திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது!
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம். இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி,கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம். இந்நிலைக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய தருணமிது.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதம்.
அதை எவ்வகையிலும் நாம் சிதைத்துவிடக் கூடாது.நமக்குள் இருக்கிற வேறுபாடுகளைக் களைந்தெரிந்து, சகோதரத்துவத்தைப் பேண வேண்டும்.அதைவிடுத்து வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும்.
இந்த வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும். 'நகைச்சுவை' பதிவுகள் தொடங்கி கடுமையான சொல்லாடல்கள் வரை சமூக வலைதளங்களிலும் நம் அன்றாடப் பேச்சுகளிலும் இந்த மனநிலை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது. இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள தனிநபர் சுதந்திரத்தையும் உரிமையையும் சக மனிதர்கள் ஏற்க வேண்டும், அதுவே அறமும் கூட.
மேலும், பொதுவெளியில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ஓர் அப்பாவி இளைஞனைக் கொடூரமான ஆயுதங்களால் தாக்குவதை வீடியோ எடுத்து அதைத் தற்பெருமையாகக் கருதி, சமூக வலைதளத்தில் பகிர்வோர்களைக் காவல்துறை இனங்கண்டு கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.
மேலும், சமூக வலைதள மோகத்தில் சிறார்களும் இளைஞர்களும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும்,
வன்முறை தூண்டும் வகையிலும் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்.
போதை, ஆயுதக் கலாச்சாரம், சமூகப் பிரிவினை எனத் தனித்தனி காரணிகளைக் கொண்டு இப்பிரச்சினைகளை அணுகக் கூடாது. இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ எந்தவகையிலும் நாம் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்! @CMOTamilnadu@Neelam_Culture
தேர்தல்களை அணுகுவதிலும், கருத்துருவாக்கத்தை சரிப்படுத்துவதிலும், வெற்றியை பெற்றே தீருவதிலும், சாம பேத அத்தனை தண்டங்களையும் பின்பற்றும் வழிமுறைகளிலும், உலக அரசியல் கட்சிகளுக்கே பாடம் நடத்தும் பெரும் வல்லமையைப் பெற்றிருக்கிறது பாஜக.
தேர்தல் குறிப்புகளுக்காக பீகார் மாநில ஊடகவியலாளர்களிடம் பேசியபோது அவர்கள் தரும் தகவல்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த ஆச்சரியங்களை தருகின்றன.
எத்தனை சமாதானங்களை சொன்னாலும், பாஜகவை தேர்தலில் எதிர்கொள்ள அவர்களைப் போல உழைத்தாக வேண்டும். அவர்களது உழைப்பை குறை சொல்வதும் நிராகரிப்பதும் சரியான செயல் இல்லை.
இந்தியா கூட்டணி இந்தியாவை வெல்ல இன்னும் வெகுதூரம் பயணித்தாக வேண்டும்.
விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ்
ஆகிய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை மற்றும் மரியாதையை தமிழ்நாடு அரசு தங்க மகள் கார்த்திகாவுக்கும் வழங்க வேண்டும்.
சென்னையில் பல்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்த பூர்வக்குடி மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி அவர்களை குடியேற்றுவதற்காகாக 2000 ஆம் ஆண்டு ""கண்ணகி நகர்" உருவாக்கப்பட்டது..
ஏறத்தாழ 20000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள், தினக்கூலிகள், இவர்களாலே சென்னை இயங்குகின்றது
ஆனால் இந்த பகுதிக்கு சுத்தமான குடிநீர்,சுகாதாரம் என எந்த அடிப்படை வசதியும் சரியாக கிடைக்காது.....
சென்னையில எந்த ஏரியானு கேட்டால் கண்ணகி நகர் என தாங்கள் வசிக்கும் ஏரியா பெயரை கூட சிலர் சொல்ல மாட்டார்கள், எங்கே சொன்னால் நம்மை வேறு விதமாக பரப்பார்களோ,பழக மாட்டார்களே என்ற எண்ணத்தில் மறைப்பார்கள்...
உழைக்கும் மக்களான கண்ணகி நகர் மக்களை தீண்டத்தகாதவர்களாகவும்,
குற்றச்செயல் புரிபவர்களாகவும் பார்த்து தான் மக்களும்,அதிகார வர்க்கமும் இன்று வரை புறக்கணித்து கொண்டிருக்கின்றது..
நீங்கள் எல்லாம் நினைப்பது போல மோசமான ஊர் கிடையாது, கண்ணகி நகருக்கு என்று வேறொரு பக்கம் இருக்கின்றது
கண்ணகி நகர் என்ற அடையாளத்தோடே நாங்கள் அதை இந்த உலகிற்கு காட்டுவோம் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே ""UNIVERSAL KANNAGI NAGAR WOMEN'S KABADDI CLUB "".
பெண்கள் கபாடி அணியை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று அதிலும் கண்ணகி நகர் மாதிரி பகுதி என்றால் .
அங்கே பெரும்பாலும் அப்பா அம்மா இருவரும் தினக்கூலிகள் இந்த நிலையில் பிள்ளைகளை விளையாட விடுவது,பள்ளியில் பெண்கள் அணிக்கு அனுமதி வாங்குவது,விளையாட மைதானம் என்று ஆயிரம் சிரமங்கள்..😢
பல்வேறு தடைகளை தாண்டி தொடங்கப்பட்ட கண்ணகி நகர் அணி ""கண்ணகி போல"" கபாடி களத்தில் வீரமிகு பெண்களாக எதிர் அணிகளுக்கு பயத்தை கொடுக்கும் அணியாக வலம் வருகின்றனர்..
இன்று கண்ணகி நகர் அணி வீரர்கள் இல்லாமல் SGFI (School games federation of India) தமிழ்நாடு அணி கிடையாது, university,ஜூனியர்,சீனியர்,தமிழ்நாடு அணி கிடையாது என்ற அளவிற்கு பெண்கள் கபாடியில்ல் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து விட்டார்கள்...
இப்படி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் கண்ணகி நகர் அணியை சார்ந்த 17வயது வீராங்கனை தான் கார்த்திகா , வயது தான் குறைவு ஆனால் தேசிய சீனியர் போட்டிக்கான தமிழக அணியில் கூட இடம் பெற்றிப்பார்..
பலம் வாய்ந்த ஹரியானா,Indian railways, என அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்வார்..
கார்த்திகா பஹ்ரைன் நாட்டில் நடைப்பெற்ற ஆசிய இளையோர் போட்டிக்கான இந்திய பெண்கள் கபாடி அணியின் துணை கேப்டனாக இடம் பெற்று
இந்த 2025 ஆசிய இளையோர் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை பெற்று தந்திருக்கின்றார்....
தூய்மை பணியாளர் Sweeper ன் மகளான கார்த்திகா தனது அபாரமான raiding skils மூலம் இந்த தொடரில் அனைத்து அணிகளையும் sweep செய்திருக்கின்றார்🔥
கார்த்திகா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது முதல் இன்று தங்கம் வென்றது வரை
கபாடி பற்றி எழுதாதவர்கள் கூட பெருமையாக தங்க மகள் கார்த்திகாவை பற்றி எழுதுவதை பார்க்க முடிகின்றது,
அந்த அளவுக்கு கண்ணகி நகர் கார்த்திகாவின் விளையாட்டு அனைவராலும் ரசிக்கப்படுகின்றது 🥰.
கபாடியை ஒரு கருவியாக எடுத்து இந்த சமூகம் தங்களை பார்த்த தவறான பார்வையை எல்லாம் உடைத்து வென்று இருக்கின்றது கண்ணகி நகர் கபடி அணி....🔥
அணியின் பயிற்சியாளர்,
வீராங்கனைகளின் பெற்றோர்,கண்ணகி நகரின் அடையாளத்தை இவர்களுடன் சேர்ந்து மாற்ற முயலும் NGO க்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤️
எல்லா தடைக் கற்களையும் உடைத்தெறிந்து கபாடி உலகில் வெற்றி கொடி நாட்டிக் கொண்டிருக்கும் 17 வயதே நிரம்பிய தங்க மகள் கார்த்திகா
விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்கவும்
DYAN CHAND,ARJUNA AWARD,DHRONACHARYA AWARD போன்ற விருதுகளை பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
*பதிவு*
கபாடி ஆர்வலர்
திரு .பசுபதி
இராமநாதபுரம் மாவட்டம்
தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா?
- சீமான், நாம் தமிழர் கட்சி
@mkstalin@arivalayam@Seeman4TN@NaamTamilarOrg
கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
"Many residents insist that the disaster was neither accidental nor unforeseen and that it was the outcome of poor planning and official neglect"
அதாவது "கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.
'இந்த செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால் இந்த துயரச் சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்பது தானே'.
மேலும் இந்தச் செய்தியில் கூறுவது 'கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கே பலர் வந்துவிட்டனர்.
மதியம் 3:00 மணிக்கு யாரும் சாலையில் வாகனங்களில் போக முடியவில்லை. மாலை அப்பகுதியில் திரும்ப கூட இடமில்லை' என அப்பகுதியில் வசிக்கும் திரு. சீதாராம் என்பவர் தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லில்லி' என்பவர் கூறும் போது, விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின்தடை ஏற்பட்டதாகவும், மைக் வேலை செய்யவில்லை என்றும், கூட்டம் அமைதியிழந்தது என்றும், அந்த நெரிசலில் இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்து விட்டதாகவும் கூறுகிறார். லில்லி என்பவர் கூறியதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது. அப்பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர் மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக கூறுகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. ஜெனரேட்டராலோ, மின்துறை மூலமோ, மின்தடை ஏற்பட்டாலும், கூட்டம் பதட்டம் அடையத்தானே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா? இதில் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இது பற்றி எந்த விபரமும் இல்லை. இது பற்றியெல்லாம் எந்த பாதுகாப்பு திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழத்தானே செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட இடம் 10,000 பேர் மட்டுமே கூட வசதியுள்ள நிலையில், 25,000 மக்கள் கூடுவதை காவல்துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் அதிக அளவு கூடுவதை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. (1)
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...
என்ன அவதூறு பரவியது?
-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?
-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?
அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் @mkstalin அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!
இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய,
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திரு. @mkstalin அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!
@AIADMKOfficial
#KarurTragedy
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
Dr. Shalini’s Fb post!
விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.
In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்
இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்.
💔
Spoke with US @SecRubio this evening.
Deeply appreciate US commitment to work with India in the fight against terrorism.
Underlined India’s targeted and measured response to cross-border terrorism. Will firmly counter any attempts at escalation.
🇮🇳 🇺🇸
வெள்ளியங்கிரி-எல்லாருக்குமானது அல்ல...
சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று இருந்தோம்..
வெள்ளியங்கிரிக்கு என்னுடைய முதல் பயணம் அது..
ஏழு மலைகள் எனச் சொன்னதும் மலைப்பாய் இருந்தது உள்ளபடியே பெரிய சவாலாகத் தான் அமைந்ததது..
அதுவும் மலை ஏறத்தொடங்கியது மதியம் என்பதால் வெய்யிலின் தாக்கத்தில் உடல்
De-Hydration ஆக மெதுவாகவே நடக்கத்தொடங்கினோம்.. நான் முதல் முறை என்பதால் பகலில் ஏற நினைத்தோம்..ஆனால் இரவு தான் சரியான நேரம்..
வழி நெடுக நிறைய வாலிப பசங்க மற்றும் 35-45 வயது மதிக்கத்தக்க ஆண்கள் எனப் பலரும் மலை ஏறினார்கள். வழி நெடுக காதில் கேட்ட அல்லது பார்த்த காட்சி :
டேய் இன்ஸ்டாகிராமில் ஈசி என சொன்னாங்க? Youtube-ல இப்படி காட்டலயே டா.. என பலர் புலம்பியதை தான் பார்க்கவும்,கேட்கவும் முடிந்தது..
இதை ஏன் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால் இன்று Influencer Digital Market பெரிதாக இருக்கிறது,2025-இல் 2,500 கோடியாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு..
பலர் இது போல வீடியோக்களை நம்பி ஈசி என நினைத்து வந்துவிடுகிறார்கள்..
இப்படி Digital influencers தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் வீடியோக்களில் சிலர் முழுமையாக தகவல்களை சொல்லாமல் விடுவதனால் பின்விளைவுகள் பலருக்கு மோசமானதாக அமைந்துவிடுகிறது..
பலருக்கு நாட்பட்ட சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம்,இதயப்பிரச்சனை என நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது பலருக்கு அங்கு வந்தே தெரிகிறது..
அவர்கள் மற்றவர்கள் நடக்கிறார்கள் நாமும் நடப்போம் என சரியான ஓய்வு இல்லாமல் நடக்க முயற்சி செய்யும் பொழுது..அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகிறது...
மருத்துவர்கள் ஆலோசனை ஏதும் இன்றி இது போல மலை ஏற வருகிறார்கள்-காரணம் தவறாக வழிநடத்தப்படும் சில வீடியோஸ்..
இது வரை மலை ஏறி நிறைய நபர்கள் மூச்சுவிடச் சிரமப்பட்டு மலையில் இறந்து இருக்கிறார்கள்.நாங்கள் போன சில நாட்களுக்கு முன்பு கூட அது நடந்து இருக்கிறது..
அது மட்டும் அல்லாது மேலே தங்க எந்த ஒரு கூடாராமும் கிடையாது.. நீங்கள் மேலே சென்றால் அப்படியே அதே போல கீழே இறங்கி ஆக வேண்டும்..
முதல் முறை பலருக்கும் நிச்சயம் 6-8மணி நேரம் வரை கூட ஆகலாம் மேல ஏற! நீங்கள் ஏறியபடியே கீழே இறங்க வேண்டும்..
அங்கு தான் சிக்கல்.மேலே செல்லும் போது இருக்கும் ஜோஸ் நிச்சயம் கீழே இறங்கும் பொழுது இருக்காது.இங்கே தான் உங்கள் உடலை வருத்தி இறங்கும் பொழுது உங்கள் உடலில் பிரச்சனை வருகிறது..
ஓய்வு எடுத்து துாங்கி எழுந்து வர ஒதுங்கு இடம் எல்லாம் கிடையாது..
பலர் கையோடு பழைய Banners,Bedsheet எடுத்து செல்லுவதால் கிடைக்கும் இடத்தில் துாங்கி எழுந்துவிடுகிறார்கள்..
6,7 மலையில் உள்ள Climate நீங்கள் கணிக்கவே முடியாது. முதல் ஐந்து மலைகள் வெய்யில் வாட்டி வதைக்கும்,அடுத்து ஆறு & ஏழுவாது மலை குளிர்வாட்டி வதைக்கும்.. அங்கு சரியான குளிர்தாங்க கூடிய உடை இல்லாமல் சென்றால் கதை அவ்வளவு தான்..
முக்கியமாக நான் குறிப்பிட நினைத்தது மற்ற கோவில் தலங்கள் போல வெள்ளியங்கிரி அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவரகள் செல்ல வேண்டிய இடம் அது.அல்லது மருத்துவரை ஒரு முறை ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்..
அவசர உதவி என்றால் கூட மேலே இருந்து கீழே போனில் தொடர்புகொண்டு உதவி கேட்டால் கீழே இருந்து மேல டோலி அனுப்புவார்கள்.இது தான் நடைமுறை..
ஆர்வமிகுதியில் முயற்சி செய்யக்கூடாத இடம் வெள்ளியங்கிரி..
சற்று உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் Un-Fit'ம் இல்லை. Slim ஆக இருக்கும் அனைவரும் Fit-ம் இல்லை..
Fitness is beyond Body Structures!