The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
This Lucknow pitch is just unplayable. No batter except Rohit Sharma has been able to stand on this pitch for long.
Will rate his 87 on this pitch higher than his double hundreds.
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர்
கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்!
தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்!
கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது.
கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது.
தவெக அரசு @TVKVijayHQ
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தமிழக அரசை @CMOTamilnadu@CollectorCbe
வலியுறுத்துகிறது.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.
இன்று-
#அன்னையர்_தினம்
கடந்த 2021 ஆம் ஆண்டு
வானூர் தொகுதியில் போட்டியிட்டு
தோல்வி அடைந்த போது
என்னுடைய அம்மா
#புஷ்பம்_ரத்தினசாமி அவர்கள்,
“பரவாயில்லப்பா அடுத்தவாட்டி ஜெயிச்சுடுவ”என்று ஆற்றுப்படுத்தினார்.
அம்மா சொன்னது போல
அவங்க ஆசீர்வாதத்தில்
இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன்.
ஆனால், அதைக்கண்டு மகிழ
அம்மா தான் உயிரோடு இல்லை.
உடல் நலமில்லாமல் அம்மா மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு மாதமும் எப்படி வேதனைப்பட்டேனோ
அப்படித்தான் இப்போதும்
அம்மா இல்லாமல் வேதனைப்படுகிறேன்.
கலப்படமில்லாத அக்கறை
கலப்படமில்லாத அன்பு
💕 அம்மாவுடையது.
#அன்னையர்_நாளான இன்று
அம்மாவுக்கு எனது புகழஞ்சலி.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
10.5.2026
வேண்டுகோள்
விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்
--- துரை ரவிக்குமார்
@WriterRavikumar
"என்னைப் பொறுத்தவரை, எந்தவித அச்சமும் சாய்வோ இன்றி மற்றவர்களுடைய பழிச்சொல்லுக்கு கவலைப்படாமல் மக்களுக்கு எது நன்மை எது தீமை என்பதை வெளிப்படையாய் எடுத்துரைப்பவன் எவனோ அவனே தலைவன்.”
-பாபா சாகேப் அம்பேத்கர்
#babasahebambedkar | #ambedkar | #AmbedkarQuotes | #neelamsocial
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.