ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
தூத்துக்குடி 1-வது வட்ட தி.மு.க செயலாளர் திரு. A.C.ராஜன் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இன்று அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்தினோம்.
தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
புவி வெப்பமடைதல் - காலநிலை மாற்றம் போன்ற முக்கிய சூழலியல் பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு, திருச்செந்தூர் - குலசேகரன்பட்டினம் கடலோரப் பகுதியில் சதுப்புநில மரங்களுடன் பனை, வேம்பு உள்ளிட்ட மரபார்ந்த மரங்களை நட்டு உருவாக்கப்பட்டுவரும் பசுமைக் கேடயம்(Bio Shield) பணிகளை ஆய்வுசெய்தோம்.
மேலும், குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோவின் ஏவுதளம் அமையவிருக்கும் நிலையில், அப்பகுதியில் சுற்றுச்சூழலைப் பேணிக் காத்திட இந்தப் பசுமைக் கேடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
முன்னாள் அமைச்சர் திரு. @ARROffice, தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர்.
பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
சட்டமன்றத்தில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார்; மறுநாளே ரெய்ட் வந்திருக்கிறார்கள்; இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விஷயம்; எங்கள் வீட்டிற்கு ரெய்ட் செய்ய வந்தவர்களுக்கு சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கவில்லை; அந்த கேவலமான காரியத்தை திமுக செய்ததில்லை
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
#RSBharathi | #DMK | #EVVelu | #CMVijay
"கண்ணியமாக நடத்திய சட்டமன்றத்தை EVP பக்கத்தில் இருக்கும் சினிமா ஷூட்டிங் கூடாரம் போல மாத்திட்டாங்க".. குட்டி ஸ்டோரி சொல்லி விமர்சித்த திமுக கவுன்சிலர் பரிதி இளம்சுருதி
Chennai | CMvijay | 24 June 2026
#Newstamil24x7#DMKcouncillor
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95-வது பிறந்தநாள் இன்று. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கையைச் சட்டமாக்கி, பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கு முடிவுகட்டியவர்.
சமூகநீதியின் ஆதாரப்புள்ளியாக இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்திடத் துடிக்கும் ஆதிக்கசக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து, அவர் வழியில் போராடுவோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினருக்கு உணர்த்துவோம்.
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
RSS, BJP காலில் விழுந்து, சாணி ஷூவை நக்கி தான் ஆட்சிக்கு வந்திருக்கான்..
இனி எப்படி பிஜேபி கொண்டு வரும் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பான்..