என்றும் நினைவுகளில் Crazy Mohan.!
இன்று Crazy மோகன் எனும் மாபெரும் நகைச்சுவை ஆளுமை இறந்த தினம்.!
பொதுவா நம்ம அப்பா அம்மா மாதிரி நமக்கு ரொம்ப நெருக்கமானவங்கள இழக்��ும் போது, அதுக்கு நம்ம வருத்தப்படுறதும், அவங்க இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோடு இருந்திருக்கலாமே அப்படினு ஏங்குறதும் சகஜம் தான்.
ஆனால், நமக்கு எந்த தொடர்பும் இல்லாத, முன்ன பின்ன அறிமுகமே இல்லாத, சொல்லப்போனா நம்ம வாழ்க்கையில ஒரு தடவை கூட நேர்ல பார்த்திராத ஒரு மனிதனின் மறைவுக்கு நாம மனசு உடைஞ்சு போறதும், ச்ச அந்த மனுஷன் இன்னும் கொஞ்ச வருஷம் வாழ்ந்திருக்கலாமேனு வருத்தப்படுறதும் நிகழுதுனா - அந்த மனிதர் இந்த உலகத்தில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டு போயிருக்கார்’னு அர்த்தம்.
அப்படியான மனிதர்களோட இடத்தை அதுக்கு அப்புறம் யாராலுமே நிரப்ப முடியாது. There’ll be no replacement for such souls.
அது போன்ற ஒரு மனிதரின் நினைவு நாள் இன்று.
கிரோசி மோகனுடன் நெருக்கமாக பழகிய கமல் ஒரு நிகழ்வில், “யார் மீதும் காழ்ப்போ, வன்மமோ இல்லாதவர் கிரேசி மோகன். நான் அவரை அறிமுகப்படுத்தாவிட்டால், என்னை விட பெரியவர் ஒருவர் அறிமுகப்படுத்தி இருப்பார்.
அவர் சொர்க்கத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அவருடன் இருந்ததே சொர்க்கத்தில் இருப்பது போன்றது தான். உயிர், சோப் மாதிரி கரைய வேண்டும் என்பார். அப்படித்தான் கரைந்து போனார்'' எனக் கூறினார்.
இன்றும் கூட நான் ரி��்பீட் மோடில் அடிக்கடி பார்க்கும் அத்தனை திரைப்படங்களும் கிரேசி மோகனின் கதை வசனத்தில் உருவானவை தான். அவரைப் போல, ஒவ்வொரு வார்த்தையிலும் நம்மை சிந்திக்க வைத்து - பின் நினைத்து நினைத்து சிரிக்க வைத்தவர் யாருமே இல்லை.
கிடைத்த பெயரையும், புகழையும் தலையில் ஏற்றிக்கொண்டு திமிர் பிடித்து அலையாமல், வெற்றிலை-பாக்கு சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே, கலைந்து கிடக்கும் தலைமுடியும், கேஷுவல் டீஷர்ட்டுமாக எந்த பந்தாவும் இல்லாமல் நடமாடியவர்.
என்ஜீனியரிங் பட்டதாரி, சூப்பராக ஓவியம் வரைபவர். கார்ட்டூனில் கதை சொன்னவர். தமிழ் சினிமாவையும், நாடக உலகையும் தன்னிகரில்லா நகைச்சுவை வசனங்களால் ஆளுமை செய்தவர். பாட்டுகூட பாடுவார். மீனாட்சி அம்மன் குறித்து நூற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடிய கவிஞானி. முகம் சுளிக்காத வகையில் வசனங்களை கடை��ிவரை எழுதியவர். யாரையும் காப்பி அடிக்காத, யாருமே காப்பி அடிக்க முடியாத ஒரு நேர்த்தியான - திறமையான - தன்னிகரில்லாத - தனித்துவமான ஒரு கலைஞன்.
தனது புத்திசாலித்தனமான வசனங்களால் அனைத்து தரப்பு மக்களையுமே சிரிக்க வைத்ததே கிரேஸி மோகனின் வெற்றி. அதனால்தான் பாரபட்சம் பாராமல் அத்தனை பேரையும் அழ வைத்தது அவரது மரணம்.
அவரது இழப்பு காலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
இருந்தாலும�� மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்..!!
இவர் போல யாருமே இல்லையென ஊரே மெச்சும் ஒரு மகா கலைஞனுக்கு அஞ்சலி!
#CrazyMohan
June 10. ✨
Credits - TF Rinnozah - FB
அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
உலக நாடுகள் ���ூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
We've released improvements to the Graspable Math notation! ✨
Number 1: Support for the division symbol "÷". This has been on our list for a long time, and of course it includes new gestures to work with division, too.
Try it yourself here: https://t.co/9Ox8zD1AhH
@RailMinIndia@IRCTCofficial@SCRailwayIndia@GMSRailway@DrmChennai@AshwiniVaishnaw We have not received any official mail regarding refund. We know something is wrong.
And refunded only 1440 instead of full amount. It has also given us mental strain/stress/depression disappointment. And it is also losing our respect for traditional Indian Railways. (3/5)
@RailMinIndia@IRCTCofficial@SCRailwayIndia@GMSRailway@DrmChennai@AshwiniVaishnaw So we did not travel in that train. We returned to Nagercoil by car. We had filed TDR for refund.
It was initially denied. We tried again through emails and RTI.
On 31.03.2024 only Rs.1440 as REFUND has been credited to our bank account. (2/5)