தமிழை இதயத்தில் நேசிப்போம்!
தமிழரிடம் பிறமொழிதவிர்த்து தீந்தமிழில் பேசமுனைவோம்!
தமிழில் பேசுவதே நமக்குபெருமை! பிறமொழித்தவிர்த்து பேசுதல் செந்தமிழர் நமது கடமை
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இங்கு இறந்தவர்கள் என்ன எல்லை பாதுகாப்பு வீரர்களா.?
நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளா?
நாட்டுக்காக போரிட்ட இராணுவ வீரர்களா?
அல்லது உலக அளவில் இந்தியாவுக்காக ஏதாவது விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு கோப்பை வென்று கொடுத்தார்களா..??
அல்லது அரசுப்பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த ஊழியர்களா?
எதற்காக இவர்களுக்கு அரசுப்பணி?
தமிழ்நாடு என்ன விஜய் அவர்களின் தனிப்பட்ட சொத்தா?
காடு, கரம்பை விற்றுபடித்துவிட்டு வீதியில் எத்தனையோ பேர், பல அரசுத்தேர்வுகளை எழுதிவிட்டு பணிக்காக காத்திருக்கும் இளைய தலைமுறை
இப்படி எத்தனை எத்தனையோ பேர் கனவுகளோடு காத்திருக்கும் போது, ஒரு நடிகரை காண திமிரெடுத்து வந்து பலியான முட்டாள்களுக்கு அரசு பதவி ஒரு கேடா.??
#ஊரான் #வீட்டு #நெய்யை #எடுத்து
#ஸ்வீட் #செய்யக்கூடாது முதல்வரே..!! போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.😡
-பதிவு.
#karur #stampede #death #money #govtjobs
விவரம் தெரிஞ்சதிலிருந்து குளிக்க குடிக்க ஆடு மாடு எல்லாத்தோட தேவையையும் பூர்த்தி செய்த நீர் கால் நூற்றாண்டுல மாசுபடுத்தி ஒன்னும் இல்லாம ஆக்குறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா??
இதனால ஆடு மாடுகள் மற்றும் பாதிக்கப்பட போறது கிடையாது பணம் இல்லாத ஏழை மனிதர்களும்தான்...
வீட்டுக்கொரு காருன்னு அரசியல்
பேசுறவனுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் நீரு ஆறு பற்றி பேசுறவனுக்கு கிடையாது...
நல்லா இருங்க மக்களே 🤗
தவெக என்கிற கட்சி தொடங்கி 55 பேரை பலி போட்டுட்டானுங்க 😤
கரூர்ல 41 மரணத்திற்கு முதன்மை காரணம் விஜய் தான் 💯
நீ வழக்கு போடு இல்ல மைர போடு 💥
~இடும்பாவனம் கார்த்தீ 🔥
எதற்காக அரசு வேலை?
சுதந்திர போராட்டத்தில் பங்கேடுத்தார்களா?
மக்கள் நலனுக்காக போராடி செத்தார்களா? முந்தைய அரசு சார்பிலும், தவெக கட்சியின் சார்பிலும் துயர்துடைப்புத் தொகை கொடுத்துவிட்டப் பிறகு, எதற்கு அரசு வேலை? என் மகன் செத்தாலும் பரவாயில்லை; விஜய்யைப் பார்த்ததே போதும் எனக் கூறியதற்கா? இல்லை! இடைத்தேர்தலில் வாக்குப்பிச்சை எடுக்கவா?
பாக்கியராசன்.சே
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
@PackiaSe
உகாண்டாவில், லீராவிற்கு அருகிலுள்ள அலெப்டாங் பகுதியில் ஒரு நீர்நிலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்து, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யச் சென்றோம்.
அப்போது அங்குள்ள மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களின் அன்பும், உற்சாகமும், நம்பிக்கையும் இந்தப் பணிக்கான எங்களின் பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
மக்களின் ஒத்துழைப்புடன், Alebtong Village-ல் நீர்நிலையை சீரமைக்கும் பணிகளை மிக விரைவில் தொடங்க உள்ளோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
நீர் இருக்கும் இடத்தில் வாழ்வு வளரும்💚🌍
#Uganda #MegaFoundations #WaterCrisis #WaterConservation #SaveWater
உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடம் இது தான்.
ஒரு சிறிய ஊற்றாக தொடங்கி விக்டோரியா ஏரியின் நீருடன் இந்தப் பயணம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளின் வாழ்வாதாரமாக மாறுகிறது💫
#NileRiver#SourceOfTheNile#Jinja#Uganda#LakeVictoria#Nature#Africa
மிகவும் சிறப்பு, விடக்கூடாது😡
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது💥✅
என்ன டேஷ்க்கு அரசு வேலை?
சுதந்திர போராட்டத்தில் பங்கேடுத்தார்களா? மக்கள் நலனுக்காக போராடி செத்தார்களா?
முந்தைய அரசு சார்பிலும், தவெக கட்சியின் சார்பிலும் துயர்துடைப்புத் தொகை கொடுத்துவிட்டப் பிறகு, எதற்கு அரசு வேலை?
என் மகன் செத்தாலும் பரவாயில்லை; விஜய்யைப் பார்த்ததே போதும் எனக் கூறியதற்கா? இல்லை! இடைத்தேர்தலில் வாக்குப்பிச்சை எடுக்கவா?
#கேப்போம்ல
திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற தவெக அரசு எதற்கு முயற்சிக்கிறது?
விஜய் செய்யும் பச்சை அயோக்கியத்தனம்!