இருள் கூடி வெளிச்சம் களைந்து அவள் விழிகளுக்குள்
அகபட்டிருக்கும் இரவு
மடி கிடத்தினாள் ஆகாயம் தெரிந்தது கண்கள் விரிந்தது வின் மின் பூக்களை தேடி
என் தலைகோதும் அவள் விரல்களுக்கு வளைந்து நெளிகிறது முடி கால்கள்
பாக்கியம் பெற்றேன் அவளிடம் தாய்மையின் உணர்வில் !
💕
#உணர்வுகளின்_நிழல்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.
SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
4–5 agencies appear to be working on a coordinated narrative around AK’s latest video , the objective seems clear , create an impression that AK has lost his fanbase.
Interestingly, the comments section is heavily populated with fake IDs.
London Meet Irritation !
அன்புள்ள அண்ணா @cmotamilnadu@actorvijay
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் “உனக்குப் பிடித்த ஹீரோ யார்?” என்று கேட்டால், “விஜய்” என்று சொல்லி வந்தவள் நான். ஓராண்டோ, இரண்டாண்டோ அல்ல… ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயின் ரசிகையாக இருந்து வருகிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக இணையத்தில் விஜய் ரசிகையாகவே பயணித்து வந்துள்ளேன். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதி விஜயின் பக்கமும் நின்று வருகிறேன்.
கடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியுள்ளேன். ஆனால், கடந்த திமுக ஆட்சியில் @trbrajaa தலைமையில் செயல்படும் திமுக ஆபாச விங் எனப்படும் சமூக ஊடகக் குழுக்களின் தொடர் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இணைய வன்முறையால் என் பணியிலும், மன ரீதியான பாதிப்புகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டேன். இது எனக்கு மட்டுமல்ல என் போன்ற பலருக்கும் இந்த இணையத் தாக்குதல் என்பது நடந்ததுள்ளது.
அந்த நேரத்தில் நம்பிக்கையிழந்து நின்ற எனக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை நீங்கள் மட்டுமே. “தளபதி அரசியலுக்கு வந்துவிட்டார்; இனி நமக்கு எந்தக் குறையும் இருக்காது” என்ற முழுமையான நம்பிக்கையோடுதான் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறேன்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக ஆட்சியில் டி.ஆர்.பாலுவின் சாராய ஆலையிலிருந்து சாராயம் கொள்முதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
திமுகவின் நிறுவனங்களுக்கு எதற்காக ஆதாயம் தர வேண்டும்?” என்று கேள்வி எழுந்தபோது அமைச்சர் விக்னேஷ் @VigneshTvkCbe திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சமமாக கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
அவர் அதிமுகவின் நிறுவனம் என குறிப்படுவதில் சசிகலாவின் மிடாஸ் ஆலை உள்ளது, அதிமுகவில் சசிகலா தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையில், மேலும் மிடாஸ் ஆலையை அவர் லீசுக்கு விட்டும் பல நாட்கள் கடந்துவிட்ட நிலையில், எதற்காக இதை திமுக–அதிமுக என சமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
திமுக குடும்பங்களின் தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்காகவா தவெக ஆட்சிக்கு வந்தது? அதிலும் டி.ஆர்.பி. ராஜா என்ற விஷச்செடிக்கு தவெக ஆட்சியில் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டிய அவசியம் என்ன?
கடந்த சில நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.
நீங்கள் குறிப்பிட்டதுபோல திமுக ஒரு தீய சக்தி, அந்தத் தீய சக்தி எதற்காக தவெக ஆட்சியில் வளர அனுமதிக்கப்பட வேண்டும்?
கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆட்சியாலும், டி.ஆர்.பி. ராஜாவாலும் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பலருக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறோம். மேலும் தவெக தொடங்கியது முதல் தவெக மீதான தாக்குதலும் உங்கள் மீதான இணைய ஆபாச தாக்குதலையும் முன்னெடுத்தவன் இதே டிஆர்பி ராஜா தான்.
நம்மை ஒடுக்கியவர்களே தவெக ஆட்சியிலும் அதிகாரமும் ஆதாயமும் பெற்று வாழ்வதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது.
நாங்கள் உங்களை நம்பித்தான் இருக்கிறோம்.
எங்கள் வலியை, எங்கள் கேள்வியை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நன்றி! 🙏🏻
மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக: வெளுத்தது போலி நாடகத்தின் சாயம்! - விரிவான கண்டன அறிக்கை
எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்!
உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.
உண்மை நிலை என்ன?
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் 'காலை / மதியம் / இரவு' போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு (Seal) வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன!
அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே — அதாவது திமுக ஆட்சியில்தான் — அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை (Template) உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்?
தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்!
தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது!
உடனடி நடவடிக்கை:
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு 'தமிழ் மொழியில் மட்டுமே' விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்.
பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிப்போன திமுகவினர் இனிமேலாவது இதுபோல் மலிவான அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#StopCheapPolitics #DMK_Hypocrisy #TamilNadu #LanguagePolitics #FactCheck
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK