எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
▶️ ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
▶️ இராமநாதபுரம் இரட்டைக் கொலை,
▶️ சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,
▶️ அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்
என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.
இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!
ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் – வளர்ச்சிக்காகவும் - மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தாத்தாவிற்காகச் சண்டை செய்தோம், அவர்கள் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம், இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம், இதுதான் நம் தி.மு.க.வின் வரலாறு. அந்த வரலாறு எப்போதும் மாறாது, மாறவும் கூடாது.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#WATCH | "வீட்ல என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.."
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
#SunNews | #MKStalin | #TVKVijay
Absolutely Disgusted to see some IDs trying to degrade women and their choices, even dragging in people who have absolutely nothing to do with the matter.
I am sick and tired of the excuse: “They did the same.”
THAT IS an UNACCEPTABLE s#!++y excuse.
No.And even if your worst enemy did something wrong, it never gives anyone the right to abuse, demean or throw muck at another person. Especially a woman.
Nothing justifies misogyny. NOTHING.
The DMK stands firmly for women’s dignity, rights and freedom. Any act that crosses the line of decency will never ever be tolerated. Whoever it is.
And please, spare us the ridiculous justification: “They did it, so we did it too.”
That is not an excuse.
It is absolutely unacceptable🙏🏾
@DMKITwing will also actively bring to the attention of the @DMKLegalWing all such matters.
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
#WATCH | "தைரியமா சொல்லு.. ரகசியமா வச்சுக்குறோம்னு சொன்னது அந்த பசங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?
காவல்துறை திரித்து சொல்கிறார்கள்.. நடந்த உண்மை என்ன தெரியுமா?”
மாணவர் அமுதனின் தந்தை பரபரப்பு பேட்டி
#SunNews | #KovaiStudent | #Kallakkurichi
பெண்கள் பாதுகாப்பு என்று பேசிய முதல்வர் விஜய்யை பார்த்தீர்களா..??
சொந்தக் கட்சியினருக்கு இவ்வளவு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஒரே கட்சி தவெக தான்.
பெண்களின் வாக்குகளைப் பெற கூச்சமாக இல்லையா CM சார்?
#WATCH | நீதி வேண்டும்.. நீதி வேண்டும்..!
“தவெக அரசே.. தவெக அரசே.. நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. மாணவன் அமுதன் படுகொ*க்கு நீதி வேண்டும்” என கண்டன முழக்கங்களை எழுப்பி கோவையில் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!
#Kovai | #DMKProtest | #TVKFailed | #KalaignarSeithigal
போதை கும்பலைக் காட்டிக் கொடுத்த ஒரே காரணத்திற்காக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அமுதனை அந்தப் போதை கும்பல் கொன்றிருப்பதாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவிக்கிறார். ஆனால், தவெக அரசோ பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது.
போதைப்பொருளுக்கு எதிராக இருப்பது போல நாடகமாடிவிட்டு, போதை கும்பலைப் பற்றி காவல்துறையிடம் தகவல் கொடுத்தால், அதை எப்படி வெளியே கசியவிடலாம்? அப்படியென்றால் இது யாருக்கான ஆட்சி? யாரைக் காப்பாற்ற நினைக்கும் ஆட்சி இது?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்றும் துணையாக நின்று, இந்த படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவோம். போதை கும்பல்களைக் காப்பாற்ற நினைக்கும் இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!
#கொலை_மான்செஸ்டர்_கோவை