#Jailer2
சலீம் - ஜாவேத் திரைக்கதை எழுத யாஷ் சோப்ரா, மன்மோகன் தேசாய், பிரகாஷ் மெஹ்ரா போன்றோர் 70 களில் இயக்கிய அமிதாப்பச்சன் படங்கள்தான் இந்திய கமர்ஷியல் சினிமாவின் இலக்கணத்தை வகுத்தவை.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹீரோயிசம் எப்படி காட்டுறது என்பதை இந்திய சினிமாவுக்கே தமிழ் திரையுலகில் இருந்து பாடம் எடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் @Nelsondilpkumar .
சூப்பர் ஸ்டாருக்கு மேலுமொரு புதிய தலைமுறையை வாழ்நாள் ரசிகர்களாக கூட்டியுள்ளார் நெல்சன்.
அனிருத் தந்திருக்கும் துல்லியமான இசையை அனுபவித்துக் கேட்க தக்க நல்ல ஒலித்தரம் உள்ள திரையரங்கில் உட்கார்ந்து பாருங்கள்.
ஒரு 75 வயது மனிதர் எப்படி தனது ஒற்றைப் பார்வையால் ஒட்டுமொத்த திரையரங்கையும் ஆர்ப்பரிக்க வைக்கிறார் என்பதை கண்டு பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
The one & only Super Star . 👏❤
ஒற்றையடிப் பாதையில்
ஊர் முழுக்க உறவுகள் இருந்தன,
நான்கு வழிச்சாலைகள் வந்தபோது நடுவில் நின்றது,
நெரிசல் மட்டும் அல்ல,மனிதனும்.
தோட்டங்கள் தொலைந்துவிட்டன,
இரண்டு தொட்டிகளில்
பசுமையை வளர்க்கிறோம்.
உறவுகள் குறைந்துவிட்டன,
“அன்பு” என்ற சொல்லை மட்டும்
அலைபேசியில் பகிர்கிறோம்.
வசதிகள் வீடு தேடி வந்தன,
நிம்மதி மட்டும்
வாசல் தேடி வரவில்லை.
முதியோரின் அறிவை
பழைய தலைமுறை என்று ஒதுக்கிவிட்டு,வயதை அடையாத குழந்தைகளிடம் வாழ்க்கைப் பாடம் தேடுகிறோம்.
காலம் முன்னேறிவிட்டது,
மனிதன் மட்டும்
மனிதநேயத்தில் பின்னோக்கிச் செல்கிறான்...
உன்னை உண்மையாக நேசிப்பவர்கள்,
உன் சிரிப்பில் தங்கள் மகிழ்ச்சியைத் தேடுபவர்கள்;
உன் கண்ணீரில் தங்கள் மனமும் வலிப்பவர்கள்…
அவர்களின் நலனை விசாரிக்க,
உன் பரபரப்பான வாழ்வில்
ஒரு சிறு கணமேனும் ஒதுக்கி வையுங்கள்.
ஏனெனில்,
உறவுகள் பெரிதாக வளர்வது
அதிகமான சந்திப்புகளால் அல்ல…
சிறிய அக்கறைகளால்தான்.
ஒருமுறை “எப்படி இருக்கிறாய்?”
என்ற கேள்வி கூட,
ஒருவரின் மனதில்
“நான் இன்னும் யாருக்கோ முக்கியமானவன்”
என்ற நம்பிக்கையை விதைக்கலாம்.
அதுவே உறவுகளின் உயிர்…
அதுவே மனிதத்தின் அழகு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. டி.ஜி. தியாகராஜன், பொதுச் செயலாளர் திரு. டி. சிவா, பொருளாளர் திரு. ஜி. தனஞ்ஜெயன்
துணை தலைவர்கள் திரு.எஸ்.ஆர். பிரபு, திரு.எஸ்.எஸ். லலித் குமார், இணை செயலாளர்கள் திரு. முகேஷ் ஆர். மேத்தா மற்றும் திரு. எஸ். வினோத் குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள். @CMOTamilnadu@Dhananjayang@SathyaJyothi@prabhu_sr@7screenstudio@e4echennai #CMJosephVijay