Heartiest congratulations to our phenomenal women's 4x400m relay team, Vithya Ramraj avl, Kiran Pahal avl, Machettira Poovamma avl, and Prachi avl, for their breathtaking performance and clinching the Gold medal at the Asian Games.
Special pride for TN as our very own Vithya Ramraj avl shines brightly on the international stage yet again, displaying incredible grit, speed, and determination.
Their stellar achievement has made the entire nation proud and will inspire millions of youngsters.
அருமையான முன்னெடுப்பு 🫰
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் புத்தளம் ஊரை சார்ந்த we the leaders அமைப்பின் தலைவர் ஒருவர் சம்பு குளம் கால்வாய் சுத்தம் செய்யும் காட்சி சம்பு குளம் கால்வாய் என்பது சம்பு குளம் முதல் மணக்குடி வரை உள்ள 16 கிலோமீட்டர் பாயும் கால்வாய் இதை சுத்தம் செய்யும் தலைவர் ராஜலிங்கம் அவர்களுக்கு நாம் உற்ற துணையாக இருப்போம்.
@WTLFoundation
"கூலி Power Houseஏஏஏ.. என்னைக்கும் குறையாத மவுசே!"
#JanaNayagan#Coolie#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
பெருமைமிகு புகைப்படம்
நேற்று நடந்த we the leaders போதை விழிப்புணர்வு cyclothon பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த..
மேஜர் முகுந்த் வரதராஜன் தாய் தந்தை .திரு.வரதராஜன்
திருமதி கீதா வரதராஜன் அவர்களுடன்..
பாரத பிரதமர் மோடிஜி பாராளுமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு முன்பு இதை செய்த பிறகு தோல்வியை சந்திக்காமல் இன்று வரை வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் அதேபோல் அண்ணாமலையாரும் வருகின்ற காலத்தில் வெற்றியை மட்டும் அடைவார் 🔥🔥🔥
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
வரும் 26ந் தேதி மாலை 5 மணிக்கு திருச்செந்தூரில் பிரபாகர் சார் முன் எடுத்து திரு அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளும் போதை இல்லா தமிழகம் அமைக்க “WE THE LEADER” 2வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது…
லீடர்ஸ் அனைவரும் இதில் கலந்து போதைக்கு எதிராக சத்ய பிரமானம் செய்ய அன்போடு அழைக்கிறேம்…
அனைத்து மக்களுக்குமான அறம் நிறைந்த அரசியலை முன்னெடுத்து வரும் “We The Leaders” அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும், தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து பேராதரவு வழங்கி வருகின்றனர்.
“மாறுவோம், மாற்றுவோம்” என்ற முழக்கத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம் வளமான தமிழகத்தை உருவாக்க உழைப்போம்.
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)