தாங்கி தாங்கி நடந்து பள்ளிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி..! பேட்டரி வாகனத்திற்காக 4 ஆண்டுகளாக காத்திருக்கும் தாயின் உருக்கமான கோரிக்கை..!
#Viluppuram | #Student | #TNGOVT | #Request | #PolimerNews
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
"உழைப்பால் உயர்ந்த மனிதர் பின்னாடி நிக்குறோம்.. சினிமா மோகமோ பிரபலம் அப்படிங்குற எண்ணமோ கிடையாது.. அவரால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் கொடுக்க முடியும்.." - 'WE THE LEADERS' மாநாட்டிற்கு வந்த பெண் உறுதி
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
5⃣3⃣8⃣ Intl Matches 🙌
1⃣7⃣,2⃣6⃣6⃣ Intl Runs 👌
8⃣2⃣9⃣ Intl Dismissals behind the stumps 👏
Winning Captain of ICC Men's T20 World Cup 2007, ICC Men's ODI World Cup 2011, ICC Champions Trophy 2013 🏆🏆🏆
Happy Birthday to Former #TeamIndia Captain @msdhoni, an absolute icon of the game 🫡
தனியார் பள்ளிகள் சங்க நிறுவனத் தலைவர் பி.டி. அரசகுமாரும், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பிலும் செய்ய இருந்த திருட்டுத்தனத்தை ஒரு வருடத்திற்கு முன்பே தலைவர் அண்ணாமலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காணொளி இதோ👇
இன்று, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் அதே அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்🔥
#Annamalai
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B