மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது.
முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!
தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.
சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம்.
மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது.
மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
@KalyaanBJP_ சரி திருடுன கேமராவ எப்போ தருவேன்னு ஒருத்தர் ரொம்ப நாளா கேக்குறாரு அதுக்கு இதுவரைக்கும் பதில் சொல்ல துப்பு இல்லாத திருட்டு விபச்சாரி நீதான்!
எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
நடிகர் விஜய் ஊழல் - 2
‘குட்டி ஸ்டோரி’ புகழ் நடிகர் விஜய்யின் ஊழல் ஸ்டோரி!
’பிகில்’ பட வருமானம் தொடர்பாக 5.2.2020ல் நடிகர் விஜயின் @TVKVijayHQ பனையூர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அவர் ‘மாஸ்டர்’ பட ஒளிப்பதிவில் நெய்வேலியில் இருந்ததால், அங்கிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்த சோதனையின்போது ’[email protected]’ என்ற ஒரே Apple IDல் நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த Apple IPhoneX மற்றும் lPAD Pro சாதனங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த சாதனங்களில் இருந்த தரவுகளில் ஒன்று, வேறொரு Samsung மொபைலில் குறிப்புகள் எழுத்தப்பட்டிருந்த ஒரு படத்தை தனது IPhone மூலம் 18.11.2017 அன்று எடுத்த புகைப்படம். இதில் இருந்த தரவுகளின் அடிப்படையில் விரிவான கேள்விகளை கேட்டு விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதிகாரிகள் அனுப்பிய முதல் நோட்டீசுக்கு 6.2.2020ல் விஜய் அளித்த பதில்,
’இது எனது மொபைலில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் தான். நான் முதலீடு செய்துள்ள நிலங்கள் பற்றிய தரவு அதில் உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் மூன்றரை கிரவுண்டில் ரூ.23 கோடி, பனையூர் 3வது அவென்யூ மூன்று கிரவுண்டில் ரூ.6.5 கோடி, நீலாங்கரை Kazura Garden 4 கிரவுண்டில் ரூ.5 கோடி, 2127 சதுர அடியில் அடையார் அலுவலக ஃபிளாட்டில் ரூ.2 கோடி, படூர் 2 ஏக்கர் 65 செண்ட் நிலத்தில் ரூ.15.5 கோடி ஆகிய தரவுகள் உள்ளன. அதிலுள்ள மற்ற நில முதலீடுகள் குறித்து உடனடியாக நியாபகத்தில் இல்லை. ஒரு வார காலத்திற்குள் அந்த விவரங்களை அளிக்கிறேன்’என்றார்.
நடிகர் விஜயின் மொபைலிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றிய அந்த படத்தில், விஜய் வாங்கிய சொத்துக்களின் விவரம், அதன் மதிப்பு மற்றும் அவை வாங்கப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.
5 அசையா சொத்துக்களில் மொத்தம் ரூ.52 கோடியை முதலீடு செய்துள்ளதாக விஜய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்குள் விஜய் சமர்ப்பித்த மற்ற சொத்து முதலீடுகளையும் ஆராய்ந்ததில் பல முரண்பாடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். கைப்பற்றப்பட்ட படத்தில் குறிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பைவிட அந்த சொத்து ஆவணத்தில் உள்ள மதிப்பு குறைவாக இருந்துள்ளது.
அதாவது தி.நகரில் உள்ள நிலம் மற்றும் கட்டிடத்தை 11.12.2014 அன்று ரூ.16 கோடிக்கு வாங்கியதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜயின் மொபைலில் கைப்பற்றப்பட்ட குறிப்பில் அந்த சொத்தின் மதிப்பு ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுக்கும் ரூ.7 கோடி வித்தியாசம்.
இதே போன்று ஆவணங்களின்படி விஜய் வாங்கிய 4 சொத்துகளின் மதிப்பு
ரூ.33 கோடி என்று இருந்தாலும், கைப்பற்றப்பட்ட குறிப்பில் அவற்றின் மதிப்பு ரூ.50 கோடியாக எழுதப்பட்டிருந்தது. ஆக ரூ.16 கோடிக்கு விஜயிடம் எந்த கணக்கும் இல்லை என்பது தான் வருமான வரித்துறையினரின் குற்றச்சாட்டு.
இந்த முரண்பாடு குறித்து அதிகாரிகள் அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு 12.3.20ல் நடிகர் விஜய் இப்படி பதில் அளித்தார்..
“சொத்துக்களை வாங்குவதற்காக கேட்டபோது அதன் உரிமையாளர்கள் சொன்ன முதற்கட்ட விலையை தான் கைப்பற்றப்பட்ட குறிப்பில் நான் எழுதியுள்ளேன். உரிமையாளர்களிடம் எனது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்ட விலையிலிருந்து குறைத்து வாங்குவர். அந்த விலையை நான் பிறகு குறிப்பில் எழுதவில்லை” என்றார்.
முதல் நோட்டீசுக்கும் இரண்டாவது நோட்டீசுக்கும் சுமார் ஒரு மாதம் இடைவெளி என்பதால் விஜயின் பதிலை முன்னரே கணித்திருந்த அதிகாரிகள், இரண்டாவது நோட்டீசில் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தனர்..
’கைப்பற்றப்பட்ட குறிப்பில் 2016ல் வாங்கப்பட்ட பொதூர் சொத்தின் மதிப்பு ரூ.15.50 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறிப்பை 2016ல் தான் நீங்கள் எழுதியிருக்க முடியும். தி.நகர் சொத்து 2014லும், நீலாங்கரை Kazura Garden சொத்து 2013லும் வாங்கப்பட்டன. ஆனால் 2016ல் பொதூர் சொத்து குறித்து எழுதும்போது ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு திருத்தப்படாமல், ஏன் சொத்தின் ஆஃபர் விலையையே குறிப்பிட்டுள்ளீர்கள்?’
திரைப்படங்களில் கருப்புப் பண வில்லன்கள் அளிக்கும் வழக்கமான பதிலை தான் ஹீரோ விஜய் இதற்கும் அளித்தார் - ‘அந்த சொத்துக்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டதால், அவற்றின் விலையை குறிப்பில் திருத்துவதற்கு மறந்து போயிருப்பேன்’ என்பதே அந்த பதில்.
முதல் நோட்டீசுக்கு அளித்த பதிலில், கைப்பற்றப்பட்ட குறிப்பில் இருப்பது முதலீட்டு செய்த சொத்துக்களின் மதிப்பு என்று பதிலளித்தார் விஜய். ஒரு மாதத்துக்கு பின்னர் இரண்டாவது நோட்டீசுக்கான பதிலில், அவை சொத்துக்களின் மதிப்பு அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட முதற்கட்ட விலை என்று பல்டி அடித்தார்.
இதனை மறுத்து, விஜயின் அலுவலகம் இயங்கிவரும் அடையாறு ஃபோர் சீசன்ஸ் வீட்டை 2007ல் ரூ.1.45 கோடிக்கு வாங்கப்பட்டதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜய் தனது மொபைலில் எழுதி வைத்திருந்த குறிப்பில் அதன் விலை ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 2007ல் வாங்கிய சொத்தின் விலையை கூட குறித்து வைத்துள்ளார் விஜய் என்பது தெளிவாகிறது. ஆஃபர் விலையை தான் குறித்துள்ளேன், வாங்கிய சொத்தின் மதிப்பு அல்ல என விஜய் சொல்வது ஏற்க முடியாது. விஜய் எழுதி வைத்துள்ளது தான் அந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு என்று அமலாக்கத்துறை வாதிட்டது.
Unexplained Investment என்ற பெயரில் இந்த தொகையை 2014-15 முதல் 2017-18 வரை அந்தந்த கணக்கீட்டு ஆண்டுகளின் வருமானத்தில் சேர்த்தது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவில் அவருக்கு சாதகமாக மேல்முறையீட்டு அதிகாரி தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். அங்கு தான் மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக ஆவணங்கள் கூறுகிறது.
விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரிக்கவில்லை. ஆவணங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை மட்டும் வைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்று சொல்லி மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பையே 3.12.2024ல் தீர்ப்பாயமும் உறுதி செய்தது.
ஓரளவு அடிப்படை நிதி நிர்வாகம் தெரிந்தவர்கள் இந்த வழக்கு விவரங்களை பார்த்தாலே, ’சொத்துக்களில் கருப்பு பண முதலீடு’ நடைபெற்றுள்ளதை புரிந்துக்கொள்வார்கள். இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் குற்றத்தை நிரூபிக்க மிகவும் அடிப்படையான விசாரணையை கூட வருமான வரித்துறை நடத்தாமல் ‘கோட்டை’ விட்டுள்ளது தெளிவாகும். இந்த பிழை தெரியாமல் நடந்தது அல்ல. டெல்லி முதலாளிகளின் கண்ணசைவில் அதன் கூலிப்படையான வருமானத்துறை செய்துள்ள ‘சமரசத்தால்’ நடிகர் விஜய் தப்பிக்க விடப்பட்டுள்ளார்.
இப்போது புரிகிறதா?
பாஜகவால் இயக்கப்படுகிற ஒரு நபர் தான் நடிகர் விஜய் என்பது.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.2.2026
(நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும்)
@TVKPartyHQ@BussyAnand@AadhavArjuna
ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்பு
முதலில் வந்தே மாதரம் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஆதவ் அர்ஜுனா கொதிப்பு
அடுத்த முறை நடக்காது என்று பதிவு
இரண்டாம் முறை 23 அமைச்சர் பதவி ஏற்பு
எப்போதும் போல் முதலில் வந்தே மாதரம்
அமைச்சர் ராஜ்மோகன் கொதிப்பு
நாளைக்கு மூன்றாம் முறை பதவி ஏற்பு
@VCKofficial_ வன்னியரசு பதவி ஏற்க இருக்கிறார்
வந்தே மாதரம் பாடினால்
பதவி ஏற்க மாட்டேன் என்று வன்னியரசு மறுக்க முடியுமா
@TVKVijayHQ அமைச்சர்கள் @tncpim புறக்கணிக்க முடியுமா
சவால் பதில் சொல்லுங்கள்
@VanniArasu_VCK
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகத் திகழ்ந்து, நோயாளிகளின் நலனுக்காக பகலிரவாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும், சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகப்பெரிய துணையாக உள்ளது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்கள் பணி, என்றும் போற்றுதலுக்குரியது.