கரூர் மாவட்டம் - 28.08.2026
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி புகழுர் நகராட்சி, வேலாயுதம்பாளையம் to கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆவாரங்காட்டு புதூர் பகுதியில், அமைய உள்ள மேம்பாலம் குறித்து சில மாற்றங்கள் செய்து தரவேண்டியது தொடர்பாக,
மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர், கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் திரு.மு.தம்பிதுரை M.P. அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து, மனு சம்பந்தமாக எடுத்துகூறினேன். புகழுர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் திரு.திருமூர்த்தி உடனிருந்தார்.
@AIADMKITWINGOFL@AIADMKOfficial
#karur_kamalakkannan #karuradmk #karur #KarurNews #KarurDistrict #ADMK #EdappadiPalaniswami
தமிழரின் பாரம்பரியமான #ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?
மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?
ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.
தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!
(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் @actorvijay !)
That end @Kalyan1612 Anna .. 🔥🔥
TASMAC கை மூடிவிட்டோம் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொள்கிறார்கள்…
ஆனால் மறுபக்கம் TASMAC target மட்டும் ₹56,000 கோடி! 💰🥃
இதுதான் TVK-வின்
“Vibe Politics vs Reality”! 🔥
அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#Onam@AIADMKOfficial
தமிழ்த் திரைத்துறை ஆளுமையும்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த “பத்ம பூஷன்” திரு. @iVijayakant அவர்களின் பிறந்தநாளான இன்று,
அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன்.
மண்ணை விட்டு மறைந்தாலும்,
‘கேப்டன்’ என்ற பெயரும்,
உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்.!
#HBDCaptainVijayakanth
@AIADMKOfficial@EPSTamilNadu
வைகைச்செல்வனுக்கு பதிலாக இனி இவர்.. அதிமுக இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்!
அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வைகைச்செல்வன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில், அதிமுக இலக்கிய அணி தலைவராக தமிழக அரசின் முன்னாள் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் கோ.விசயராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் முதன்மை செய்தி தொடர்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இலக்கிய அணி மாநில செயலாளர் பதவி காலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவனை, இலக்கிய அணி மாநில தலைவராக நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு, இப்போது தான் இலக்கிய அணிக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விசயராகவன் வாழ்த்துப் பெற்றார். இது தொடர்பாக கோ.விசயராகவன் கூறும்போது, "தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த மாபெரும் இயக்கமான அதிமுகவின் இலக்கிய அணி மாநில தலைவராக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். இக்கட்சியின் வளர்ச்சியில் எங்கள் அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் வகையில் கடுமையாக உழைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கோ. விசயராகவன். தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி கழக இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
இவர் உலகத் தமிழாராய்ச்சி கழக இயக்குநராக இருந்தபோது, அரிய நூல்களை நவீன தொழில்நுட்பத்தில் மின்னாக்கம் செய்தது, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்தபோது, அரசு அலுவலகங்களில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான சரியான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த அரசால் உருவாக்கப்பட்ட ஆட்சிச் சொல்லகராதி மூலமாக பல்வேறு ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை உருவாக்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளார். @AIADMKOfficial
முதல் இரண்டு நாள் திமுக வை அடித்து hero ஆனார்கள்... என்னைக்கு சித்தப்பு எந்திரிச்சு அடிக்க ஆரம்பிச்சாரோ சீட்டு கட்டுல இருக்குற மொத்த Card உம் joker தான் என்கிற நிலை ஆகிருச்சு...
மாத்தி மாத்தி பெருமை பேசி அடிச்சுட்டு இருக்குற நேரத்தில் கூட, தமிழ்நாட்டு நலனுக்காக பேசும் இருவர் எடப்பாடியும், சௌமியா அன்புமணியும் மட்டும் தான்...
உள்துறை அமைச்சரை சந்திக்கும் போகும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன வேணும்னு நோட்ஸ் எடுத்துட்டு போனா அவன் அரசியல்வாதி
அமித்ஷாவுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு காக்கா பிடிக்க டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போனா அதுக்கு தற்குறினு அர்த்தம் 😂😂😂
கரூர் சட்டமன்ற தொகுதி ஆத்தூர் ஊராட்சி மற்றும் கோதுர் பகுதி, அரவக்குறிச்சி ச்டமன்றத் தொகுதி வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளில் புதிதாக அமைக்க பட இருந்த இரயில்வே வழி தடங்களை பொது மக்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்காமல் புதிய வழி தடத்தில் அமைய உதவிய பாரத துணை குடியரசு தலைவர் @CPR_VP | @VPIndia அவர்களை,
முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர், மாநிலங்கள் அவை உறுப்பினர் அண்ணன் Dr. மு. தம்பிதுரை அவர்கள் தலைமையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
இவற்றிற்கு முழு உறுதுணையாக இருந்த அண்ணன் Dr. மு. தம்பிதுரை அவர்களுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சார்பில் கரூர் மாவட்ட @AIADMKOfficial நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
@EPSTamilNadu #KarurADMK #Karur