முஸ்லிம்களுக்கு ஒரு நீதி கஸ்தூரிக்கு ஓரு நீதியா
முஸ்லிம்கள் ஏதேனும் தவறு செய்தால் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்யும் காவல் துறை கஸ்தூரி மீது பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால் இதுவரை காவல் துறை ஏன் கைது செய்யவில்லை
காயிதேமில்லத் பெயரில் விருது வழங்கவும் வக்ஃபு சட்டத்தை எதிர்த்து த.வெ.க தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி
அத்துடன்
இஸ்லாமியர்கள் கல்வி வேலைவாய்ப்பில் மத்தியில் 15% மாநிலத்தில் 7% இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் @tvkvijayhq@TVKNewsUpdates
@chennaipolice_ 1)போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் இளைஞர்கள் அதன்பால் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
2) ரவுடித்தனத்தை ஹீரோஇஸமாக காட்டும் சினிமா காட்சிகளை தடைசெய்ய வேண்டும்.
3)கூலிக்கு கொலை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்.
சென்னை ஆலந்தூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை
இந்த லாட்டரி விற்பனையைதடுக்க
தமிழ் நாடு அரசு @mkstalin மற்றும் @tnpoliceoffl
இதை விற்பனை செய்யும் நபர்களையும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹமாசின் தாக்குதலை காட்டி இசுரேல் தன் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தது. இனப்படுகொலை வழக்கு இசுரேலுக்கு எதிரானதுதானே ஒழிய, ஹமாஸுக்கு எதிரானதல்ல என்பதால் இசுரேலின் 'பயங்கரவாதி ஹமாஸ்' எனும் வாதத்தை நிராகரித்தது. அதாவது இனப்படுகொலைக்கு மூலகாரணம் ஹமாசின் தாக்குதலும், ராணுவ நடவடிக்கையும் என்பதை நிராகரித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் என்.ராம் துவங்கி தமிழ்ச்செல்வன், அ.மார்க்ஸ் உட்பட பலர் கட்டமைக்க முயன்ற, ஈழ அழிவிற்கு புலிகளே காரணம் எனும் வாதத்திற்கு பதிலடியாகவே தென்னாப்பிரிக்காவின் வழக்கு இருக்கிறது. இத்தனைக்காலம் புலிகளின் பெயரைச் சொல்லி, சிங்களப்பேரினவாதத்தை விவாதத்திற்கோ, விமர்சனத்திற்கோ கொண்டுவராதவர்களின் முகமூடிகள் கிழிகின்றன. மண்டேலாவின் தோழர்கள் உண்மையான மார்க்சிய நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள். அது போலிகளை அம்பலப்படுத்துகிறது.
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு உறுப்பினரும் ம ம க துணைப் பொதுச் செயலாளருமான எம் யாகூப் அவர்களை ஒருமையில் பேசும்
தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா
மீது மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
சென்னை கிறிஸ்த்தவ கல்லூரி விவகாரத்தில் மேயர் மற்றும் துணை மேயருக்கு தெரிவிக்காமல் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து வரம்பு மீறி செயல்பட்ட அழகுமீனா தொடர்ந்து தாம்பரம் ஆணையாளராக நீடிப்பது முறையல்ல
@CMOTamilnadu@KN_NEHRU@sunnewstamil@PTTVOnlineNews@NewsTamilTV24x7@news7tamil@News18TamilNadu@ThanthiTV@dinathanthi@DinakaranNews@TamilTheHindu@THChennai
#TambaramMunicipalCorporat
பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இசுரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை தென்னாப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் மக்கள் எழுச்சியும், பலவேறு சிந்தனையாளர்கள், கலை-இலக்கிய படைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், திரைதிரை கலைஞர்கள் என வெளிப்படுத்திய இசுரேலிய எதிர்ப்பும், பாலஸ்தீன ஆதரவும் வரலாற்றில் முதல்முறையாக சாமானியனுக்காக நீதிமன்றத்தை நாடியிருப்பது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. மேற்குலக-ஜியோனிச பிரச்சாரங்களை முறியடித்து மக்கள் குரல் மேலெழும்புகிறது. கிட்டதட்ட 3 மாதத்தில் 10,000 குழந்தைகளை கொன்று குவித்திருக்கிறது இசுரேல். வாய்சவடால் துருக்கியோ, மத அரசியலென்று சொல்லி அமெரிக்க கைப்பாவையாக இருக்கும் சவுதியோ இக்குழந்தைகளுக்காக களமிறங்கவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் இசுர முதல் வாரத்திலேயே போரை நிறுத்தியிருக்கும். ஆனால் புரட்சிகர அரசியல்வழியே காலனியத்தை விரட்டிய தென்னாப்பிரிக்கா களமிறங்கியுள்ளது.
ஈ.ழப்படுகொலையின் போதும் மூன்று மாத அளவில் இதே எண்ணிக்கையில் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர். 5வது மாத இறுதியில் கிட்டதட்ட 30,000 குழந்தைகள் கொலையாகினர். ஐ.நாவின் போர் சூழலில் குழந்தைகளுக்கான அமைப்பு இதை எச்சரித்திருந்தது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையான படைப்புலக ஆளுமைகள், அறிவுச்சமூக ஆளுமைகள் தமிழ் இன அழிப்பை உலகிற்கோ, இந்திய அளவிலோ கொண்டு செல்லும் எந்த முயற்சிக்கும் தயாராக இல்லை. இந்திய அரசின் உதவியில்லாமல் இந்த அழிப்பு நடக்கவில்லை. தம் சொந்த நாடு செய்த இப்படுபாதக செயலை கண்டிக்கும் துணிவோ, போராட்ட மனமோ, அற உணர்வோ தமிழ் கலை இலக்கிய, அறிவுச் சமூகத்தில் எழவில்லை. சாமானிய தமிழனே இன்றளவும் இந்த அநீதிக்கு எதிராகவும், இந்திய அரசிற்கு எதிராகவும் குரல் எழுப்புகிறான். வி.பு மீது ஒட்டுமொத்த குற்றத்தை சுமத்திவிட்டு, இந்திய-சிங்கள பேரினவாத்தை பாதுகாக்கும்
தமிழின் இந்த ஒட்டுண்ணி வகை அறிவுச்சமூக-படைப்புலகத்தைப் போல, ஹமாசினை குற்றவாளியாக்கி ஒதுங்கிக்கொள்ளும் அரசியலை சர்வதேச படைப்புலகமோ, அறிவுச் சமூகமோ செய்யவில்லை. வீதிகளில் இறங்கியுள்ளனர், விவாதங்களை எழுப்புகின்றனர், பொய் பேசும் ஊடகங்களை அம்பலப்படுத்துகின்றனர். இலட்சக்கணக்கான பதிவுகள், குரல்கள், ஆய்வுகள் வெளியாகின்றன. பேரரசுகளின் இராணுவங்களை பின்னுக்கு நகர்த்துகின்றனர். ஐ.நாவின் அவைகள் கூடவேண்டிய நெருக்கடியை உருவாக்குகிறார்கள். ஜியோனிச மதவாதம் குறித்த வரலாற்று ஆய்வுகளை அம்பலப்படுத்துகிறார்கள். இசுரேல் உருவாக்கிய ஸ்பைகாட் ஒப்பந்தங்களை பதின்பருவ இளைஞர்கள் பேசுகிறார்கள். ஆனால், தமிழின் ஆகப்பெரும் அறிவுச்சமூகத்திடம் தமிழர்களை வஞ்சித்து சிங்கள பேரினவாதத்திற்கு தேசத்தை தாரைவார்த்த சோல்பெரி கமிசனை பற்றி கேட்டுப்பாருங்கள், முழிப்பார்கள். ஆனால் புலிகள் மீதான அவதூறுகளை ஆய்வு அறிக்கை போல வாசிப்பார்கள். சென்னை புத்தக சந்தை வந்துள்ளது. இன அழிப்பை பற்றியோ, பேரினவாத வரலாறு குறித்தோ, அமெரிக்க-இந்திய பிராந்திய அரசியல் குறித்தோ, கொல்லப்பட்ட தமிழ் குழந்தையினைப் பற்றியோ எத்தனை எழுத்துகள் வந்திருக்கின்றன என தேடிப்பாருங்கள், நம் அவலம் புரியும். ஆனால் ஈ.ழ எதிர்ப்பு, பு.லி எதிர்ப்பு நூல்கள் வந்தவண்ணம் உள்ளன. இசுரேலிய ஜியோனிச கொள்கைக்கு இணக்கமாக நடந்துகொள்ளும் மேற்குலக உயர் வர்க்க சமூகத்தின் மனிதகுல விரோத அரசியலை, தமிழ் உலகில் மிக எளிதாக சந்திக்கலாம். 14 ஆண்டுகள் கடந்தும் வி.பு மீது மட்டும் குற்றம் சுமத்த முனையும் தமிழ் படைப்புலக, சிந்தனையுலகவாதிகளைப் போல நோய்பீடித்த சமூகத்தினை உலகில் வேறெங்கும் காண இயலாது. தென்னாப்பிரிக்கா நமக்கு வழிகாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம், போராடுவோம், அம்பலப்படுத்துவோம். இது மனிதநேயம் மட்டுமல்ல, நம் கடமையும் கூட. ஏகாதிபத்தியத்தை வேரருக்காமல் சனநாயகம் சாத்தியமில்லை. சனநாயக படைப்புலகும் சாத்தியமில்லை.
@majedbamya
இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெறும் போதே முன்னேறுவோமென தமிழரிடத்தில் விளக்கி, மக்களை அணி திரட்டிய அச்சமற்ற மாவீரன் #பெரியார்
இந்தியாவிடம் அடிமைப்பட்டோமென அங்கலாய்த்து தன் வாழ்நாள் இறுதிவரை விடுதலையை முழங்கிய பெருவீரன் #பெரியார்
இந்துத்துவ-சனாதன சாக்கடையிலிருந்து மீள வேண்டுமென போர்க்குணத்தோடு களமாடிய போராளி #பெரியார்
தந்தைப் பெரியாருக்கு வீரவணக்கம்
#Periyar50
பாலஸ்தீனத்தின் மீது இனப்படுகொலை தாக்குதல் செய்யும் 40 ராணுவ அதிகாரிகள் மீதான புகாரை சர்வதேச நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
இலங்கை ராணுவ தளபதிகள் மீதும் இது போன்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி பேரழிவு மழையிலிருந்து தமிழர்களை மீட்க மோடி-பாஜக அரசு உதவாது என்கிற காரணத்தினால், நம் மக்களை நாமே மீட்க களமிறங்குவோம்.
சென்னை வெள்ளத்தில் தொடர்ந்து களப்பணி செய்த மே17 தோழர்கள் தென் மாவட்டத்திலும் களப்பணியை மேற்கொள்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கைகோர்க்க அழைக்கிறோம்.
நம் தமிழர் துயர் துடைக்க உதவும் பொருட்களை, அல்லது அதற்கான நிதி பங்களிப்பை(விருப்பமிருப்பவர்கள்) எதிர்பார்க்கிறோம்.
-----
மேலதிக விவரங்கள்:
சென்னை மீட்ட நாம், தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்களை மீட்க அணியமாவோம்! மக்களை காக்க, களப்பணி செய்ய, நிவாராணப் பொருட்கள் வழங்க, நிதியுதவி செய்ய வாய்ப்புள்ளவர்கள் பங்களிப்பு செய்ய தோழமையுடன் அழைக்கிறோம்! - மே பதினேழு இயக்கம்
தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத பெருமழையினால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் நிலங்கள், உடமைகள், கால்நடைகள் என வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். வீடுகள் வாழ்விடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளனர்.
மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடக்கப்பட்டிருப்பதாலும், வீடுகள், பொருட்கள் சேதமடைந்திருப்பதாலும் அன்றாடத் தேவைகளை சந்திக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றிற்கெல்லாம் முறையான இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசினை வலியுறுத்தும் அதே நேரத்தில், மக்களை விரைந்து மீட்டெடுக்க பணிகளை வேகமாக முன்நகர்த்த நாம் கைக்கோர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளுக்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இறங்கியுள்ளார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் தார்பாய், பாய், போர்வை போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது. நிவாரணப் பணிகளுக்கான தங்கள் நிதிப் பங்களிப்பினை செய்ய முடிகிற தோழர்கள் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருட்கள், உடைகள் போன்றவற்றையும் அளிக்கலாம்.
A/C Number: 99980118853691
A/C Name: PUGAZHENTHI
A/C Type: Savings
Bank: Federal Bank
Branch: Panruti
IFSC: FDRL0001968
MICR: 607049202
SWIFT: FDRLINBBIBD
Google Pay (GPay): 8098111543
பொருளாதாரத் தேவைகளை சந்திக்க மே பதினேழு இயக்கத்திற்கு துணை நிற்குமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:
9884864010, 9444327010
மே பதினேழு இயக்கம்
20/12/2023
இன்று பாராளுமன்றத்தில் 45 மாநிலங்களவை, 33 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சனநாயகக் கொலையை செய்துள்ளது பாஜக. இவர்களை இடைநீக்கம் செய்துவிட்டு 7 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. ராஜ்யசபாவில் 2 முக்கிய மசோதாக்களான ஜம்மு&காஷ்மீர் திருத்த மசோதா, யூனியன் பிரதேச மசோதா ஆகியவற்றை 14 நிமிடங்களில் நிறைவேற்றியிருக்கிறது. தபால் அலுவலக மாற்ற மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. இதன்படி, தபாலில் அனுப்பப்படும் எந்த கடிதத்தையும் பிரித்து படிக்க உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு செய்தியும் ராஜ்யசபாவில் கேள்விக்கு பதிலாக பாஜக கொடுத்துள்ளது. அதில் மோடி ஆட்சியில், ஒன்றிய அரசின் திட்டங்கள் கிட்டதட்ட 800க்கும் அதிகமானவை நிறைவேறுவதில் தாமதமாகி உள்ளது, மேலும் 411 திட்டங்கள் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நிதி சுமையாக கிட்டதட்ட ரூ4,31,000 கோடி அதிகமாகியுள்ளது.
மோடி அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?
நிர்வாக திறமையற்ற காரணத்தால் கிட்டதட்ட நான்கரை லட்சம் கோடியை வீணடிக்கும் மோடி-பாஜக அரசு, தமிழகத்தின் வெள்ள நிவாரணத்திற்கு 400கோடி ரூபாயை பிச்சையாக போடுகிறது.
24.5லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை நிர்வகித்து நிறைவேற்ற வக்கில்லாத மோடி சர்க்கார், இத்திட்டங்களுக்கான செலவை 29 லட்சம் கோடியாக மாற்றியுள்ளது.
திமுக அரசிடம் ரூ4000 கோடிக்கு கேள்வி எழுப்பும் நாம், இந்த ரூ4,31,000 கோடிக்கு எப்படி கேள்வி கேட்காமல் இருக்க இயலும்?
இச்சமயத்தில், 2015 சென்னை வெள்ளம் முதல் 2023 வெள்ளம் வரையிலான பேரிடர்களுக்கான நிவாரண தொகை எனும் தமிழர்களது நிதியை கொடுக்காமல் இழுத்தடிக்கும் மோடி-பாஜக கும்பலை விட மிகப்பெரும் எதிரியை தமிழர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். கடந்த 9 ஆண்டுகளில் 6 பேரிடர்களை நாம் சந்தித்து மீண்டிருக்கிறோம். இதனால் நாம் அடைந்த இழப்பு கிட்டதட்ட 1 லட்சம் கோடியை தாண்டுகிறது.
பேரிடர் மேலாண்மைக்காக மோடி அரசு இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு பெரும் தொகையை ஒதுக்கியுள்ளது. மராத்தியத்திற்கு ரூ19,000 கோடியும், உத்திர பிரதேசத்திற்கு ரூ11,000 கோடியும், தமிழகத்திற்கு 6000 கோடியுமாக ஒதுக்குள்ளார்க்ள்
இப்படியான பேரிடர் மேலாண்மைக்கான நிதியில் வஞ்சிக்கிறது பாஜக. மேலும், பேரிடர் உதவித்தொகையை கொடுக்க மறுக்கிறது. ஆகவே ஒருபுறம் பேரிடரை தடுக்கும் மேலாண்மையை கட்டமைக்க இயலாமலும், மறுபுறம் பேரிடரால் அழியும் போது உதவி செய்யாமலும் நம்மை அழிக்கிறது ஆரிய-பார்ப்பனிய-பாஜக. இந்நிலையில் தென்-தமிழகமும் பேரிடரை எதிர்கொண்டிருக்கிறது. இதுவரை வட தமிழகம், டெல்டா, குமரி ஆகிய இடங்கள் பேரிடரை எதிர்கொண்டன. ஆனால் இன்றய நிலையில் பல மாவட்டங்கள் பேரிடருக்குள்ளாகியுள்ளோம். இப்படியான சூழலில், தமிழர் மீதான இந்த வன்மத்தை நாம் தீவிரமாக எதிர்கொள்ளவில்லையெனில், நாம் அழிந்து போகும் நிலையேற்படும்.