மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட்களை மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்கள் வழங்கினார்.
உடன் செங்கல்பட்டு MLA திரு.S.தியாகராஜன் அவர்கள் இருந்தார்.
நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் இன்றைய உரை, சட்டமன்றத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்த ஒரு முக்கியமான உரையாக அமைந்தது.
உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வுகளே சாட்சி. மக்கள் நலன் சார்ந்த கேள்விகளிலும், அரசின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களிலும் உறுதியுடனும், அசைக்க முடியாத தைரியத்துடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கருத்துகளை தெளிவாக பதிவு செய்தார்.
எதிர்க்கட்சியாக இருப்பதற்காகவே எதிர்ப்பை முன்வைப்பதை விட, மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை இன்றைய உரை மீண்டும் நினைவூட்டியது. சட்டமன்றம் என்பது உண்மைகள் பேசப்படும் இடமாகவும், மக்களின் குரல் ஒலிக்கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
இன்று சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு, இனிவரும் காலங்களிலும் இதேபோல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். உண்மைக்கும், மக்கள் நலனுக்கும் ஆதரவாக ஒலிக்கும் அந்த குரலை தடுக்க முடியாது.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்* அவர்களின் அறிவுறுத்தலின்படி..
கழகப் பொதுச்செயலாளர்,
மாண்புமிகு அமைச்சர்
*திரு.என்.ஆனந்த்,*
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அவர்களின் வழிகாட்டுதலின்படி,
*மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு.C.ஜோசப்விஜய்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு...
*கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்* தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக எஸ்.எம். குழந்தைகள் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் *இலவச மருத்துவ முகாம் (குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமருத்துவம்)* நடைபெற உள்ளது.! அதனை தொடர்ந்து *இரத்த தான முகாமும்* நமது பாசமிகு அண்ணன் *திரு.விஜய் R.பரணிபாலாஜி BA.LLB.,* கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் & மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் அவர்களின் *தலைமையில்* நடைபெற உள்ளது.!
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.!
*நாள்: 21-06-2026*
ஞாயிற்றுக்கிழமை
*நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை*
*இடம்: ராதா திருமண மண்டபம், (போஸ்ட் ஆபிஸ் அருகில்) திருக்கோவிலூர்*
இவண்:-
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் தலைமை, தமிழக வெற்றிக் கழகம்