இன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினோம்.
மாலையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில், ஏழை எளிய மக்களுக்கு தையல் எந்திரம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் வழங்கி, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் மலர வேண்டும் என்ற கேப்டன் அவர்களின் மக்கள் நலப் பாதையை தொடர்ந்து முன்னெடுத்தோம்.
கேப்டன் அவர்களின் கொள்கைகளையும், மக்கள் சேவையையும் தொடர்ந்து முன்னெடுப்போம்! ❤️💛
#CaptainBirthday #Vijayakanth #தேமுதிக #DMDK #விருத்தாசலம் #மக்கள்சேவை #எல்_கே_சுதீஷ்
#CaptainVijayakanth
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கேப்டன் ஆலயத்தில் தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் என் தலைமையில் நடைபெற்றது.
மகளிர் அணியினருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடி, நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கினேன்.
பெண்கள் சமூகத்தின் வலிமை; அவர்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை இந்நாளில் நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
#dmdkofficial #womensday #PremalathaVijayakanth
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி அவர்களின் 28ஆம் ஆண்டு திருமண நாளில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.திரு.வி.விஜய பிரபாகரன் அவர்களும் உடனிருந்தனர்
வாழ்ந்தவர்கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்!
நமது பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்!
#captainvijayakanth#PremalathaVijayakanth
இன்று எனது தந்தை திரு. அழகர்சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை, சாலி கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில், என் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடனும், உறவினர்களுடனும் கொண்டாடினோம். அப்போது எடுக்கப்பட்ட காணொலி தொகுப்பு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் , தேமுதிக வேட்பாளர் திரு.S.ஆனந்த்,https://t.co/wJxZzeDVVW., அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் (19.02.2023 - 24.02.2023 வரை) வீதி,வீதியாகச் சென்று முரசு சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
காஞ்சிபுரம் உத்திரமேரூர், ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி, கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஈரோடு-முள்ளம்பட்டி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் பிஞ்சு குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
#lpgpricehike