் எடுக்கின்றனர். "யாராவது என்னைப் பாருங்கள்" என்று அனைவரின் கவனத்தை ஈர்க்கவே இவை அனைத்தும்.
இப்படியாக சிக்கி இருப்பவர்களின் பெற்றோர் அனைவரும் விளிம்புநிலையினர்தான்.
அவர்களுக்குத் தேவையான attentionஐ கொடுக்க மறுத்தது யார்?
நாம்தான்.
இந்த சமூகம்தான்.
நம் கண்களுக்கு முன்னேதான் இந்த மனிதர்கள் இத்தனை நாட்களாக இருந்துள்ளனர். அவர்களைப் பார்க்காமல் விட்டது நாம்தான்.
பழங்குடியின மக்களை எப்போது நாம் பார்க்கத் தொடங்கினோம்?
ஜெய்பீம் படம் வந்து அவர்களின் சிக்கல்களைப் பேசியபின்தானே பார்த்தோம்.
அதுபோல் இவர்களுக்காகவும் ஒரு படம் வரும் என்று நம்புவோம்.
இந்தப் பிரச்சினையின் வேரை நாம் பார்க்காதவரை இதனை நாம் தீர்க்க முடியாது.
"All Indians are my brothers and sisters"
பள்ளியில் படிக்கும்போது நாம் எடுத்த உறுதிமொழி. நாம் எடுத்த உறுதிமொழியின்படி நாம் நடக்கிறோமா என்று நமக்குள் கேள்வியை எழுப்புவோம்.