மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணை மரணங்களை தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவது பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 12 விசாரணை மரணங்களும், 2025ஆம் ஆண்டு 6 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில்,
தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் திமுக அரசு, காவல் விசாரணை படுகொலையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தான் என்ன? ஒன்றுமில்லையே! காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பதுதான் திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.
சமூக விரோதிகளால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் போதாதென்று, குற்றவாளிகளை பிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரின் விசாரணையில் நடைபெறும் படுகொலைகளால் மக்கள் சிந்தும் வேதனைக் கண்ணீரே திமுக அரசின் அவல ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாகும்!
மதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மாட்டுவண்டியில் மண் திருடுபவர்களை பிடிக்கும் ஆர்வம் காட்டும் அதிகாரிகள், பெரிய லாரிகளில் நடைபெறும் மணல் திருட்டின் மீதும், குவாரிகளில் நடக்கும் திருட்டுக்களின் மீதும் ஏன் காட்டவில்லை?
ஆந்திரா முதலமைச்சர் இறந்ததற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அளித்து துக்கம் கடைபிடித்த கருணாநிதி..
ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஏன் விடுமுறை அளிக்கவில்லை?
கருணாநிதியின் தெலுங்கு பாசத்தை தோளுரித்து விளக்கிய அக்கா கார்த்திகா அவர்கள் 🔥🔥🔥 @Karthika_MCK#NTK
#சோழர்களின் Military regiments வலங்கைப் பிரிவில் வன்னியர்,பறையர்,வேளாளர் உட்பட பல சாதிகள் இருந்துள்ளன.
Only troops.
அந்த ஒரே பிரிவுகளை மேலும் உடைத்து,ஒரே சாதிக்குள்ளும் பல ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியது
தெலுங்கு #நாயக்கர் கால ஆட்சியிலே,வடுக பிராமணர்களின் துணையோடு.
#Noboru_Karashima
இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும்போதே இந்த திராவிட தெலுங்கு கும்பலும் அவர்களின் கைத்தடிகளும் என்ன அழகா கதை சொல்றானுங்க.
😂😂
#மன்னர்மன்னன்
பாகிஸ்தானில் பலூஸ்தான் விடுதலைப்படையைச் சேர்ந்த இரு பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்துள்ளனர்.
ஈழத்தில் போராளிகளின் தற்கொலைத் தாக்குதலை பயங்கரவாதம் என்று கூறிய இந்திய அரசும் அதன் ஊடகங்களும் இவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை.
அது ஏன்?
இதையே சீமான் சென்று H ராஜாவின் நலம் விசாரித்து இருந்தால் சீமான் பாஜக பி டீம்.
தீம்கா தலீவர் கேட்டா அது சமூக நீதி நாகரிக டீம்.
அதானே திராவிட முகமூடிஸ் ?!
கர்நாடகாவில் 7%,
தமிழ்நாட்டில் 8% மக்கள்தொகை கொண்ட #தெலுங்கர்கள் ,
தமிழ்நாட்டில் பார்ப்பனர்களையும்,
கர்நாடகாவில் தமிழர்களையும்
எதிரியாகக் கட்டமைத்து,இரண்டு மாநில உரிமைகளையும் அனுபவிக்கிறான்.
👌👏👏