@polimernews உண்மை ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தின் போது எவ்வாற தான் நடைபெறுகிறது எப்போதும் ரீடிங் எடுக்கும் தேதியிலிருந்து மூன்று நான்கு நாட்கள் தள்ளித்தான் வருவார்கள்
Kind Attn : @AdvocateVenkatP@CMOTamilnadu@tnepds
குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, உறுப்பினர் நீக்க, குடும்பத் தலைவர் மாற்ற என்ற பல்வேறு வகை சேவைகளை இணையம் வழியே tnpds dot gov dot in இணைய தளத்தில் செய்யலாம். ஆனால் எல்லாவற்றுக்குமே குடும்ப அட்டை விண்ணப்பத்தில் பதிவு செய்த மொபைல் நம்மிடம் இருக்க வேண்டும். அதில் கிடைக்கும் ஓ.டி.பி. மூலமாக உள் நுழைந்து இந்தச் சேவைகளைப் பெறலாம்.
தப்பித்தவறி அந்த மொபைல் எண் இப்போது நம்மிடம் இல்லை என்றால், எந்த வட்ட வழங்கு அலுவலகம் / வட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் ரேஷன் அட்டை பெற்றோமோ அங்கேதான் சென்று அதை மாற்ற முடிகிறது.
இ-சேவை மையத்திலோ அல்லது வேறு வட்ட வழங்கு அலுவலகங்களிலோ சென்று மாற்ற முடியவில்லை.
அப்படி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாதவர்கள், தப்பித்தவறி வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தால், பொருட்கள் மட்டும் அங்குள்ள ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அது குறித்த குறுந்தகவல்களைப் பெறவோ மற்றும் மேலே குறிப்பிட்ட சேவைகளைப் பெறவோ முடியாது. மீண்டும் பழைய இடத்தில் உள்ள வட்ட வழங்கு அலுவலகத்திற்குச் சென்று மொபைல் எண் மாற்றி விட்டு, பிறகுதான் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளைச் செய்ய வேண்டும்.
இப்போதெல்லாம் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள் வாங்கிக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் விரல் ரேகை வைத்து ஆதார் சரி பார்த்தல் மூலம் இது நடக்கிறது. எனில் அதே போலவே ஆதார் சரி பார்த்தலில் அல்லது ஏதேனும் ஒரு ரேஷன் கடையில் சென்று விரல் ரேகைப் பதிவு வைத்து மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும்படி வைத்தால் உபயோககரமாக இருக்கும்.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.