வட்டி கட்ட முடியாமல்
தற்கொலை செய்துகொண்ட
ஏழையிடம்
வங்கிக் கடனிலும்
தரகு பிடித்த மேலாளரின்
கூடவே இருந்த எழுத்தனின்
குற்ற உணர்ச்சியோடு
ஊர் பெயர்ந்தவர்கள்
உறங்கும்
நகரப் பாலங்களின்
அடிவார இரவு
@ssuba_18
ஒரு சின்ன கேள்விங்க. நான் அதிக வேலையில இருக்கறதால இங்க வரது நிறுத்திட்டேன். ஆனா, உங்க கவிதை, ரிப்ளை எல்லாம் என் நோட்டிபிகேசன் ல வந்துருது.
அது ஏன் புரியல.
நீங்க விளக்க முடியுமா.
29 பேர பாலோ பண்ணாலும் உங்க கவிதை, ரிப்ளை மட்டும் ஏன் வருது.
ஒரு கவிதை காத்திருந்தது
என் கைபட்டு மலர
ஒரு பூ போல
ஒரு புகையாத எரிமலை போல
முலைக்காம்பு சப்பும் குழந்தையின் மென்மையாக
நிலம் முட்டி வெளிவரும் விதையின்
வன்மையாக
எதுவாகிலும்
வான்மழைபோல
எப்போ எப்படி
யாருக்கும் தெரியாது
எனக்கும் கூட...
#WorldPoetryDay