05.10.2026 அன்று கோவை மாவட்டம், வால்பாறை அருகே காடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் தெப்பக்குளமேடு குடியிருப்பில், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகள் தொடர்பாக கிராம மக்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
08.10.26 அன்று திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பங்கேற்��ு, 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி, 5 பொருட்கள் கொண்ட சீர்வரிசையினை வழங்கினார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் 12.10.26 அன்று நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் சமூக நீதி அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக சமூக நீதித்துறையின் சார்பில் இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக (Public Charitable Trust) - "சமூக நீதி அறக்கட்டளை" (Social Justice Foundation) என்ற பெயரில் துவக்கப்படும் என மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
@VanniTamizhVCK@tahdco
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சமூகநீதி கல்லூரி மற்றும் முதுகலை மாணவியர் விடுதிகளில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 07.10.26 அன்று ஆய்வு மேற்கொண்டு, வி���ுதி மாணவிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
சமூகநீதி முன்னெடுப்புகளின் துவக்க விழா – 2026
சென்னை சமூகப்பணி கல்லூரியின் (MSSW) சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் (CSJE) சார்பில் 14.10.26 அன்று நடைபெற்ற "சமூகநீதி முன்னெடுப்புகளின் துவக்க விழா – 2026" நிகழ்ச்சியில், சமத்துவ மையத்தின் முக்கிய முன்னெடுப்புகளை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தொடங்கி வைத்தார்
1. இணையவ���ிக் கற்றல் இணையதளம் (OLC - Online Learning Courses) வெளியீடு
- தோடர் மொழி, சமூகம் ம��்றும் உலக கண்ணோட்டம்
- பழங்குடியின மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மொழியை ஆவணப்படுத்துதல் ஆகிய இரண்டு சான்றிதழ் படிப்புகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்
2. சமூகநீதி தொழில்முனைவோர் மையம் (Social Justice Entrepreneur Hub) தொடக்கம்
பட்டியலின தொழில்முனைவோரின் திறன்களை மேம்படுத்துவதற்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறை மற்றும் தொழில்முனைவோர் மையத்தை மாண்புமிகு அமைச்சர் அவ���்கள் தொடங்கி வைத்தார்
3. சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற்ற கிராமங்கள் – ஆவணப்படம் வெளியீடு
தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற்ற கிராமங்கள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியிட்டார்
இந்நிகழ்வில் பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை, சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநர் திரு. ச. சாமுவேல் ஆசிர் ராஜ் மற்றும் சமூகநீதி & சமத்துவ மையத்தின் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
@VanniTamizhVCK
@srkias2012
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
@TNDIPRNEWS
#VanniArasu
#SocialJustice
#TamilNadu
05.10.26 அன்று கோவை மாவட்டம் - ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ள காடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் எருமைப்பாறை குடியிருப்பில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அக்குடியிருப்பில் வாழும் மக்களை சந்தித��து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
என் பிரியத்துக்குரிய பெரியவர் திருமிகு. பராசரன் அவர்கட்கு இன்று 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதை���ளில் ஒருவர். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டர்னி ஜெனரல்.
எனக்கு நீங்கள் உறவுக்காரர் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள்.
மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப்போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்கறிஞருக்குப் பின்னால் இருக்கும் அ��்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன்.
100-ஆவது பிறந்தநாளுக்கு அன்பான நல்வாழ்த்துகள்.
அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள்.
உங்கள்
அன்பு
கமல்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு சீருடன் ரூ.1000 பரிசு.. தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தருவதாக அமைச்சர் வன்னியரசு பேச்சு..!
VCK Minister | VCK
ஏய் நான் என்ன சொல்ற..? இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வெச்சிக்காத..? யோவ் ஒரு நிமிஷம் இருயா..?
செய்தியாளர் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கடும் வாக்குவாதம்.. சலசலப்பான பிரஸ் கிளப்..
#PrakashRaj | #SIR | #PolimerNews