தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ@INCIndia@cpimspeak@tncpim@thirumaofficial@IUMLTNOfficial
நம் காலத்தின் மகத்தான தோழர் ஆர்.நல்லகண்ணு மறைந்தார்
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டத்தின் பாற் ஈடுபாடு கொண்டு, தம் போராட்ட வாழ்வை தொடங்கியவர். இன்று தமிழகம் முழுவதும் இயங்கும் விவசாய சங்கங்கள் உருப்பெறுவதற்கு கடந்த நூற்றாண்டில் அடித்தளமிட்ட தலைவர்களுள் முதன்மையானவர். இன்றைய இந்திய அரசியலானது கடந்த எண்பதாண்டு காலம் நாம் சந்தித்த ஏராளமான போராட்டங்களின் விளைவு. காலனிய ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தை எதிர்த்து தலைமறைவு போராட்டம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம், பல்வேறு தொழிலாளர் நலச் சங்கப் போராட்டம் என அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சாதிய நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து போராடியவர், அப்போராட்டத்தில் தம் குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த பின்னரும் பட்டியல் சமூக மக்கள் பக்கம் நின்றவர்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளராக நெடுநாள் நீடித்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கிய அவரது போராட்ட வாழ்க்கை, பின் இந்திய அளவிலான இடதுசாரி தலைவர்களில் முதன்மையானவராக தொடர்ந்தது. அவரது வாழ்க்கை ஓர் அரசியல் பயணம் மட்டுமல்ல; அது ஒரு நெறிப்பாடம். இன்றைய தலைமுறைக்கு தம் அறநேர்மையான செயல்பாட்டினூடாக ஓர் வழித்தடத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் அவர் என்றும் வாழ்வார்.
செவ்வணக்கம், தோழர் நல்லகண்ணு 🙏
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்.
#jananayakan #parasakthi
பௌத்தத்தையும், அம்பேத்கரியத்தையும் எளிய மக்களிடையே சமரசமின்றி பரப்பிய பேரன்பு கொண்ட சமத்துவ தலைவர் அண்ணன் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்த நாளில் அவர் விரும்பிய எண்ணங்கள் ஈடேற உறுதி கொள்வோம்!
Miss you Anna ❤️ #jaibhim